இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள தேஸ்நோக் என்ற இடத்தில் கர்னி மாதா கோவில் உள்ளது.
இங்குள்ள எலிகளின் எண்ணிக்கை காரணமாக எலி கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.
கர்னி மாதாவின் நினைவாக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
தன் வம்சாவளியில் பிறந்த எவர் இறந்தாலும் அவரை வேறு இடத்தில் பிறப்பெடுக்க வைக்கக்கூடாது என்றும் அவர்கள் எலிகளாக மறுபிறவியெடுத்து இங்கேயே என்னுடன் இருக்கவேண்டும் என்றும் எமனிடம் கர்னி மாதா வரம் கேட்டாராம்.
இப்படி பிறந்த எலிகள் தான் இந்தக் கோவிலில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சுமார் 20,000 எலிகள் இங்கே காணப்படுகின்றன.
கர்னி மாதா என்பவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் முனிவர்.
இங்குள்ள எலிகள் கடவுளின் அம்சமாகப் பார்க்கப்படுவதால், தெரியாமல் ஆலயத்தில் உள்ள எலிகளில் ஒன்றை பக்தர்கள் கொன்றுவிட்டால், தங்கத்தில் செய்யப்பட்ட எலியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.
இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.