இளையராஜா சொல்லுகிறார் தனக்குதான் அறிவு இருக்காம். மற்றவர்களுக்கு அறிவு இல்லையாம்! இது உங்களுக்கு தெரியுமா??.
ஒரு கேள்வியை கேட்டா பதில் சொல்லவேண்டும். விருப்பமில்லாவிட்டால்..அந்த கேள்விக்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்று கூறவேண்டும். அதைவிட்டு, கேள்வி கேட்பவர்களை பார்த்து உனக்கு அறிவிருக்கா? என்று கேட்பது மற்றவர்களை மட்டம் தட்டி பேசும் செயலாகும்.
அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இது தொடர்பாக இருவருக்கும் நேரில் விளக்கம் அளிக்கும் படி தனித்தனியே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் நடந்த சென்னை வெள்ள நிவாரணம் சார்ந்த பாராட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் பீப் பாடல் குறித்து அவரிடம் கருத்து கேட்டார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த இளையராஜா, செய்தியாளரிடம் கோபமாகப் பேசினார்.
அப்போது, இளையராஜா “உனக்கு அறிவு இருக்கா? அந்தப் பிரச்னைக்காகவா வந்துருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லு?” என செய்தியாளரிடம் எதிர்கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அந்த செய்தியாளர் “அறிவு இருந்ததால தான் கேக்குறேன்” என பதிலளித்தார். உடனே இளையராஜா, “அறிவு இருக்குங்குறத எந்த அறிவை வைச்சு கண்டுபிடிக்குற?” என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த செய்தியாளர், “ஒரு இசையமைப்பாளர் நீங்க. உங்க துறை சார்ந்து உங்களிடம் கேக்குறதுல என்ன தவறு இருக்கு?” எனக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுற்றியிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட இளையராஜா, “யார்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு இருக்க?” என சிரித்தவாறே கூறினார்.
இதனைத் தொடர்ந்து நிலைமை அங்கு சகஜமானது. வெள்ள பாதிப்பையும், அனைவரும் சேர்ந்து செய்யும் நிவாரணப் பணிகளையும் திசை திருப்ப சிலர் செய்த முயற்சியே சிம்பு – அனிருத் விவகாரம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட அது உண்மைதானோ என்று நினைக்க வைத்து விட்டது இளையராஜாவிடம் அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி.
அந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோ கீழே..
“பெண்ணு சமைஞ்சது எப்படி” என்ற வசனங்கள் உள்ள பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜா ஏன்கோபப்படுகிறார் எனத்தெரியவில்லை.
இந்த பாட்டு இளையராஜா இசையமைத்தது…. இந்த பாடலில் சொல்லப்படாத ஆபாச வசனங்காளா? பாடல் காடசியிலும் படுமோசமான ஆபாசம் காட்டப்படுகிறது. இதை பற்றி அந்தநேரத்தில் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இளையராஜாவை, கமலஹாசனை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
இதுவும் இளையராஜா இசையமைத்த பாடல்தான் இது படுமோசமான ஆபாச பாடல்தான். ஆனால் தமிழ் புரிந்தவர்கள்தான் இந்த பாடலில் வரும் ஆபாசவசனங்களின் அர்த்ததை புரிந்துகொள்ளமுடியும்.
உதாரணம்: “உன்வீட்டு செவ்வாழை என்கைகள் பட்டாலே குலை இரண்டும் தள்ளாதோ” என்றுவரும் ஆபாச வசனங்கள் மறைமுகமாக சொல்லப்படுகிறது. அப்ப இதெல்லாம் இளையராஜாவுக்கு தெரியாமலா இசையமைத்தார்.
இந்த பாட்டும் இளையராஜா இசையமைத்ததுதான்.