இறம்பொடை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு, மேலும் இரு பிள்ளைகள் உட்பட பெண்ணொருவரும் காயத்திற்கு உள்ளான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த 17 வயதுடைய மொஹமட் நிஸ்ராஸ் என்ற வாலிபரே மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் நேற்று (16) இறம்பொடை பகுதியில் இடம் பெற்றுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிதனர்.
மாவனெல்லையில் இருந்து வெலிமடையிலுள்ள மைய டொன்றிற்கு சென்று, வீடு திரும்புகையில், இறம்பொடை பிரதேசத்திலல் குறித்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்பு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.