மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணா மல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் வௌ்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயல கத்தில் நடைபெற்றபோது.

எனது இரு மகன்­க­ளுக்கும் எனது இரு மகன்­க­ளுக்கும என்ன தான் நடந்­தது?

அரி­யா­லையைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தயா­ரான துரை மகேஸ்­வரி சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது மூத்த மகன் தங்­கத்­துரை. 1996ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி வீட்டில் இருந்­த­போது சில நபர்கள் தலை­யாட்­டியைக் கொண்டு வந்து எனது மகனை அதன் முன்னி­லையில் நிறுத்­தி­னார்கள். அதன்­பின்னர் அவரை தம்­முடன் கூட்டிச் சென்­று­விட்­டார்கள்.

சில நாட்கள் கடந்த நிலையில் இரா­ணு­வத்­தா­லேயே அவர் பிடிக்­கப்­பட்­டுள்ளார் என்­பதை அறிந்தேன். பொலிஸ் நிலையத்­திற்கு சென்றபோது அங்கு என்னை நன்­க­றிந்த பொலிஸ் அதி­காரி ஒருவர் பிடிக்­கப்­பட்­ட­வர்­களை இள­வா­லையில் வைத்­தி­ருக்­கின்­றார்கள் எனக்­கூறி முக­வ­ரி­யொன்றைக் கொடுத்தார். சில­நாட்கள் கழித்து அந்த அதி­கா­ரியும் விபத்தில் இறந்து விட்டார்.

பின்னர் பல நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் அந்த முக­வ­ரியில் உள்ள இடத்­திற்குச் சென்றேன்.

அது ஒரு இரா­ணுவ முகாம். அவர்­க­ளிடத்தில் எனது மகன் தொடர்­பாக கேட்­ட­போது எனது மகனை தொலைவில் வைத்துக் காட்டினார்கள். அன்று 1997ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம் 28ஆம் திகதி ஒரு­வ­டத்­திற்கு பின்­னரே எனது மகனைக் கண்டேன்.

அங்­கி­ருந்து என்னை அனுப்பி விட்­டார்கள். அதன் பின்னர் அவர் பற்­றிய எது­வி­த­மான தக­வ­லையும் நான் அறி­ய­வில்லை.

மூத்­த­ம­கனின் கதை இவ்­வா­றி­ருக்­கையில், எனது இளைய மகன் துரை அஜந்தன். அவர் ஆயுள்­வேத வைத்­தி­ய­ராக கடமையாற்றிக்கொண்­டி­ருந்தார்.

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அவர் வேலைக்குச் சென்­றி­ருந்த நிலையில் மீண்டும் வீடு திரும்­பி­யி­ருக்­க­வில்லை. என்ன நடந்­தது என்­பது தெரி­யாத நிலையில் நாம் அவ­ருடைய தொழில் பார்க்கும் இடத்­திற்குச் சென்­ற­போது அவ­ரிடம் அண்ணன் தங்­கத்­துரை பற்றி விசா­ரணை செய்­ய­வேண்­டு­மெனக் கூறி சிலர் வருகை தந்­தி­ருந்­தனர்.

அவர்கள் அவரை அழைத்துச் சென்­ற­தாக அங்­கி­ருந்­த­வர்கள் கூறி­னார்கள். அதன்­பின்னர் அவர் தொடர்­பாக பல இடங்­களில் விசாரித்தபோதும் எந்­த­வி­த­மான தக­வல்­களும் கிடைக்­க­வில்லை.

தற்­போதும் உயி­ருடன் எங்­கா­வது இருப்­பார்கள் என்றே நம்­பு­கின்றேன். எனது இரண்டு பிள்­ளை­க­ளையும் பறி­கொ­டுத்து விட்டு இன்று அநா­தை­யாக இருக்­கின்றேன். தயவு செய்து அவர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்­றா­வது கூறுங்கள் என்றார்.

மாமி வீட்­டுக்குச் சென்ற மகனை இரா­ணு­வமே கொண்டு சென்­றது

கண்டி வீதி அரி­யா­லையைச் சேர்ந்த நட­ராஜா சிவக்­கொ­ழுந்து என்ற தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது மகன் நட­ராஜா ஜெய­ராஜா. 1973ஆம் ஆண்டு பிறந்த வர். தொழில்­நுட்பக் கல்­லூ­ரியில் படித்­துக்­கொண்­டி­ருந்தார்.

1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 28 ஆம் திகதி வேம்பிராயில் உள்ள அவ­ரு­டைய மாமி வீட்­டிற்கு டெக் எடுப்­ப­தற்­காக மோட்டார் சைக்­கிளில் சென்­றி­ருந்தார்.

வேம்­பி­ராயில் உள்ள அவ­ரு­டைய அண்­ணாவின் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்­டி­ருக்கும் போது வீதியால் ரோந்து சென்ற இரா­ணு­வத்­தினர் விறாந்­தையில் அமர்ந்­தி­ருந்த எனது மகனைக் கண்­டதன் பின்னர் அங்கு வரு­கை­தந்­துள்­ளனர்.

என் மகனைப் பார்த்து யார் என்று மாமி­யா­ரிடம் கேட்­டுள்­ளனர். இவர் என்­னு­டைய உற­வினர், தொழில்­நுட்பக் கல்­லூ­ரியில் கல்வி கற்றுக் கொண்­டி­ருக்­கின்றார்.

டெக் எடுப்­ப­தற்­காக வந்தார் சற்று நேரத்தில் சென்­று­வி­டுவார் என்று இரா­ணு­வத்­தி­ன­ரிடம் கூறி­யுள்ளார். எது­வாக இருந்­தாலும் அவரை விசா­ரிக்க வேண்டும் என்று கூறிய இரா­ணு­வத்­தினர் எனது மகனை வலுக்­கட்­டா­ய­மாக அழைத்துச் சென்­றுள்­ளனர்.

அவர் கல்வி கற்றுக் கொண்­டி­ருந்­தவர் அவ­ருக்கு இயக்­கங்கள் ஒன்­று­டனும் தொடர்பு இருந்­தி­ருக்­க­வில்லை. அவர் ஒரு அப்பாவியானவர்.

அவரை விசா­ர­ணைக்கு என அழைத்துச் சென்­றதன் பின்னர் அனுப்­பி­வைக்­கவே இல்லை. மகன் வீடு திரும்­பாத நிலையில் மாலை வேளை மகனை இரா­ணுவம் கொண்டு போய்­விட்­டது என்று அறியக் கூடி­ய­தாக இருந்­தது.

உட­ன­டி­யா­கவே மீசா­லைக்குச் சென்று அங்­கி­ருந்த இரா­ணுவ முகாம்கள் எல்­லா­வற்­றிற்கும் சென்றேன். எனது மகனை கண்­டீர்­களா அவரை விட்­டு­வி­டுங்கள் எனக் கேட்டோம். அவர்கள் எல்­லோரும் எங்­க­ளுக்குத் தெரி­யாது என்றே கூறி­னார்கள். அவ­ருடை மாமியார் கண்­மணி நேரில் கண்­ட­சாட்­சி­யாக இன்றும் உள்ளார்.

எனக்கு மூன்று பிள்­ளை­கள் உள்­ளனர். முத­லா­வது பிள்ளை மாற்­றுத்­தி­ற­னாளி. இரண்­டா­வது மகன் தான் காணாமல் போனவர். மூன்றாவது பெண் பிள்ளை.

உண­விற்கு வழி­யில்­லாமல் நாங்கள் கிடந்­தாலும் பற­வா­யில்லை எனது பிள்ளை எனக்கு வேண்டும். வேறு ஒன்­றுமே வேண்டாம். வேறு எத­னையும் உங்­க­ளி­டத்தில் கேட்­க­வில்லை என்றார்.

paranakaமக்ஸ்வெல் பரணகம

அண்ணன் இரத்­தி­ன­துரை  உயி­ரோடு தான் உள்ளார்

பத்­ம­நாதன் இரா­ஜ­லக் ஷ்மி, தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் கலை பண்­பாட்­டுக்­க­ழ­கத்தின் தலை­வ­ராக விருந்த புதுவை இரத்தின­து­ரையின் அக்கா சாட்­சி­ய­ம­ளிக்­கையில், 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி எனது தம்­பி­யான இரத்­தி­ன­துரை அவ­ரு­டைய மனைவி மற்றும் இரு மகன்­மா­ருடன் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்தார்.

அதன் பின்னர் படை­யினர் பாரிய பெயர் பட்­டியல் ஒன்றைக் கொண்டு வந்­தார்கள். அதில் அவ­ரு­டைய மகன்மார் மற்றும் மனை­வியின் பெயரை வைத்து நீண்ட ஆராய்­வொன்றைச் செய்­தார்கள். அதனைத் தொடர்ந்து அவர்­க­ளுக்கு விடு­த­லை­ய­ளித்­து­விட்டு என் தம்­பியை அழைத்துச் சென்று விட்­டனர்.

அவர் ஒரு கவி­ஞ­னா­கவே புலிகள் இயக்­கத்தில் அங்கம் வகித்தார். அவரைக் கண்­டு­பி­டித்துத் தர­வேண்டும். அவர் படை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு காணாமல் போனதன் பின்னர் அவர் உயி­ருடன் இருப்­ப­தாக பிர­பல சிங்­க­ளப்­பத்­தி­ரி­கை­யான திவ­யின செய்­தி­யொன்றைப் பிர­சு­ரித்­தி­ருந்­தது. எனவே அவரை மீட்டுக் கொடுக்­கப்­பட வேண்டும். அவர் உயி­ருடன் இருக்­கின்றார் என்ற நம்­பிக்கை எனக்­குள்­ளது என்றார்.

கொழும்­புக்கு வந்த மகன் வீட்­டுக்கு வர­வே­யில்லை

சாவ­கச்­சேரி மட்­டுவில் தெற்கைச் சேர்ந்த காசிப்­பிள்ளை தங்­கம்மா என்­ப-வர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது மகன் ஆரம்­ப­கா­லத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­புடன் இணைந்து செயற்­பட்­டி­ருந்தார்.

அதன்­பின்னர் ஏற்­பட்ட நிலை­மை­களால் வெளிநாட்­டுக்குச் சென்­றி­ருந்தார். அவர் மீண்டும் சமா­தான காலப்­ப­கு­தியில் கொழும்­புக்கு வருகை­தந்­தி­ருந்தார்.

வீட்­டுக்கு வரு­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார். எனினும் அவர் திடீ­ரென கொழும்­பி­லேயே காணாமல் போயி­ருந்தார். நாங்கள் பல­ரி­டத்தில் விசா­ரணை செய்தோம்.

எனினும் எந்த தக­வல்­களும் கிடைக்­க­வில்லை. பின்னர் ஒருநாள் எமது பிர­தே­சத்தைச் சேர்ந்த தருமன் என்­பவர் எனது மகனை கிளிநொச்­சி­யி­லுள்ள விடு­த­லைப்­பு­லி­களின் முகாமில் கண்­ட­தாக கூறினார்.

நான் அங்கு சென்று எனது மகனை விட்டு விடுங்கள் எனக்­கோ­ரினேன். முதலில் அவரைத் தெரி­யாது என்றே கூறி­னார்கள். பின்னர் அவரை விசா­ரணை செய்­து­விட்டு விடு­விப்­ப­தாக கூறி­னார்கள்.

அதன் பின்னர் அவரை விடவே இல்லை. யுத்­தமும் தொடங்­கி­விட்­டது. இன்று வரையில் எனது மக­னுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யா­தி­ருக்­கின்­றது என்றார்.

கொலை­செய்­யப்­ப­டும்­போது ஐ.நா.வும் பார்த்­துக்­கொண்டு தான் இருந்­துள்­ளது

யாழ்.கச்­சே­ரி­நல்லூர் வீதியைச் சேர்ந்த சோதி­ராசா சாந்­த­கு­மாரி சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

நாங்கள் யாழ்ப்­பாணம் கச்­சேரி வீதியில் நீண்ட கால­மாக வசித்து வரு­கின்றோம். எனக்கு மூன்று ஆண் பிள்­ளை­களும் ஒரு மக­ளு­மாக நான்கு பிள்­ளைகள்.

2007ஆம் ஆண்டு ஜன­வ­ரி­மாதம் ஆலயத் திரு­விழா நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அச்­ச­ம­யத்தில் எனது சசோ­தரி மற்றும் சகோ­தரன் ஆகி­யோரின் பிள்­ளைகள் எமது வீட்­டுக்கு வருகை தந்­து தங்­கி­யி­ருந்­தனர்.

எனது இரண்­டா­வது பிள்­ளை­யான சோதி­ராசா மோகானந்த் (வயது 22) யாழ். மானிப்பாய் வீதியில் வசித்து வந்த எனது அக்­காவின் புதல்வன் வசந்­த­குமார் சிவ­ச­தீஸ்­குமார் (வயது 32) வவு­னி­யாவில் வசித்து வந்த எனது அண்­ணனின் பிள்­ளை­யான திர­வி­ய­நாதன் திரவிய­வேந்தன் (வயது 21) ஆகிய மூன்று பேரும் ஒன்­றாக உறங்­கிக்­கொண்­டி­ருந்­தனர்.

நடுச்­சா­ம­மி­ருக்கும் திடீ­ரென எமது வீட்­டுக்குள் வாக­னங்கள் சில வருகை தந்­தன. ஆயு­தங்­க­ளுடன் இரா­ணு­வத்­தினர் வேக­மாக வீட்டுக்குள் நுழைந்­தனர். விட்­டுக்குள் வந்­த­வர்கள் எங்­களை அச்­சு­றுத்­தி­விட்டு அவர்­களை நித்­தி­ரைப்­பா­யி­லி­ருந்து அழைத்துச் சென்றனர்.

இதன் போது பிள்­ளை­களை விடுங்கோ கொண்டு செல்ல வேண்டாம் என்று இரா­ணு­வத்­திடம் மன்­றா­டினோம். நாங்கள் கத்­திக்­க­த­றி­னோம் ஆனால் அவர்கள் எங்­களை தள்­ளி­விட்­டு­விட்டு பிள்­ளை­களைப் பிடித்து இழுத்­துக்­கொண்டு சென்­றனர்.

நாங்கள் கூக்­கு­ர­லிட்­டது அயல் முழு­வதும் கேட்­டது. ஆனால் யாருமே வர­வில்லை. அன்­றைய நிலையில் யாரும் வரவும் முடி­யாது. அவ்­வாறு வந்தால் அவர்­க­ளுக்கு என்ன நடக்­கு­மென்று எல்­லோ­ருக்­குமே தெரியும். இவ்­வா­றான நிலையில் நாம் எமது பிள்­ளை­களைத்தேடி இரா­ணுவ முகாம்­க­ளுக்குச் சென்றோம்.

முத­லா­வ­தாக அரி­யா­லை­யி­லுள்ள இரா­ணுவ முகா­மிற்குச் சென்றோம். தாங்கள் அப்­படி யாரையும் பிடிக்­க­வில்லை என்றே எமக்குக் கூறி­னார்கள். இரா­ணு­வத்­தி­னரே பிடித்துச் சென்­றனர் அவர்­களை எமக்குத் தெரியும் எனக் கூறினோம்.

அவ்­வா­றாயின் இங்கு நிறைய முகாம்கள் இருக்­கின்­றன. ஆகவே நீங்கள் நகரில் இருக்­கின்ற பிர­தான முகா­மிற்குச் சென்று பாருங்கள் எனக் கூறி­னார்கள் அதற்­க­மை­வாக இரா­ணு­வத்தின் பிர­தான தலை­மை­யக­மாக அன்று காணப்­பட்ட 512ஆவது படைப்­பி­ரி­வுக்குச் சென்றோம். நாங்கள் யாரையும் பிடிக்­க­வில்லை.

நீங்கள் ஊரெழு அல்­லது அச்­செழு முகா­மிற்குச் சென்று பாருங்கள் என்­றனர். ஊரெழு முகாமில் எமது பிள்­ளையைக் கண்­ட­தா­கவும் அங்கேயே தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சிலர் எம்­மி­டத்தில் தெரி­வித்­தனர்.

ஊரெழு முகா­மிற்குச் சென்றோம். இரா­ணு­வத்­தி­ன­ரிடம் நாம் கேட்ட போது அப்­படி யாரும் இல்லை நீங்கள் அச்­செ­ழு­விற்குச் சென்று பாருங்கள் என்­றனர். நாங்கள் அச்­செ­ழு­வி­லுள்ள முகா­மிற்கும் சென்றோம். அங்கு உங்கள் பிள்­ளை­களை புலிகள் தான் பிடித்­தி­ருப்­பார்கள் அவர்­க­ளிடம் கேளுங்கள் அவர்கள் கொண்டு சென்­றி­ருப்­பார்­க­ளென இரா­ணு­வத்­தினர் கூறி­னார்கள்.

அக்­கா­லத்தில் புலிகள் இங்கு இல்லை. யாழ்ப்­பாணம் முழு­வதும் இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டி­லேயே இருந்­தது. இவ்­வாறு முகாம் முகா­மாக தேடி அலைந்­ததன் பின்னர் பொலி­ஸா­ரி­டத்தில் முறை­யிட்டோம். மனித உரிமை ஆணைக்­குழு இலங்கை செஞ்­சி­லுவைச் சங்கம் ஆகி­ய­வற்­றிடம் முறை­யிட்டோம்.

பிள்­ளை­களைத் தொலைத்­து­விட்ட ஏக்­கத்­துடன் நானும் எனது குடும்­பமும் என்­னு­டைய அண்ணண் மற்றும் அக்­காவின் குடும்­பங்­களும் கண்­ணீ­ருடன் அலைந்து திரிந்தோம்.

அவ்­வா­றி­ருக்­கையில், 2007 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் என்­னு­டைய முத்த மகனும் கடைசி மகனும் வீட்டில் சாப்­பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதன்­போது நண்­பர்­க­ளி­டத்­தி­லி­ருந்து தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தது. அத­னை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் வீட்­டி­லி­ருந்து வெளியே சென்­றனர். பின்னர் அவர்கள் வீட்­டுக்கு வர­வே­யில்லை.

நாம் அவர்­களை தேடிச் சென்­ற­போது யாழ். அம்மன் வீதியால் செல்­வ­தற்கு தடை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த வீதியில் தான் ஐக்­கிய நாடுகள் அலு­வ­லகம் இருந்­தது. வீதியின் இரு பக்­கத்­தையும் மறித்து வைத்து அங்கு யாரும் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

கார­ணத்தைக் கேட்டோம். பட்­டப்­ப­கலில் இரு இளை­ஞர்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது. அவர்கள் வேறு யாரும் அல்ல என்னுடைய பிள்­ளைகள்.. (கண்­ணீ­ருடன் கத­றி­ய­ழுதார்) அவர்­களை அவர்­க­ளு­டைய நண்­பர்கள் அழைக்­க­வில்லை. யாரோ அழைத்திருக்கின்றார்கள்.

இந்த வீதிக்கு வருமாறு கூறியிருக்கின்றார்கள். அவர்கள் அங்கு சென்றபோது குறித்த வீதியால் செல்வதற்கு ஏனையவருக்கு அனுமதியை மறுத்துவிட்டு என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நிச்சயமாக இராணுவத்தினரே இதனைச் செய்துள்ளார்கள். இது ஐ.நா. அலு-வலகத்திற்கு அருகாமையிலேயே நடைபெற்று-ள்ளதால் அந்த அதிகாரிகளும் நேரடியாகவே பார்த்துக்கொண்டி-ருந்துள்ள-னர் என்றே கருதுகின்றேன்.

என்னுடைய மூன்று ஆண்பிள்ளைகளில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர். ஒருவரை பிடித்துச் சென்றுள்ளனர். அந்த மகனையே எட்டுவருடங்களாக தேடி அலைந்துகொண்டிருக்கின்றேன். என்னோடு எனது அண்ணன் மற்றும் அக்கா ஆகியோரும் அவர்களின் பிள்ளைகளையும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

எமது கண்முன்ணே கொண்டு சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் மீட்டுத் தாருங்கள் எமது இறுதி மூச்சுவரை உங்களிடம் விடுக்கின்ற கோரிக்கை இதுவாகுமென சோதிராசா சாந்தகுமாரியும் அவரது அக்காவான கந்தசாமி வசந்தகுமாரியும் இணைந்து கண்ணீருடன் கைகூப்பிக்கோரிக்கை விடுத்தனர்.

தொகுப்பு : ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்

Share.
Leave A Reply