நியூயார்க்: லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சீக்கியர்களின் குருத்வாரா கடந்த வாரம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது, சீக்கிய பார்வையாளர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்தது என்று அண்மைக்காலமாக சீக்கியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் வீடியோ ஒன்றும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நியூயார்க்கிலிருந்து கலிபோர்னியா செல்லும் விமானத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், வெள்ளையின அமெரிக்கர் ஒருவர் தன் உடன் பயணிக்கும் சீக்கியர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவரை வீடியோ எடுத்து, பின்லேடனுடன் பறந்து கொண்டிருக்கிறேன் என்ற தலைப்பில், இப்படி ஒருவர் அருகில் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்களா? என்று கருத்திட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யூ-டியூபில் வெளியிட்டார்.

இந்நிலையில், யாரோ சிலர் மீண்டும் இதை யூ-டியூபில் பதிவேற்ற, இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

இதற்கு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கனோர் இந்த வீடியோ எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவிக்கும் வகையில் ‘டிஸ்லைக்’கும் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply