லண்டன்: ஆண் போல வேடமிட்டு செயற்கை ஆணுறுப்பை கொண்டு பெண்ணுடன் உடலுறவு கொண்ட பலே பெண்மணிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடுத்துள்ளார்.
இங்கிலாந்தின், கேஸ்டில் ஹில் பகுதியை சேர்ந்த பியோனா மேன்சன் (25) என்ற பெண்மணிக்கு, செக்ஸ் உறவுக்காக ஆசைப்படும் பெண்களை ஏமாற்றி உறவு வைத்துக்கொள்ள ஆசை.
இதற்காக ஆன்லைனில் தன்னை ஒரு ஆண் மகன் என காட்டிக்கொண்டார். தலையை கிராப் வெட்டிக்கொண்டு, உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு, தான் ஒரு கட்டுமஸ்தான ஆண் என காட்டிக்கொண்டு பெண்களோடு சாட் செய்வது இவரது வழக்கமாம்.
தனது பெயரை கைரன் லீ என்றும் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இப்படி ஏமாற்றிய இவரிடம் சிக்கியுல்ளார் கரோல் என்ற பெண். ஒரு குழந்தையின் தாயான கரோல், பிற ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் விருப்பத்தில் ஆன்லைனில் சுற்றித்திருந்துள்ளார்.
அப்போது லீயின் அறிமுகம் கிடைத்தது. இதன்பிறகு போனில் இருவரும் காமரசம் சொட்ட பேசிக்கொண்டனர். 2012ம் ஆண்டு ஒரு நல்ல நாளாக பார்த்து, இருவரும் படுக்கையில் இணைந்துள்ளனர்.
ஆனால், கட்டுமஸ்து என விளம்பரம் கொடுத்த லீயோ, தனது ஆடைகளை கழற்றவேயில்லையாம். கரோல் மட்டும் ஆடை அவிழ்த்த நிலையில், பேண்ட், சட்டையுடனே உடலுறவுக்கு ஆயத்தமாகியுள்ளார் லீ.
கரோல் சொக்கிக் கிடந்த நிலையில், பேண்ட்டுக்குள் வைத்திருந்த செயற்கை ஆணுறுப்பை வைத்து, கரோலுடன் உடலுறவு செய்துள்ளார் லீ.
இந்நிலையில், சமீபத்தில்தான், மெக்டொனால்டு ரெஸ்டாரண்டில் வேலை பார்த்த பியோனா என்ற பெண்தான், லீ என கூறி ஏமாற்றிய விஷயம் கரோலுக்கு தெரியவந்தது.
இதையடுத்து கரோல் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. லீ என்ற பெயரில் என்னை ஏமாற்றி உடலுறவு கொண்ட பியோனாவுக்கு தண்டனை தர வேண்டும் என்று மனுவில் கேட்கப்பட்டிருந்தது.
அதேநேரம், விசாரணையின்போது, அந்த உடலுறவு நல்ல திருப்தி தந்ததாகவும், பியோனா தெரிவித்திருந்தார்.
இரு தரப்பு வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி, லீ என்ற பெயர் கொண்ட பியோனாவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு அதிருப்தியளிப்பதாக கரோல் கூறியுள்ளார்.