கொள்­ளு­ப்பிட்­டியில் அமைந்­துள்ள ஆபர­ணங்கள் மற்றும் மாணிக்கக்கல் விற்பனை நிலையம் ஒன்று பாகிஸ்­தா­னி­யர்கள் இரு­வரால் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த விற்­பனை நிலை­யத்தின் உரி­மையா­ளரின் முகத்தில் ஒரு வகை­யான திர­வத்தை தெளித்த பின்னர் இந்த கொள்ளை இடம்பெற்றுள்­ள­தா­கவும் கொள்ளையில் ஈடு­பட்ட பகிஸ்­தா­னி­யர்கள் இரு­வ­ரையும் 24 மணி நேரத்­துக்குள் கைது செய்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன்குண­சே­கர தெரி­வித்தார்.

நேற்று முன் தினம் முற்­பகல் 11.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்ள இந்த கொள்ளைச் சம்­ப­வத்­தின்­போது போது சுமார் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்கள், மாணிக்கக்கல் பதிக்­கப்­பட்ட தங்க ஆப­ர­ணங்கள் மற்றும் மாணிக்கக் கல் ஆகி­யன கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

இது குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,

கொள்­ளுப்­பிட்டி பொலிஸ் பிரிவில் இலக்கம் 446 காலி வீதியில் அமைந்­துள்ள ஆப­ர­ணங்கள் மற்றும் மாணிக்கக் கல் விற்­பனை நிலையத்­துக்கு நேற்று முன் தினம் முற்­பகல் 11.30 அளவில் இரு பாகிஸ்­தா­னி­யர்கள் வருகை தந்­துள்­ளனர்.

தங்க நகைகள் கொள்­வ­னவு செய்ய வேண்டும் எனக் கூறி­யுள்ள அவர்கள் நகை­களை பார்­வை­யிட ஆரம்­பித்­துள்­ளனர். இதன் போது அந்த விற்­பனை நிலை­யத்தில் உரி­மை­யாளர் மட்­டுமே இருந்­துள்ளார்.

இதன் போது குறித்த பாகிஸ்­தா­னி­யர்­களில் ஒருவர் உரி­மை­யா­ளரின் கழுத்தை நெறித்து கெட்­டி­யாக பிடித்­துக்­கொள்ள மற்­றை­யவர் சிறிய போத்­தலில் இருந்த ஒரு வகை திர­வி­யத்தை துணி­யொன்றில் ஊற்றி அதனை முகத்தில் திணித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அந்த உரி­மை­யாளர் மயக்­க­முற்று கீழே சாயவே, அவ்­வி­ரு­வரும் கொள்­ளையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

தங்க நகைகள், மாணிக்­கக்க கற்கள் என பல­வ­கை­யான நகை­களை அவர்கள் கொள்­ளை­யிட்­டுள்­ளனர். இவற்றின் பெறு­மதி 1 கோடியே 10 இலட்சம் ரூபா­வகும்.

சம்­பவம் தொடர்பில் கொள்­ளுப்­பிட்டி பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்து அது தொடர்பில் பல்­கோண விசா­ர­ணை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கொள்­ளுப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் பல பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணையில் ஈடுபடுத்­தப்­பட்­டுள்ள நிலையில் நேற்று முன் தினம் இரவு 10.40 மணி­ய­ளவில் முத­லா­வது சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கொள்­ளுப்­பிட்டி முஹுது மாவத்­தையில் உள்ள தங்கு விடு­தி­யொன்றில் இருந்த போது பொலிஸார் அவரை கைது செய்­தனர்.

பின்னர் அவ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் அன்­றைய தினம் இரவு 11.30 மணிக்கு கொள்­ளு­பிட்டி பெல்­மெய்ரா மாவத்­தையில் உள்ள தங்­கு­மி­ட­மொன்றில் இருந்து மற்­றைய சந்­தேக நபரும் கைதுச் செய்­யப்­பட்­டுள்ளார்.

சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­யி­டப்­பட்ட தங்க நகைகள், மாணிக்கக் கல் பதிக்­கப்­பட்ட தங்க நகைகள், மாணிக்கக் கல், 100 அம்­ரிக்க டொலர் நோட்டுக்கள் 30, 50 அம்ரிக்க டொலர் நோட்டுக்கள் 13, 9 அயிரத்து 340 ரூபா பணம் அகியனவும் கைப்பற்றப்பட்ய்டுள்ளன.

சந்தேக நபர்கள் நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

11046254_10156984290515377_2321092691469117104_n12341538_10156984290750377_4187844708193504590_n12390988_10156984290240377_5642927179311100967_n12341331_10156984290270377_3084465211132596363_nkolaii

Share.
Leave A Reply