உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அப்படியானதொரு ஆளுமைத்திறனை கொண்ட இவரை உலகின் சூப்பர் பவர் நாட்டு தலைவர்கள் தொடங்கி பல தீவிரவாத இயக்கங்கள் வரை காண்கானித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.
அப்படியான, விளாதிமிர் புதின் 100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் என்றும், அவருக்கும், மர்மமான டைம் டிராவலுக்கும் தொடர்பு உண்டு என்பது போன்றும் பல புகைப்பட ஆதாரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டு வருகிறது.
16-1450278943-1

சதி ஆலோசனை : சமீபத்தில், கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ் (Conspiracy theorists) எனப்படும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களிடம், 1920-ஆம் ஆண்டு மற்றும் முறையே 1941-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு புகைப்படங்கள் கிடைத்துள்ளது.
16-1450278944-2

அச்சு அசல் : அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு நபர்களும் அச்சு அசலாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்போன்றே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

16-1450278947-4

1941 : மேலும் அதே போன்று 20 ஆண்டுகள் கழித்து, அதாவது 1941-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்திலும் புதின் முகஜாடையோடு அதிகம் ஒற்றுப்போகும் ரஷ்ய ராணுவ வீரனை காண முடிகிறது.
puthinam

டைம் டிராவல் : இதன் மூலம் ரஷ்ய அதிபர் புதின், மிகவும் மர்மமான கோட்பாடான டைம் டிராவல் (Time Travel) உடன் தொடர்பு உடையவர் என்று சில சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.16-1450278949-6

100 ஆண்டுகள் : மேலும் புதின் 100 ஆண்டுகள் கழிந்தும் வாழும், வயதில்லாத மற்றும் மரணமில்லாத மனிதர் என்றும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.16-1450278950-7

வ்லாட் தி இம்பாலர் : மேலும் புதின் என்பவர், 1431-ஆம் ஆண்டு பிறந்த வ்லாட் தி இம்பாலர் (Vlad the Impaler) என்று சிலர் நம்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
puthine

மோனாலிஸா : சமீபத்தில் லியொனார்டோ டா வின்சி வரைந்த பிரபல மோனாலிஸா ஓவியத்தில் புதின் முகஜாடை இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி வைரல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.16-1450278953-9

லியொனார்டோ டா வின்சி : 1500-களில் தான் மோனாலிஸா ஓவியம் வரையப்பட்டது என்பதால் வ்லாட் தி இம்பாலரை புதின் என்று நம்புபவர்கள் மோனாலிஸாவை வரைந்த காலத்தில் லியொனார்டோ டா வின்சி உடன் வ்லாட் தி இம்பாலர் இருந்துள்ளார் என்றும் நம்புகின்றனர்.
16-1450278954-10.png

ட்விட்டர் : இதை தொடர்ந்து டைம் டிராவல் என்ற கோட்பாட்டை நம்பும் பலரும் புதின் ஒரு டைம் டிராவலர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ள பல புகைப்பட ஆதாரங்களை ட்விட்டரில் பதிவு செய்தனர்.
16-1450278955-11

கிரேக்க நாட்டு தளபதி : ட்விட்டரில் பதிவான இந்த ஓவியத்தில் புதின் முகஜாடையோடு ஒற்றுப்போகும் கிரேக்க நாட்டு தளபதி ஒருவரை காண முடிகிறது.
16-1450278957-12

டச்சு நாட்டு ஓவியர் : ஜான் வான் ஐக் (Jan van Eyck) என்ற டச்சு நாட்டு ஓவியர் வரைந்த பல ஓவியங்களிலும் இருக்கும் ஒரு நபர் விளாதிமிர் புதினின் முகத்தை ஒற்று இருக்கிறார் என்பதையும் ட்விட்டர் பதிவு ஒன்று வெளிப்படுத்தியது.
 16-1450278958-13

ஓவியம் : டச்சு நாட்டு ஓவியர் ஜான் வான் ஐக்கின் மற்றொரு ஓவியம்.

17-1450325652-14

கலைஞர் எம்.சி.எஸ்சர் : மேலும் 1972-ஆம் ஆண்டு மரணமடைந்த கலைஞர் எம்.சி.எஸ்சர் (M. C. Escher) ஓவியப்படைப்பிலும் புதின் முகத்தை காண முடிகிறது என்பதையும் ட்விட்டர் பதிவு ஒன்று வெளிப்படுத்தியது.

17-1450325655-main

நிரூபிக்கப்படவில்லை : மேலும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களிடம் கிடைத்த மற்றும் சமூக வலைதளங்களில் நிரம்பிய எந்த ஒரு புகைப்படமுமே இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply