தமி­ழீழ விடு­தலைப் புலி குழுவினரே இரண்டு தங்­கை­ க­ளையும் கடத்தினர்

தனது தங்­கைகள் இருவர் கடத்­தப்­பட்­ட­தாக தாயார் சகிதம் சகோ­த­ரி­யொ­ருவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், மானிப்பாய் வீதி ஓட்டுமடம்பகுதியில் நாம் வசித்து வந்­தி­ருந்தோம்.

இவ்­வே­ளையில் 1990ஆம் ஆண்டு பெப்ர­வரி மாதம் 22ஆம் திகதி விடு­த­லைப்­புலி உறுப்­பினர் நசீர் என்­ப­வரின் தலை­மை­யி­லான குழுவினர் எமது வீட்­டுக்குள் புகுந்­தார்கள்.

எனது தங்­கை­க­ளான வாம­தேவன் இந்­தி­ரா­தேவி (அப்­போது வயது 22) மற்றும் வாம­தேவன் சுதா­தேவி (அப்­போது வயது 15) ஆகி­யோரை கடத்தி சென்­றனர்.

அதன் பின்னர் எனது தங்­கைகள் தொடர்­பாக எந்­த­வி­தமான தக­வல்­களும் இல்லை. ஆனால் நாம் சில நாட்­க­ளுக்கு முன்­பாக ஜோதிடம் கேட்டோம்.

அதன்­போது இப்­போதும் எனது இரு சகோ­த­ரி­களும் உயி­ருடன் தான் இருக்­கின்­றார்­க­ளென ஜோதிடர் கூறு­கின்றார். எனவே எனது இரு சகோ­த­ரி­களும் இன்­னமும் உயி­ருடன் தான் இருக்­கின்­றார்கள் என நம்­பு­கின்றேன். அவர்களை கண்டறிந்து தாருங்கள் என்றார்.

பட்­ட­ப்ப­கலில் எனது மகனை இராணு­வமே பவல் வாக­னத்தில் ஏற்­றிச்­சென்­றுள்­ளது

குரு­நகர் பகு­தியைச் சேர்ந்த பத்­ம­நாதன் நெல்­சனின் தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

எனது மகன் நெல்சன். நாங்கள் நீண்­ட­கா­ல­மா­கவே குரு­ந­கரில் வசித்து வரு­கின்றோம். என்­னு­டைய மகன் குரு­நகர் கட­லில் சிறு­வ­யது முதலே தொழிலில் ஈடு­பட்டு வந்தார்.

2007 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 17 ஆம் திகதி கட­லுக்குச் சென்ற மகன் அன்று பிடிக்­கப்­பட்ட மீன்­களை விற்­ப­தற்­காக கல்­வி­யங்­காட்டுப் பகு­தி­யி­லுள்ள சந்­தைக்கு காலை 11 மணி­ய­ளவில் சென்றார்.

அங்கு மீன்­களை விற்­பனை செய்­து­விட்டு மீண்டும் பிற்­பகல் ஒரு மணி­ய­ளவில் வீட்­டுக்கு திரும்­பிக்­கொண்­டி­ருக்­கின்­ற­போது நாயன்மார் கட்டுச் சந்­தியில் வைத்து இரா­ணு­வத்­தினர் அவரை மறித்­துள்­ளனர்.

அங்கு தரித்து நின்ற இரா­ணு­வத்தின் பவல் வாக­னத்தில் ஏற்றிக் கொண்டு சென்­றுள்­ளனர். நாம் நீண்­ட­நே­ர­மா­கியும் மகனை காண­வில்லை­யென யோசித்­த­வாறே அங்கு சென்­ற­போது இரா­ணு­வத்­தினர் ஏற்­றிக்­கொண்டு சென்­றதை நேரில் கண்­ட­தாக அப்­ப­குதி மக்கள் தெரி­வித்­தனர்.

தொடர்ந்து அரி­யா­லையில் இருந்த இரா­ணுவ முகா­மிற்குச் சென்றேன். அங்கு எனது மகன் இல்­லை­யென்றும் யாழ்.நக­ரி­லுள்ள தலைமை முகா­மிற்குச் செல்­லு­மாறு கூறினர்.

அதற்­க­மைய நகரில் இருந்த தலை­மை­மு­கா­மான 512ஆவது படைத்­த­லைமை அலு­வ­ல­கத்­திற்குச் சென்று தேடினேன். அங்­கு­மில்லை. இராணு­வத்­தி­னரின்  ஒவ்­வொரு முகா­மாகத் தேடினேன்.

அது மட்­டு­மல்­லாமல் மனித உரிமை ஆணைக்­குழு உள்­ளிட்ட சில அமைப்­புக்­க­ளி­டமும் முறை­யிட்டேன். அதன் பின்னர் பல தரப்பினர்களிடம் முறை­யிட்­டது மட்­டு­மல்­லாமல் பல இடங்­க­ளிற்குச் சென்றும் தேடினேன். ஆனால் இன்று வரை அவர் கிடைக்கவில்லை. எங்­கி­ருக்­கின்றார் என்று கூடத் தெரி­யாது.

என்­னு­டைய மகன் இல்­லாமல் நான் பல கஷ்­டங்­க­ளையும் துன்­பங்­க­ளையும் எதிர்­நோக்கி வரு­கின்றேன். அத்­தோடு அவரைத் தேடி அலைந்து நாங்கள் உடல் ரீதி­யா­கவும் உளரீதி­யா­கவும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்றோம்.

இவ்­வாறு எங்­க­ளுக்குப் பாதிப்­புக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்­கின்­றன. காணாமல் போனோர் தொடர்­பிலே இங்கு விசா­ரணை செய்­யப்­ப­டு­கின்­றது.

எனது மகனை இரா­ணு­வமே பிடித்துச் சென்­றது. இதனைப் பலரும் கண்­டுள்­ளனர். எனவே இரா­ணுவம் பிடித்த என்­னு­டைய மகனை மீட்டுத்­தா­ருங்கள் இதுவே எனக்குப் போதும். இதனைத் தான் இந்தக் குழு­விடம் நான் மன்­றாட்­ட­மாக வேண்­டு­கின்றேன் என்றார்.

இரா­ணுவச் சிப்­பாயின் சதி­யாலே  எனது மகன் கைது செய்­யப்­பட்டார்

நாவற்­கு­ழியைச் சேர்ந்த சின்­னத்­தம்பி சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது மகன் சிவ­குமார் (வயது 32). என்­னு­டைய பாது­காப்பில் என்­னு­டைய வீட்­டி­லேயே இருந்தார்.

1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி நாவற்­குழி கிழக்கு கோயி­லாக்­கண்டிப் பகு­தியில் நாவற்­குழி படை­மு­கா­மைச்­சேர்ந்த இராணு­வத்­தினர் ஐந்து கிலோ­மீற்றர் பரப்­ப­ள­வினை உள்­ள­டக்­கிய பகு­தியில் பாரிய சுற்­றி­வ­ளைப்பைச் செய்­தி­ருந்­தனர்.

இதன்­போது அனை­வரும் ஒன்­று­தி­ரட்­டப்­பட்டு நீண்ட வரி­சையில் நிற்­க­வைக்­கப்­பட்­டார்கள். முக­மூடி அணிந்த நான்கு தலை­யாட்­டி­களை இரா­ணு­வத்­தினர் கொண்­டு­வந்­தனர்.

அவர்­களை  நிறுத்­தி­விட்டு  வரி­சையில் நின்­ற­வர்­களை செல்­லு­மாறு கூறினர். அப்­பொ­ழுது தலை­யாட்­டியின் முன் செல்­வ­தற்­காக நானும் எனது முன்னால் மகனும் வரி­சையில் சென்­று­கொண்­டி­ருந்தோம்.

மகன் முத­லா­வ­தாக தலை­யாட்­டிக்கு முன்­பாக சென்றார். முதல் மூன்று தலை­யாட்­டி­களும் மகன் சென்றும் எது­வுமே செய்­ய­வில்லை. நான்­கா­வ­தாக நின்ற தலை­யாட்­டியும் தலை­யாட்­டாமல் நின்­றது.

சிப்­பா­யொ­ருவர் அந்த தலை­யாட்­டியின் பின்னால் நின்று கொண்டிருந்த இரா­ணு­வச்­சிப்பாய் ஒருவர் அதனைக் கண்­டி­ருந்தார்.

கூரிய இரும்பு கம்­பியால் தலை­யாட்­டியின் காலில் குத்­தினார். இதனை நான் அவ­தா­னித்தேன். வேறு யாரும் கவ­னத்தில் கொண்டிருக்கவில்லை.

இவ்­வாறு குத்­தும்­போது வலி தாங்க முடி­யாமல் நான்­கா­வது தலை­யாட்டி உட­லினை அசைப்­பதை பார்த்த ஏனைய இரா­ணு­வத்­தினர் எனது மகனை கைது செய்து விட்­டனர்.

எனக்கு சிங்­கள மொழி தெரியும். உட­ன­டி­யா­கவே தலை­யாட்­டிற்கு பின்னால் நின்ற சிப்பாய் நடந்­து­கொண்ட விதத்தை அவர்­க­ளி­டத்தில் விளக்கி கூறினேன். எனது மகனை விட்­டு­வி­டுங்கள் எனக்­கோ­ரினேன். ஆனால் இரா­ணு­வத்­தினர் நான் சொல்­வதை கேட்­க­வில்லை.

சுற்­றி­வ­ளைப்பு நடை­பெற்ற பகு­தி­களில் பிடிக்­கப்­பட்­ட­வர்­களை ஏற்­றி­வந்த வாக­னத்தில் எனது மக­னையும் ஏற்றிச் சென்­றனர்.

அவர்­களை பின்­தொ­டர்ந்து நாவற்­குழி படை­முகாம் வரைக்கும் கால்­ந­டை­யாகச் சென்றேன். படை­முகாம் வாச­லுடன் என்னை திருப்பி அனுப்­பி­விட்­டார்கள்.

அப்­போது சாவ­கச்­சேரி பிர­தேச செய­லாளராக இருந்­தவர் எனது மகனை இரா­ணுவம் பிடித்துச் சென்­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­திய கடிதம் ஒன்­றினை தந்­துள்ளார்.

அந்த படை­மு­கா­மிற்கு பொறுப்­பாக இருந்த கமாண்­ட­ருக்கு அனைத்­துமே தெரியும். அவரை விசா­ரித்து எனது மக­னுக்கு என்ன நடந்­தது என்­பதைக் கூறுங்கள் என்றார்.

எனது தம்­பிக்­காக பத்து இலட்சம் பணம் செலுத்­தியும் பய­னில்லை

நல்­லூ­ரைச்­சேர்ந்த சபா­ரட்ணம் அன்­புரு சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது தம்பி சபா­ரட்ணம் சதீஸ் 2007ஆம் ஆண்டு பெப்­ர­வரி 13ஆம் திகதி யாழ்.நக­ருக்கு வங்­கிக்கு செல்­வ­தற்­காக துவிச்­சக்­க­ர­வண்­டியில் பய­ணித்­தி­ருந்தார்.

பின்னர் அவர் வீட்­டுக்குத் திரும்­ப­வே­யில்லை. அவரை யாழ்.நகர் பெற்றோல் நிலைய சந்­தியில் இரா­ணு­வத்­தினர் மறித்து வைத்திருந்ததை அவ்­வ­ழியால் வந்த சிலர் கண்­டி­ருந்­தனர்.

அவர்கள் எனக்கு இந்த தக­வலை தெரி­வித்­தனர். நான் வைத்­தியசாலையில் பணி­பு­ரி­பவன். இரா­ணுவ முகாம்கள் ஒவ்­வொன்­றுக்­கு­மாகச் சென்றேன். அங்கு எனது தம்பி தொடர்­பாக விசா­ரித்தேன் எங்கும் இல்­லை­யென்றே கூறி­னார்கள்.

இந்­நி­லையில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறு­தியில் எமது வீட்­டி­லுள்ள தொலை­பே­சிக்கு அழைப்­பொன்று வந்­தது. எனது தம்­பி­யான சதீஸை தாமே கடத்தி வைத்­தி­ருக்­கின்றோம்.

30 இலட்சம் ரூபா பணத்தை வழங்­கினால் அவரை உடன் விடு­விப்போம் எனக் கூறி­விட்டு அழைப்பைத் துண்­டித்து விட்­டார்கள். பின்னர் மறு­ப­டியும் தொடர்பு கொண்­டார்கள்.

அப்­போது எனது தம்­பியை எங்கு வைத்­தி­ருக்­கி­றீர்கள் எனக்­கேட்டேன். பணத்தை வழங்­கினால் உடன் விடு­தலை செய்­யப்­ப­டுவார் எனக் கூறி­னார்கள்.

நான் சாதா­ர­ண வைத்­தியசாலையில் தொழில் புரியும் ஒருவன். என்­னிடம் அத்­தனை தொகை பணம் இல்­லை­யென்று கூறினேன். அதன்­போது உன்­னிடம் பணம் இருக்­கின்­றது என்­பது எமக்குத் தெரியும் என்­றார்கள்.

இறு­தியில் தம்­பியைக் காட்­டாமல் பணத்தை வழங்க முடி­யா­தெனக் கூறினேன். தொடர்பை துண்­டித்து விட்­டார்கள். அதனைத் தொடர்ந்து ஊர­டங்கு நேரம் ஆரம்­ப­மாகி சிறிது நேரத்தில் வெள்ளை நிற வான் ஒன்று எங்­க­ளது பிர­தான வாயி­லுக்கு முன்னால் வந்து நிற்கும்.

நள்­ளி­ரவு கழிந்தே செல்லும். ஊர­டங்கு சட்டம் இருந்­ததால் நாம் வெளியில் சென்று அந்த வானை பார்ப்­ப­தில்லை. அவ்­வா­றொ­ரு நாள் நின்­று­விட்டு வாகனம் சென்­றதன் பின்னர் எமது வீட்டுத் தொலை­பே­சிக்கு மீண்டும் அழைப்பு வந்­தது.

நாங்­களே உங்­க­ளு­டைய வீட்­டுக்கு முன்னால் வானில் வந்து நின்­று­விட்டுச் சென்றோம். மரி­யா­தை­யாக பணத்தை வழங்கு இல்லையென்றால் உன் தம்­பியும் கிடைக்­க­மாட்டான்.

நீ வேலை­செய்யும் வைத்­தி­ய­சா­லையில் சவச்­சா­லைக்கே செல்வாய் என்று அச்­சு­றுத்­தினர். ஒரு­பக்­கத்தில் தம்­பிக்கு எதுவும் நடக்கக் கூடாது. மறு­பக்­கத்தில் எனக்கு ஆபத்து ஏற்­படும் வாய்ப்­புக்­களும் இருந்­தன.

இதனால் சரி பணம் தரு­கின்றேன். ஆனால் 30 இலட்சம் என்­னி­ட­மில்­லை­யென்றேன். பேரம்­பேசி 10 இலட்சம் வழங்­கு­மாறு கோரினர். ஈற்றில் மிகுந்த சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் 10 இலட்சம் ரூபா பணத்தை திரட்­டினேன்.

எம்.ஆர்.என்.பாகீம் என்ற பெயரைக் கொண்ட தனியார் வங்கி கணக்­கி­லக்கத்­தினை எனக்கு தந்­தார்கள். அதற்கு வைப்­பி­லிட்டு விட்டு அவர்கள் தொடர்பு கொள்ளும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பை ஏற்­ப­டுத்­தினேன்.

தொலை­பேசி செயற்­றி­ருந்­தது. தம்­பியும் வீடு­ தி­ரும்­பி­யி­ருக்­க­வில்லை. எனது தம்பி காணாமல் போன­போதும் நாம் பணத்தை வைப்பிலிட்­ட­போதும் யாழ். நகரம் 512ஆவது படைப்­பி­ரிவின் முழு­மை­யான கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே இருந்­தது.

எமது வீட்­டி­லி­ருந்து சொற்­ப­ தூ­ரத்தில் இரா­ணுவ முக­மொன்றும் இருந்­தது. ஆகவே ஊர­டங்கு நேரத்தில் நட­மா­டி­ய­வர்கள் யார் என்­பது குறித்து அவர்­க­ளுக்கு நிச்­ச­ய­மா­கவே தெரிந்­தி­ருக்கும்.

இத்­தனை நாளும் அச்சம் கார­ண­மாக இந்த தக­வலை நானோ அல்­லது குடும்­பத்­தி­னரோ வெளிப்­ப­டுத்­தாது வைத்­தி­ருந்தோம். தற்­போது அதனைக் கூறி­யுள்ளோம். எனது தம்­பிக்கும் எமது குடும்­பத்தின் பாது­காப்­புக்கும் ஆணைக்­கு­ழுவே பொறுப்பு என்றார்.

இரா­ணு­வத்­திடம் கண­வரை ஒப்­ப­டைத்தசாட்­சி­யாக எனது தந்தை இன்­று­முள்ளார்

இரண்டு பிள்­ளை­களின் தாயான ஷிரோமி ஜெயச்­சந்­திரன் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், 2009 மே 19ஆம் திகதி அன்று வட்­டு­வாகல் பாலத்தினூடாக நாம் வருகை தந்­து­கொண்­டி­ருந்­த­போது விடு­தலைப் புலி­களில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்கள் எம்­மி­டத்தில் சரணடையுங்கள் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­கின்றோம் என பகி­ரங்க அறி­விப்பை இரா­ணு­வத்­தினர் வெளியிட்­டனர்.

இத­னை­ய­டுத்து பெண்கள் நிரலில் நான் காத்­தி­ருக்க எனது தந்­தை­யா­ரான அல்­பிரட் பிரான்சிஸ் லோரன்ஸ், எனது கணவர் சிவசுப்பிரமணியம் ஜெயச்­சந்­தி­ரனை அழைத்துச் சென்று இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைத்தார்.

எனது கணவன் ஜெயச்­சந்­திரன் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இம்ரான் பாண்­டியன் படைப்பிரிவில் திலீப் என்ற பெயரில் செயற்­பட்டு வந்­தி­ருந்தார்.

இத­னா­லேயே இரா­ணு­வத்தின் அறி­விப்பைக் கேட்டு எனது தந்தை அவரை சர­ண­டை­யச்­செய்­தி­ருந்தார். அதன் பின்னர் நாம் பல இரா­ணுவ முகாம்­க­ளுக்கு எனது கண­வரை தேடிச் சென்­ற­போது அனைத்து இடங்­க­ளிலும் அவர் இல்லை என்றே கூறி­னார்கள். தற்­பொ­ழுதும் எனது தந்தை உயி­ருடன் இருக்­கின்றார். அவர் நேரில் கண்ட சாட்­சி­யாவார்.

ஈ.பி.டி.பி.யின் மீதே எனக்குச் சந்­தேகம்

ஈச்­ச­மோட்­டையை சேர்ந்த முத்­து­லிங்கம் கொலஸ்­ரினா என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், ஈச்­ச­மோட்­டையில் உள்ள எமது வீட்­டுக்கு 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி சிவில் உடையில் இரவு 10 மணி­ய­ளவில் வந்த 7 பேர் கொண்ட இனந்­தெ­ரி­யாத கும்பல் எனது மக­னான முத்­து­லிங்கம் மல­ரவன் (வயது 19) உறங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது விசா­ர­ணை­ செய்­ய­ வேண்­டு­மென அழைத்து விசா­ரணை மேற்­கொண்­டது.

மேலும் விசா­ர­ணை­களைச் செய்­ய­வேண்­டி­யி­ருப்­பதால் அவரை அழைத்­துச்­செல்ல வேண்­டு­மென்­றனர். அதன்­போது நாளை காலையில் எங்கே அழைத்து வர­வேண்­டு­மென்று சொல்­கின்­றீர்­களோ அங்கே அழைத்து வரு­கின்­றேனென நான் கூறினேன்.

அவர்கள் அத­னைப்­பொ­ருட்­ப­டுத்­தாது, இரவு 12 மணி­ய­ளவில் மகன் கத­றக்­க­தற இழுத்து சென்­றனர். மகனை இழுத்து சென்­ற­போது நானும் பின்னால் கத்­திக்­கொண்டே சென்றேன்.

என்னை தள்­ளி­விட்டு வெளியில் நின்ற வாக­னத்தில் மகனை ஏற்­றினர். எமது வீட்டு ஒழுங்கை முழு­வதும் சீருடை தரித்த பல இரா­ணு­வத்­தினர் நிற்­ப­தனை நான் கண்டேன். நான் கத­றி­ய­ழு­த­போதும் அவர்கள் எது­வுமே கூறாது ஏற்­றிச்­சென்­று­விட்­டனர்.

மறுநாள் காலையில் என்­ன­செய்­வதென்ற­றி­யாது எனது வீட்டில் அழு­த­வாறே இருந்­த­போது மோட்டார் சைக்­கிளில் வரு­கை­தந்­தி­ருந்த மூவர் திடீ­ரென வீட்­டிற்குள் நுழைந்து எமது தொலை­பே­சியை பறித்து சென்­றனர்.

அதில் ஒருவர் ஈ.பி.டி.பி. உறுப்­பினர். நான் அவரை அடை­யாளம் கண்டேன். அன்­றைய தினமே யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பி. அலு­வ­ல­கத்­திற்கு சென்ற போது முதல் நாள் எமது வீட்­டுக்கு வந்த குழுவை சேர்ந்த மூவரை கண்டேன்.

அவர்­க­ளிடம் எனது மகன் எங்கே என கேட்ட போது தமக்கு எதுவும் தெரி­யா­தெனக் கூறி அவர்கள் ஈ.பி.டி.பி.முகா­மி­னுள்­ளேயே சென்­றனர். அதன் பின்னர் மகனை பற்­றிய தகவல் எதுவும் இல்லை. எனக்கு ஈ.பி.டி.பி.யினர் மீதே சந்­தேகம் உள்­ளது என்றார்.

இரண்டு பிள்­ளை­க­ளை­யுமே  நான் தொலைத்­து­விட்டேன்

மணி­யந்­தோட்­டத்தைச் சேர்ந்த கருப்பன் நாகம்மா என்ற தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், நாங்கள் மணி­யந்­தோட்டம் உத­ய­பு­ரத்தை நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள். எனக்கு இரண்டு புதல்­வர்கள்.

மூத்­தவர் பால­கி­ருஷ்ணன், இளை­யவர் சுரேஷ். 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேவா­ல­யத்­திற்குச் சென்ற எனது மூத்­த­ ம­கனை துண்டிச் சந்­தியில் சாவடி அமைத்­தி­ருந்த இரா­ணு­வத்­தினர் வழி­ம­றித்­துள்­ளனர்.

அவர்­க­ளுடன் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­போது அதனை எனது கண­வனின் சகோ­தரர் கண்ணால் கண்­டுள்ளார். அதன்­பின்னர் அவர்கள் வீட்­டுக்கு அனுப்­பி­வி­டு­வார்­க­ளென எதிர்­பார்த்­தி­ருந்தோம்.

எனினும் அவர்கள் மகனை அனுப்­ப­வே­யில்லை. அவ­ரைத்­தேடி அந்த சாவ­டிக்குச் சென்றோம். மணி­யந்­தோட்டம், பாஷையூர் இரா­ணுவ முகா­ம்­க­ளுக்கும் சென்றோம். அவரைத் தெரி­யா­தென்றே கூறி­னார்கள்.

இவ்­வா­றி­ருக்­கையில் எனது இளைய மகன் கடற்­றொழில் செய்­பவர். அவர்கள் ஜூலை மாதத்தில் குறித்த நாளொன்றில் வழ­மை­போன்றே கட­லுக்குச் சென்­று­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருக்­கையில் கொழும்­புத்­துறைச் சந்­தியில் வைத்து இரா­ணு­வத்­தினர் கைது செய்­துள்­ளனர்.

இதனை நேரில் பார்த்­த­வர்கள் என்­னி­டத்தில் கூறி­னார்கள். மிக­ முக்­கி­ய­மாக எனது மகனை இரா­ணு­வத்­தினர் கூட்­டிச்­சென்­றதை நேரில் கண்ட சாட்­சி­யா­க­வி­ருந்­தவர் தற்­போது மர­ண­ம­டைந்து விட்டார்.

தற்­போது வரையில் எனது இரண்டு ஆண்­பிள்­ளை­க­ளுக்கும் என்ன நடந்­த­தென்­பது தெரி­யாது அவர்­களை தொலைத்­து­விட்டு கண்­ணீ­ருடன் அலைந்­து­கொண்­டி­ருக்­கின்-றேன் என்றார்.

 

காணாமல்போன கணவனை பலர் கண்டிருக்கின்றார்கள்

ஜெயகாந்தன் நர்மிலா சாட்சிம-ளிக்கையில், நாங்கள் கோண்டாவிலைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் முத்துலிங்கம் ஜெயகாந்தன் (வயது 32). 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி பிற்பகல் 2.30 மணியிருக்கும் எமது வீட்டுக்குள் திடீரென ஆயுதங்கள் தாங்கியவாறு வருகைதந்திருந்த இராணுவத்தினர் எனது கணவனை இழுத்துச் சென்றனர்.

ஒருவார்த்தை கூட பேசவில்லை. நான் என்ன செய்வதென்றறியாது இருந்தேன்.

2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதி அச்சுவேலி கோவிலடியில் எனது கணவரை முகத்தை மறைத்துக் கட்டியபடி மோட்டார் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்டபோது சிலர் அவதானித்திருக்கின்றார்கள்.

அதன் பின்னர் 2010ஆம் ஆண்டும் இராணுவ சீரு-டை-யுடன் முகத்தை மறைத்தவாறு பலா-லி- வீதியில் நின்றமையை சிலர் அவ-தானித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி நல்லூர் பின்வீதியில் நின்று உறவினர் ஒருவருடன் கதைத்துக்கொண்டிருந்திருக்கின்றார். அதேநேரம் கோண்டாவில் தில்லையம்பதியிலும் எனது கணவரைக் கண்டதாக கூறப்படுகின்றது.

இராணுவத்தாலேயே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். பலாலி, அச்சுவேலி, நல்லூர் பிரதே-சங்கள் உட்பட சொந்த ஊரிலும் அவ-ரைக் கண்டதாக கூறுகின்றார்கள்.

உண்மையில் அவர் எங்கிருக்கின்றார் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதை கண்டறிந்து தாருங்கள் என்றார்.

…..

Share.
Leave A Reply