விடுதலைப்புலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்த விவகாரம்: எமிழ்காந்தனை இலங்கை அழைத்துவர முயற்சி
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பணம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்திடம் இருந்து விடுதலைப் புலிகள் சார்பாக எமிழ்காந்தன் அவர்களே பணத்தை பெற்று விடுதலைப் புலிகளின் தலைமையிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எமிழ்காந்தனை இம்மாத இறுதிக்குள் இலங்கை அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமிழ்காந்தன் வருகை தரும் இடத்தில் பணப்பரிமாற்றம் குறித்த பல தகவல்கள் அம்பலமாகும் என தெரியவருகிறது.