தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பறந்துக்கொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பேருந்து மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை Windspeed என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
SkyDeck என்ற அழைக்கப்படும் அந்த தொழில்நுட்பம் விமானத்தின் கூரை மேல் மையத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த கூண்டை சுற்றி பாதுகாப்பான மற்றும் உறுதியான கண்ணாடி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கூண்டிற்கு செல்வதற்கு விமானத்திற்குள்ளே இருந்து தானியங்கி படிக்கட்டுகள் மற்றும் ஆள் தூக்கி(Lift) வசதியும் உள்ளது.
விமானத்திற்குள் உள்ள ஒரு சிறப்பு பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள இரண்டு இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டால், அந்த இருக்கைகள் மேலே தூக்கி செல்லப்பட்டு கூரை மீதுள்ள கண்ணாடி கூண்டிற்குள் நிலை நிறுத்தப்படும்.
பின்னர், எவ்வளது தூரம் பயணம் செய்தாலும், சோர்வு ஏற்படாமல் சுமார் 360 டிகிரி சுற்றளவு வரை சுற்றி பார்த்துக்கொண்டு பயணம் செய்யலாம்.
அதாவது, பூமியிலிருந்து சுமார் 3,00,000 அடிகள் உயரத்தில் பறந்துக்கொண்டு இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு பயணிக்கலாம்.
இதுபோன்ற வசதியினை எந்தவிதமான நவீன விமானத்திலும் பொறுத்தலாம் என Windspeed நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதியினை விமானத்தில் பொறுத்துவதற்கு 8 முதல் 25 மில்லியன் டொலர் வரை செலவாகும்.
இது குறித்து Windspeed நிறுவனம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தொலை தூர விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சோர்வு ஏற்படாமல் இருக்கவே இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நவீன வசதியை தற்போது காப்புரிமை மட்டுமே செய்து நிலையில், இது விரைவில் நவீன விமானங்களில் பொருத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த வசதியை பயண்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.