இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் கஹ­வத்தை பொலிஸ் பிரிவில் உள்ள இயற்கை அழகு மிக்க ஒரு ஊரே கொட்­ட­கெத்­தன. பெண்­களின் தொடர் படு­கொ­லை­களால் திகில் நிறைந்த ஒரு பிர­தே­ச­மாக பல­ராலும் நோக்­கப்­பட்ட ஒரு இடமும் கூட.

கடந்த ஒரு­வா­ரத்­துக்கு முன்னர் வரை நீடித்த திகில் நிறைந்த மர்மம் தற்­போது விலக ஆரம்­பித்­துள்­ளது.

கடந்த 8 வரு­டங்­களில் 18 பெண்கள் கொடூ­ர­மான முறையில் பல்­வேறு வித­மாக கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் சந்­தேக நபர்­களே சிக்­காத சில கொலைகள் தொடர்பில் தற்­போது சந்­தேக நபர் ஒருவர் சிக்­கி­யுள்­ளதே அதற்குக் கார­ண­மாகும்.

showImageInStory-copie-680x365நாதன் பாப்பு. இவர்தான் இறு­தி­யாக கொட்­ட­கெத்­தன மர்­மத்­துக்கு பலி­யா­னவர். 48 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தாய். இரத்­தி­ன­புரி கஹ­வத்தை பொலிஸ் பிரி­வுக்கு ட்­பட்ட கொட்­ட­கெத்­தன ஓப்­பாத்த தோட்­டத்தின் மேற்பிரிவில் வசித்­தவர்.

அதே தோட்­டத்தில் தபால் விநி­யோ­கஸ்­த­ராக இவ­ரது கணவர் வேலை பார்க்க பாப்­புவோ தேயிலை தோட்­டத்தில் கொழுந்து பறித்து குடும்ப வண்­டியை ஓட்ட உத­வினார்.

பாப்­புவின் இரு மகன்­மாரும் திரு­ம­ண­மாகி ஒவ்­வொரு பிள்­ளை­க­ளுக்கு தந்­தை­யா­கி­யி­ருந்த நிலையில் பாப்­புவின் வாழ்வும் சாதா­ர­ண­மா­கவே கழிந்து வந்­தது.

இந்­நி­லை­யில்தான் கடந்த செப்­டெம்பர் மாதம் 28 ஆம் திகதி பிற்­பகல் 1.40 மணி­ய­ளவில் பாப்பு சர­மா­ரி­யாக வெட்­டப்­பட்ட நிலையில் அவர் கொழுந்து பறிக்கும் தேயிலை தோட்­டத்தின் ஒரு பகு­தியில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

வெட்டுக் காயங்­க­ளுடன் இரத்த வெள்­ளத்தில் சட­ல­மாக பாப்பு இருந்த போது அது தொடர்பில் தோட்ட மக்கள் 119 அவ­சர தொலை­பேசி இலக்கம் ஊடாக உட­ன­டி­யா­கவே பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லை­யி­லேயே ஸ்தலத்­துக்கு கஹ­வத்த பொலிஸார் உட­ன­டி­யாக சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

குறித்த தேயிலை தோட்­டத்தில் 100 மீற்­றர்­க­ளுக்கும் மேல் நீண்டு செல்லும் இரத்தக் கறைகள் காணப்­படும் நிலையில் பாப்பு விரட்டி விரட்டி வெட்­டப்­பட்­டி­ருக்­கலாம் அல்­லது வேறு இடத்தில் வெட்டிக் கொலை செய்து விட்டு சடலம் காணப்­பட்ட இடத்­துக்கு தூக்கி கொண்டு வந்து போட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கித்­தனர்.

குறிப்­பாக பாப்­புவின் சட­லத்தில் 5 ஆழ­மான வெட்டுக் காயங்கள் சட்­ட­வைத்­திய அதி­கா­ரி­களால் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அந்தகாயங்கள் ஊடாக அதி­க­ளவு இரத்தம் வெளி­யே­றி­ய­மையே பாப்பு உயி­ரி­ழக்க கார­ண­மாக அமைந்­த­தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

உண்­மையில் பாப்­புவின் சட­லத்தை பொலிஸார் ஸ்தலத்தில் அவ­தா­னித்த போது பல்­வேறு ஊகங்­க­ளுக்கு அது தக­வ­ல­ளித்­தது.

அவ­ரது உடல் காணப்­பட்ட நிலை­மை­யா­னது பாப்பு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டாரா என்ற கேள்­வியை எழுப்­பி­யது.

எனினும் பிரேத பரி­சோ­த­னையில் பாப்பு துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ராத நிலையில் சட­லத்தின் பாகங்கள் மேல­திக ஆய்வு­க­ளுக்­காக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மற்றும் பொரளை ஜீன்டெக் நிறு­வன விஞ்­ஞா­னி­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டன.

இரத்­தி­ன­புரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ், இரத்­தி­ன­புரி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த சிறி­வர்­தன ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் கஹ­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி லலித் ராஜ­மந்­தி­ரியின் கீழ் விசேட பொலிஸ் குழுக்கள் 20 விசா­ர­ணை­களை முதலில் ஆரம்­பித்­தன.

இத­னி­டையே தான் இது தொடர்பில் விசா­ரணை செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோ­னினால் குற்றப் புலனாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த பொலிஸ் குழு­வா­னது இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல்­வேறு பொலிஸ் நிலை­யங்­களில் கட­மை­யாற்றும் மேலும் பல உத்­தி­யோ­கத்­தர்­களின் உத­வி­யுடன் கொட்­ட­கெத்­த­னவில் தங்­கி­யி­ருந்து மிக சூட்­சுமமாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

இந்த விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணைக் குழு 3 கட்­டங்­க­ளாக முன்­னெ­டுத்­தது. அதில் ஒரு கட்­ட­மாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு பிர­தே­சத்தில் இருந்து பல­ரிடம் வாக்கு மூலங்­களை சேக­ரித்­தது.

அந்த வாக்கு மூலங்­களை ஆராய்ந்த போது, மிக முக்­கிய தட­ய­மொன்று புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்­தது. அதா­வது சேகர் (பெயர் மற்­றப்­பட்­டுள்­ளது) என்ற சாட்­சி­யா­ளரின் சாட்­சி­யத்தின் படி நாதன் பாப்பு என்ற பெண் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­பட்ட நேரத்தில் சந்­தே­கத்­துக்கு இட­மான நபர் ஒரு­வரின் நட­மாட்டம் தொடர்பில் அந்த தகவல் கிடைத்­தி­ருந்­தது.

அந்த தக­வலில் இருந்து அடுத்த இரு கட்ட விசா­ர­ணை­களை செய்யும் பொறுப்­புக்கள் பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான விஜே­துங்க மற்றும் எம்.பைஸர் ஆகி­யோரின் கீழ் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் சாமந்த விஜே­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய இடம்­பெற்­றது.

பல்­வேறு கோணங்­களில் அவ­தா­னிப்­புக்கள் மற்றும் விசா­ர­ணையின் இறு­தியில் தாம் சந்­தே­கத்தில் பின் தொடர்ந்து வந்த நபர் ஒரு­வரை கைது செய்­வது என புல­னாய்வுப் பிரிவு தீர்­மா­னித்­தது.

kavthaiஆம், அதன்­படி தான் கடந்த 11 ஆம் திகதி வெள்­ளி­யன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கொட்­ட­கெத்­தன பகு­தியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான நீல் லக் ஷ்­மனை கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட நீல் லக்ஷ்­மனை உட­ன­டி­யாக நான்காம் மாடிக்கு  கொண்­டு­வந்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசேட விசாரணையா­ளர்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினர். இதன்­போது வெளிப்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட தக­வல்கள் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

இந் நிலையில் மறு நாள் 12 ஆம் திகதி சனி­யன்று கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் சந்­தேக நபரை ஆஜர்­ப­டுத்தி 24 மணி நேர தடுப்புக் காவல் உத்­த­ர­வொன்றை புல­னாய்வுப் பிரி­வினர் பெற்­றுக்­கொண்­டனர்.

அதன்­படி விசா­ரணை செய்­கையில் நாதன் பாப்­புவின் கொலையை விட கொட்­ட­கெத்­த­னவை புரட்டி எடுத்த மேலும் பல கொலை­க­ளுடன் சந்­தேக நப­ருக்கு தொடர்­பி­ருப்­பது உறு­தி­யா­னது.

இந் நிலையில் மறு நாள் ஞாயிற்றுக் கிழமை கொட்­ட­கெத்­தனவில் கொலைகள் இடம்­பெற்ற இடங்­க­ளுக்கு சந்­தேக நபர் அழைத்துச் செல்­லப்­பட்டார்.

அத்­துடன் சந்­தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நாதன் பாப்­புவை கொலை செய்ய பயன்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் கத்தி, அரிவாள் ஆகி­ய­வற்­றுடன் பல்­வேறு கொலை­க­ளின்­போதும் சந்­தேக நபர் அணிந்­தி­ருந்­த­தாக கூறப்­படும் இரத்தம் தோய்ந்த ஆடைகள் ஆகி­யன கைப்­பற்­றப்­பட்டு டீ.என்.ஏ.பரி­சோ­த­னை­க்­காக ஜீன் டெக் நிறு­வ­னத்­துக்கு அனுப்பப்­பட்­டன.

இத­னி­டையே குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் அளித்த சந்­தேக நபர் நாதன் பாப்பு உள்­ளிட்ட பல கொலை­களை தானே செய்த­தாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

அந்த கொலை­களை பணத்­துக்­கா­கவும் பாலியல் இச்­சைக்­கா­க­வுமே செய்­த­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். தனி­யாக இருக்கும் பெண்­களை தான் இலக்­காக கொண்­ட­தா­கவும் அவர்­களின் தங்க ஆப­ர­ணங்­களை கொலையின் பின் கொள்­ளை­யிட்டு பண­மாக்­கி­ய­தாகவும் அவர் புல­னாய்வுப் பிரி­வுக்கு தெரி­வித்­துள்ளார்.

இந் நிலையில் தான் நாதன் பாப்­புவின் கொலையின் போது அவ­ரது கழுத்தில் இருந்த ஒன்­றரை பவுண் நிறை கொண்ட தங்க தாலிக் கொடியை சந்­தேக நபர் இலக்கு வைத்து கொள்­ளை­யிட்­டுள்­ள­மையை பொலிஸார் தெரிந்­து­கொண்­டனர்.

அதன்­படி உற­வினர் ஒருவர் ஊடாக தாலிக் கொடியை அடகு வைத்­தி­ருந்த நிலையில் அதனை புல­னாய்வுப் பிரி­வினர் மீட்­டுள்­ளனர். அதில் தாலிக் கயிறு மட்­டுமே இருந்­த­தா­கவும் தாலியை தொடர்ந்து தேடி வரு­வ­தா­கவும் புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­வித்­தன.

PM-Ranil1உண்­மையில் கொட்­ட­கெத்­த­னவின் முத­லா­வது பெண் கொலை­யா­னது 2008 ஆம் ஆண்டு பதி­வா­னது. 2008 ஜூலை 21 ஆம் திகதி செல்லம்மா மரியாள் என்ற 56 வயது மாது வெட்­டிப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அப்­போது சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

அதன்­பின்னர் நான்கு மாதங்கள் கழித்து அதா­வது அதே ஆண்டின் நவம்பர் 19 ஆம் திகதி ஆரி­ய­வதி என்ற 52 வய­து­டைய மாது கொடூ­ர­மாக கொலைச் செய்­யப்­பட்டார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கொலை 2010 ஆம் ஆண்டில் பதி­வா­னது. 2010 ஜூன் மாதம் பேபி நோனா என்ற 48 வய­து­டைய பெண்ணும் அதே ஆண்டின் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி ஹீன் மெனிகே என்ற 80 வயது மூதாட்­டியும் கொலை செய்­யப்­பட்­டனர்.

இவ்­வாறு கொலை செய்­யப்­பட்ட அனைத்து பெண்­களும் வயதில் கூடி­ய­வர்கள் என்­ப­துடன் சில மூதாட்­டிகள் பாலியல் ரீதி­யா­கவும் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­பின்பே கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

கொட்­ட­கெத்­தன முத­லா­வது பெண் கொலை கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி முதல் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலான 4 வருட காலப்­ப­கு­திக்குள் 8 பெண் கொலைகள் இடம்­பெற்­றன.

2008 ஆம் ஆண்டு இரு கொலை­களும் 2010 ஆம் ஆண்டு இரு கொலை­களும் 2011 ஆம் ஆண்டு 4 கொலை­களும் இவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்­தன. 2009 ஆம் ஆண்டு எவ்­வி­த­மான கொலை­களும் கொட்­ட­கெத்­த­னவில் பதி­வா­க­வில்லை.

இந் நிலையில் தான் 2012 ஆம் ஆண்டு முதல் இக் கொலைகள் புதி­ய­வ­டி­வ­மெ­டுத்­தன. அதா­வது அது வரை தனித்­த­னி­யாக இடம்­பெற்ற பெண் கொலைகள் 2012 ஆம் ஆண்டு ஜன­வரி 31 ஆம் திகதி நயனா நில்­மினி, காவித்யா சத்­து­ரங்­கனி ஆகிய தாயையும் மக­ளையும் கொன்ற­த­னூ­டாக இரட்டைக் கொலை­க­ளாக பதி­வாகத் தொடங்­கி­ன.

அதன்­பின்னர் அதே ஆண்டு மே 31 ஆம் திகதி எஸ்.தயா­வதி (61 வயது), எஸ்.தில­கா­வதி (65 வயது) ஆகிய சகோ­த­ரிகள் கொலைசெய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

தொடர்ந்து ஜூலை 17 ஆம் திகதி பிரே­மா­வதி என்ற 65 வய­து­டைய தாயும் புஷ்­ப­கு­மாரி என்ற 32 வய­து­டைய மகளும் கொல்­லப்­பட்­ட­துடன் ஒக்­டோபர் 31 ஆம் திகதி யூ.ஏ. நந்­தா­வதி என்ற 66 வய­து­டைய வயோ­திப மாது கொலை செய்­யப்­பட்டார்.

இப்­ப­டி­யான ஒரு காலப்­ப­கு­தியில் தான் அதா­வது, 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொலிஸ் மா அதி­பரின் விசேட ஆலோ­ச­னைக்கு அமைய கொட்­ட­கெத்தன தொடர் கொலை­களை கட்­டுப்­ப­டுத்­தவும் குற்­ற­வா­ளி­களைக் கண்­ட­றி­யவும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­த்தன அந்த பிர­தே­சத்­துக்கு அனுப்பப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து கொட்­ட­கெத்­த­னவில் அமை­தி­யான ஒரு சூழல் ஏற்­படத் தொடங்­கி­யது. எனினும் வாஸ் குண­வர்­த்தன இட­மாற்ற­ப்­பட்டு வர்த்­தகர் சியாம் கொலை வழக்கில் கைதான பின்னர் மீண்டும் கொட்­ட­கெத்­தன திகில் மர்மம் தொடர ஆரம்­பித்­தது.

ஆரம்­பத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனை கும்­ப­லுடன் தொடர்­பு­ப­டுத்தி இந்த விவ­காரம் பேசப்­பட்­டது.எனினும் கொட்­ட­கெத்­த­னவின் பல கொலைகள் தொடர்பில் சந்­தேக நபர்கள் பலர் கைதான போதும் பெண் கொலைகள் மட்டும் நின்­ற­பா­டில்லை.

இதனால் இப்பெண் கொலைகள் பலவும் ஒரே நபரால் அல்­லது குழுவால் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றதா? அப்­ப­டி­யானால் அவர் அல்­லது அவர்கள் இன்றும் சுதந்­தி­ர­மாக திரி­கி­றார்­களா? என்ற சந்­தேகம் தவிர்க்க முடி­யா­தது.

இதற்­கு­ரிய பதிலை தர எவரும் முன்­வ­ராத போதும் கொட்­ட­கெத்தன தொடர்­பான விசேட விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுத்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்த்­தன பிர­தான சந்­தேக நபர் தொடர்­பான வெளிப்படுத்­தல்­களை செய்­துள்ளார்.

இந்த விவ­கா­ரத்தை விசா­ரணை செய்த அதி­காரி என்ற ரீதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்த்­தன சொல்­வதை அப்­ப­டியே நிரா­க­ரித்­து­விட முடி­யாது. வாஸ் குண­வர்த்­த­னவின் விசா­ரணை தக­வல்­களின் படி கொட்­ட­கெத்­த­னவில் இடம்­பெற்ற 14 கொலை­க­ளிலும் ஒரே குழுவே சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது.

இதில் வாஸ் குண­வர்த்­தன பிர­தான சந்­தேக நப­ராக ‘மாலு ராஜ ‘ என அறி­யப்­படும் நபரை பெய­ரிட்­டுள்ளார். எனினும் குறித்த நபர் இதுவரை பொலி­ஸாரால் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­துடன் அவர் இப்­போது எங்கு எப்­படி உள்ளார் என்­ப­தையே அறிய முடியாதுள்ளது.

வாஸ் குண­வர்த்­தன கொட்­ட­கெத்­த­னவில் இருந்த போது நின்­றி­ருந்த தொடர் கொலைகள் மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சரி­யாக தைப் பொங்­க­லன்று தமிழ் யுவதி ஒரு­வரின் படு­கொ­லை­யோடு மீண்டும் அரங்­கேற ஆரம்­பித்­தன.

அதன்­பின்னர் ஏப்ரல் மதம் 4 ஆம் திகதி சந்­தி­ராணி சுவர்­ண­லதா என்ற தாயின் கொலை இடம்­பெற்­றது. இது அவ­ரது மகனால் புரியப்பட்டதாக கூறப்­படும் நிலையில் தற்­போது அதன் மர்­மமும் துலங்க ஆரம்­பித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இறு­தி­யா­கவே நாதன் பாப்­புவின் கொலை இடம்­பெற்­றி­ருந்­தது. இந் நிலையில் நாதன் பாப்­புவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நீல் லக் ஷ்மன் என்ற சந்­தேக நபர் கொட்­ட­கெத்­த­னவில் இடம்­பெற்ற பல்­வேறு கொலை­க­ளுடன் தொடர்­பினை கொண்டுள்ளார் என டீ.என்.ஏ.சான்­றுகள் ஊடா­கவும் விசா­ர­ணைகள் ஊடா­கவும் புல­னாய்வுப் பிரி­வினர் உறுதி செய்­துள்­ளனர்.

குறிப்­பாக 2012 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கொட்­ட­கெத்­தன வரா­பிட்­டிய எனும் இடத்தில் கொலை செய்­யப்­பட்ட தயா­வதி மற்றும் தில­கா­வதி ஆகிய வயோ­திப சகோ­த­ரி­களின் படு­கொலை உள்­ளிட்ட ஆறு கொலைகள் தொடர்பில் தற்­போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்­தேக நபரின் டீ.என்.ஏ. கூறுகள் ஒத்துப் போவ­தாக ஜீன் டெக் கூறு­கின்­றது.

அத்­துடன் தனது மகனால் கொலைசெய்­யப்­பட்­ட­தாக பொலி­ஸாரால் கூறப்­பட்ட சந்­தி­ராணி சுவர்­ண­லதா கொலையும், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் திகதி நடந்த தாய் மகள் கொலை தொடர்­பிலும் கூட இந்த சந்­தேக நபரே தொடர்பு பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு தகவல் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

உண்­மையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி இடம்­பெற்ற வயோ­திப சகோ­த­ரி­களின் இரட்டைக் கொலையை அடுத்து குற்றம் இடம்­பெற்ற இடத்தை பரி­சோ­தனை செய்த இரத்­தி­ன­புரி தட­ய­வியல் நிபு­ணர்கள் சந்­தேக நப­ரி­னு­டை­யது என அனு­மா­னிக்கத் தக்க வெற்றிலை எச்­சிலைக் கண்­டு­பி­டித்து அதி­லி­ருந்து டீ.என்.ஏ. கூறு­களை கண்­ட­றிந்­தனர்.

பின்னர் கொலை செய்­யப்­பட்ட வயோ­திப சகோ­த­ரிகள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் அவர்­க­ளது மர்ம உறுப்பு பகு­தியில் இருந்து பெறப்­பட்ட சந்­தேக நப­ரி­னு­டை­யது என சந்­தே­கிக்கத் தக்க விந்­த­ணுவில் இருந்து டீ.என்.ஏ. பெறப்­பட்­டது.

வெற்­றிலை எச்சில் மற்றும் விந்­தணு டீ.என்.ஏ.கூறுகள் ஒத்துப் போன நிலையில் தற்­போது கைதான நபரின் டீ.என்.ஏ. மூலக் கூறுகள் அவற்­றுடன் ஒப்­பீடு செய்து பார்க்­கப்­பட்­டுள்­ளது. அதில் அத­னுடன் சந்­தேக நபரின் டீ.என்.ஏ.ஒத்துப் போவது உறு­தி­ய­ாகி­யுள்­ளது.

இதே போன்று 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கொலைசெய்­யப்­பட்ட டீ.எம்.பண்­டார மெனிகே என்ற பெண்ணின் உடலில் இருந்து பெறப்­பட்ட சந்­தேக நபரின் டீ.என்.ஏ. உடனும் தற்­போது கைதா­கியுள்ள நீல் லக் ஷ்­மனின் டீ.என். ஏ.ஒத்துப் போயுள்­ளது.

அதே நேரம் சிறி­வர்­தன முதி­யன்­ச­லாகே மெனிகே என்ற பெண்ணின் கொலை­யு­டனும் தற்­போ­தைய சந்­தேக நபரின் டீ.என்.ஏ.ஒத்துப் போயுள்­ளது.

இதனை விட பிரே­மா­வதி புஷ்­ப­கு­மாரி ஆகிய தாய் மகள் கொலை தொடர்­பிலும் அவர்­க­ளது மர்ம உறுப்பு பகு­தியில் இருந்து பெறப்­பட்ட விந்­த­ணுவில் இருந்து பெற்ற டீ.என்.ஏ. உடன் தற்­போ­தைய சந்­தேக நபரின் மர­பணுக் கூறுகள் ஒத்துப் போயுள்­ளன.

Kotakethana_lankanewsalert_15_12_2015-660x330

அதன்­படி இரு இரட்டைக் கொலைகள் உள்­ளிட்ட 6 கொலைகள் தொடர்பில் மர­பணு சோத­னைகள் நீல் லக் ஷ்­மனை சந்­தேக நப­ராக தெளி­வாக அடை­யாளம் காட்­டி­யுள்­ளன.

எனினும் மர­பணு பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாத மேலும் பல பெண்கள் கொலை­யுடன் நீல் லக் ஷ்­ம­னுக்கு தொடர்­பி­ருப்­பது புலனய்வுப் பிரிவு விசா­ர­ணையில் உறு­தி­யா­கி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

இந் நிலையில் தான் இவ்­வ­ருடம் மே மாதம் 28 ஆம் திகதி கொட்­ட­கெத்­தன தாய் மகள் படு­கொலை தொடர்பில் சட்ட மா அதிபர் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்த வழக்கில் இருந்து நான்கு சந்­தேக நபர்கள் போதிய சாட்­சியம் இன்­மையால் விடு­தலை செய்­யப்­பட்­ட­மையும் அந்த சம்­ப­வத்தை நீல் லக் ஷ்­மனே செய்­துள்­ள­மையும் உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பொலிஸார் மற்றும் வழக்குத் தொடர்ந்த சட்ட மா அதிபர் தொடர்பில் தற்­போது பாரிய சந்­தே­கங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

அதே போன்று தான் தனது காத­லிக்கு புத்­தாடை வாங்க பணம் தர மறுத்­ததால் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி தாயைக் கொலைசெய்­த­தாக அவ­ரது 18 வயது மகன் கைதுசெய்­யப்­பட்ட சம்ப­வத்­து­டனும் நீல் லக் ஷ்­மனே தொடர்பு பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தகவல் கசிந்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­கட்­டினார்.

அப்­ப­டி­யானால் இது­வரை கொட்­ட­கெத்­தன கொலை­ தொடர்பில் பொலிஸார் சரி­யான விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுக்­க­வில்லை என்றே எண்ணத் தோன்­று­வ­துடன் இது விட­யத்தில் சட்ட மா அதி­பரின் செயற்­பா­டு­களும் சந்­தே­கத்­தையே வளர்­க்கின்­றது.

dig-Vaas-Gunawardena-e1441606112575வாஸ் குண­வர்த்­தன

குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இது­வரை முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் படி, முன்னர் வாஸ் குண­வர்த்­தன கூறிய விட­யங்கள் உண்­மை­யா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றன.

ஏனெனில் பல கொலை­க­ளுடன் ஒரே நபரே சம்­பந்தப்­பட்­டுள்­ளமை தற்போதும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மையாகும். உண்மையில் தற்போது கைதுச் செய்யப்பட்டுள்ள நீல் லக்ஷ்மனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் டீ.என்.ஏ.உறுதி செய்யப்பட்ட  ஆறு கொலைகளுக்கு மேலதிகமாக மேலும் 8 கொலைகளுடன் சந்தேக நபர் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப் பட்டுளதாக அறிய முடிகின்றது.

எனவே தான் கொட்டகெத்தன தொடர் பெண் கொலை தொடர்பிலான திகில் தற்போது விலகி மர்மம் துலங்க ஆரம்பித்துள்ளது. குற்றம் ஒன்றினைச் செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்ற குற்றவியலின் சித்தாந்தத்தின் படி கொட்டகெத்தன விவகாரமும் தீர்வை நோக்கி தற்போது நகர்கின்றது.

இந்த வேளையில், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் அப்போதைய சூழலை சமாளிக்க அப்பாவிகளை சந்தேக நபர்களாக காட்டி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனரா என்பதே இப்போது எழும் புதிய பிரச்சினையாகும்.

ஏற்கனவே புலனாய்வுப் பிரிவு அது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு குற்ற விசாரணை தொடர்பில் தமது பொறுப்பை மீறிய அதிகாரிகள் உடன் சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும். அவ்வாறு இடம்ப பெற்றாலே கொட்டகெத்தன விவகாரத்துக்கு உண்மையில் விடிவு கிடைக்கும்.

-எம்.எப்.எம்.பஸீர்-

Share.
Leave A Reply