தோட்ட தொழிலாளர்களின்  வேதனம் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தீக்குளிப்பதற்காக பெற்றோலுடன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை சபையில் தீக்குளிப்பேன்: எனது தீர்மானத்தில் மாற்றமில்லை: வடிவேல் சுரேஷ் சூளுரை
19-12-2015

parlimentஇரண்டு இலட்சத்து எழுபத்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் விளையாட வேண்டாம் . 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதிநாளான நாளைய தினத்தின்  மாலை வேளையின்போது வைத்தியத்துறையினரின் சம்பளம், அரச ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும் போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்வு வேண்டும்.

இல்லையேல் தோட்டத் தொழிலாளர்ளுக்கு எதிரானவர்களையும் இழுத்துப்பிடித்து கட்டியணைத்துக் கொண்டு இந்த சபையிலேயே தீக்குளித்து அவர்களையும் மாய்த்து என்னையும் மாய்த்துக் கொள்வேன்.

எனது தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று  சபையில் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share.
Leave A Reply