அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ரயான், ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது பெற்றோருக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

தனது பெற்றோருக்கு ஸ்கைப் மூலம் வீடியோ காலிங் செய்து, “நான் விமானத்தில் இருந்து குதிக்கப்போகிறேன்…!” என்று கூறிவிட்டு, பாராசூட்டுடன் வானிலிருந்து குதித்தார்.

வீட்டிலிருந்தபடி மகனை ஸ்கைப்பில் பார்த்து கொண்டிருந்த பெற்றோர்கள் “என்ன செய்து கொண்டிருக்கிறாய்…? ஓ மை காட், அவன் விமானத்திலிருந்து குதித்து கொண்டிருக்கிறான்.

அவன் ஏதோ பேருந்தில் இருக்கிறான் என்று நினைத்தோம். விமானத்திலிருந்து குதித்து செல்ஃபி எடுத்து கொண்டிருக்கிறான்..!” என அதிர்ச்சியோடு கூறினர்.

இதனை ‘ஹாஸ்டல் வேர்ல்டு’ என்ற வீடியோ தொடருக்காக செய்ததாகவும், இதனை உங்கள் பெற்றோரிடத்தில் முயற்சிக்க வேண்டாம் என்றும் அந்த இணையதளம் கூறியுள்ளது.

Share.
Leave A Reply