பீப் பாடல் குறித்து முதன்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொலைப்பேசியில் சிம்பு பேசினார். இதோ அவர் குறிப்பிட்டுள்ள செய்தி “முதலில் இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை, எந்தவொரு ரேடியோ, டிவியில் ஒளிப்பரப்பு செய்யவும் இல்லை. இப்படி இருக்க எப்படி குழந்தைகளை இது பாதிக்கும்.

இந்த பாடல் வெளியான இதே இணையத்தில் தான் ஆபாச படங்களும் உள்ளது. அதை குழந்தைகள் பார்க்கிறார்களா. இது என்னுடைய ஒரு டம்மி பாட்டு, இந்த பாட்டில் நான் பொண்ணுங்கள திட்டி பாடவே இல்லை, பாடலை ஆண்களுக்கு அறிவுரை தான் சொல்லியுள்ளேன். பல பேர் பாடலை கேட்காமலே என் மேல் குற்றம் சாட்டியுள்ளனர்.

நான் பல நல்ல கருத்து உள்ள பாடல்களை அதிகாரப்பூர்வமாக பாடிய போதெல்லாம் ஒருவரும் மதிக்கவில்லை. அதே போல் இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவரை தேவையில்லாமல் இதில் இழுத்து விட்டனர்.

நான் எதாவது தப்பு செய்திருந்தால் முதல் ஆளாக மன்னிப்பு கேட்பவன், கடவுளுக்கு மட்டுமே பயப்படுவேன்.

இந்த சூழலில் சினிமா தரப்பில் இருந்து கூட எந்தவொரு ஆதரவும் வரவில்லை, கூட இருந்தவங்க எல்லாரும் காணாமல் போனார்கள். ஆனால் என் குடும்பம் என்னை கைவிடவில்லை, இது கடவுள் கொடுத்த வரம். அவர்கள் மட்டுமே எனக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த கடுமையான மழை வெள்ளத்தில் வீட்டில் தண்ணீர் வந்து, நெட் வசதி கூட இல்லாமல் மொட்டைமாடியில் தங்கினேன். யாருக்குமே உதவி பண்ண முடியலையே என வேதனை பட்டேன்.

இந்த நேரத்தில் ’விளம்பரத்துக்காக நான் இந்த பாடலை வெளியீட்டு இருப்பேனா’ என்று யோசியுங்கள்! ஆனால் ஒன்று என் தமிழ் மக்கள் என்னை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என் தரப்பு நியாயத்தை நான் சொல்லிவிட்டேன் என்று கண்ணீர் விட்டு அழுதார் நடிகர் சிம்பு.

 

Share.
Leave A Reply