வேலை இழப்பு, பணம் இல்லை, தொழில் நட்டம் என்பவற்றை விட ஓர் ஆணை மிகவும் நிலைகுலைந்து போக செய்வது ஆண்மைக் குறைபாடு தான்.
கருவுறுதலில் தனக்கு தான் பிரச்சனை என்பது எந்த ஆணாலும் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும், இந்த சமூகம் தன்னை ஓர் கையாலாகாதவன் என்று பச்சைக் குத்திவிடுமோ என்ற அச்சம் ஆண்களுக்கு இருக்கிறது.
ஆண்மைக் குறைபாடு குறித்த பல கட்டுக்கதைகள் நமது ஊர்களில் கூறப்படுகிறது. லேப்டாப், மொபைல் பயன்படுத்துவது, மன அழுத்தம், உடல் எடை என பலவன ஆண்மைக் குறைபாட்டிற்கு காரணம் என்று பரவலாக கூறிவருகிறார்கள்.
ஆனால், இதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி தான் இனி நாம் காணவிருக்கிறோம்…..
21-1450672153-1mythsandfactsaboutmaleinfertility

இது பெண்கள் சமாச்சாரம்
நிறைய ஆண்கள் குழந்தை பேறு இன்மைக்கு பெண்கள் தான் பெருமளவு காரணம். இதற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கருதுகிறார்கள்.
ஆனால் 40% ஆண்களுக்கு தான் இது சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு ஆயிரம் ஆயிரம் பரிசோதனைகள் இருப்பினும். ஆண்கள் விந்தணு சார்ந்த ஓர் பரிசோதனையில் கூட ஈடுபடுவதில்லை.
21-1450672159-2mythsandfactsaboutmaleinfertility
மன அழுத்தம்
ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்பட மன அழுத்தம் பெருமளவு காரணமாக இருக்கிறது என கூறப்படுவது பொய். மன அழுத்தம் காரணமாக உடலுறவு சமாச்சாரம் வேண்டுமானால் பாதிக்கப்படுமே தவிர, விந்தணு உற்பத்தி அல்லது திறன்பாடு குறைவதில்லை.
21-1450672165-3mythsandfactsaboutmaleinfertility

விதைப்பை குளிர்ச்சி
சிலர் விதைப்பையை குளுமைப்படுத்துவதால் விந்தணு திறன் அதிகரிக்கும் என எண்ணுகிறார்கள். ஆனால், இது உண்மை அல்ல, இதனால் எந்த பயனும் அடைய முடியாது. மற்றும் விந்தணு உற்பத்தி சீராக இருக்க நீங்கள் இறுக்கமான உள்ளாடை உடுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
21-1450672173-4mythsandfactsaboutmaleinfertility

வயதானவர்கள் மட்டும்
ஆண்மைக் குறைபாடு என்பது வயதானால் தான் ஏற்படும் என்றில்லை. விந்தணு உற்பத்தி குறைபாடு அல்லது எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களினால் 20 வயது ஆண்களுக்கு கூட ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம்.21-1450672183-5mythsandfactsaboutmaleinfertility

விந்தணு நச்சுத்தன்மை
புகை மற்றும் குடி ஆகிய பழக்கங்கள் விந்தணுவில் நச்சுத்தன்மையை அதிகரித்து, திறன் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
21-1450672190-6mythsandfactsaboutmaleinfertility

ஊட்டச்சத்து
ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் சி, ஜிங்க், செலினியம், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் போன்றவை விந்தணு உற்பத்திக்கு உதவுகின்றன.
21-1450672195-7mythsandfactsaboutmaleinfertility
மொபைல் போன்கள்
மொபைல் போன் கதிர்வீச்சு ஆண்மைக் குறைப்பாடு ஏற்படுத்துகிறது என்ற கருது நிலவுகிறது. இதன் எலக்ட்ரோ மேக்னடிக் அலைகள் விந்தணு சேதம் ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால், இதுக் குறித்த ஆய்வுகள் பெரியளவில் ஏதும் நடத்தப்படவில்லை.
21-1450672202-8mythsandfactsaboutmaleinfertility

ஏற்கனவே குழந்தை
முன்பு குழந்தை பெற்றிருந்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படாது என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் காரணங்களால் ஆண், பெண் இருவருக்கும் கருவுறுதலில் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.21-1450672210-9mythsandfactsaboutmaleinfertility

உடல் எடை
உடல் எடை ஆண்களின் ஆண்மையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது பொய். BMI எனப்படும் உடல் எடை அளவு கோளில் 20 – 25 எனும் அளவில் இருப்பவர்களுக்கு நல்ல விந்தணு உற்பத்தி இருக்கிறது, இதுவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது குறைவு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
21-1450672217-10mythsandfactsaboutmaleinfertility
தினமும் உடலுறவு
தினமும் உடலுறவில் ஈடுபடுவது கருவுறுதலை அதிகப்படுத்தும் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், தினமும் உடலுறவில் ஈடுபடுவது கருவுறுதலை அதிகப்படுத்தாது. பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் சரியான நாளில் உடலுறவில் ஈடுபடுவதனால் தான் கருத்தரிக்க முடியும். Show Thumbnail
Share.
Leave A Reply