நடிகைகள் என கூறி வெளிநாட்டவர்களுக்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த வலையமைப்பொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதனை இரண்டு பேர் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் நட்பைப் பேணியதன் மூலம் குறித்த வலையமைப்பு சிக்கியுள்ளது.
தம்மிடம் வெளிநாட்டுப் பெண்கள் இருப்பதாகவும் அவர்களுக்கான கட்டணம் 40,000 – 50,000 ரூபா எனவும் குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாதுவையில் உள்ள பிரபல ஹோட்டலில் அவர்களுக்கான அறைகள் பெறப்படவேண்டுமெனவும் குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை வைத்தே அவ்வலையமைப்பு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வலானை மோசடி தடுப்பு பிரிவினர் நடத்திய மேற்படி சுற்றிவளைப்பில் பெண்கள் இரண்டு பேரும் கைதாகியுள்ளனர்.அவர்களின் வயது 21 மற்றும் 27 என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் மதுகம மற்றும் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.