டந்த வாரத்தில் இருந்து நியூ ஜப்னா (www.newjaffna) நியூ டமில் (http://newtamils.com/) மற்றும் அதிர்வு http://www.athirvu.com) போன்ற இணையங்களில் பரவலாக ஒரு பெண் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

அதைவிடவும் பல நூறு பேர் அதனை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் எந்தப் பெண் குறித்து பதிவிட்டிருந்தார்களோ அந்த பெண் என்னை அனுகி “நான் பிழை செய்யவில்லை அதனால் இதற்கு மறுப்பு தெரிவித்து என்னுடைய ஒளிப்பதிவினை வெளியிட்டு உதவ முடியுமா? என்று கேட்டிருந்தார்.

நாமும் மேற்குறிப்பிட்ட நாலாந்தர இணையங்களைப் போன்று ஆதாரங்கள் இன்றியோ அல்லது ஊடக தர்மங்களை மீறியோ செயற்பட்டுவிட கூடாது என்பதால் ஒருவார காலத்தின் பின்னர் பல்வேறுபட்ட விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளின் பின்னர் இவ் ஒளிப்பதிவை பதிவிடுகின்றோம்.

பெண் மீதான வன்முறைகளுக்கெதிராக என்ன தான் காலம் காலமாக போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் வன்முறைகளின் வடிவங்களும் தளங்களும் தான் மாற்றமடைகின்றனவே தவிர அவை தொடர்ந்த வண்ணம் தானிருக்கின்றன.

தற்போது அத்தகையதொரு தளத்தினை “சமூக ஊடகங்களும் இணையங்களும்” அமைத்துக் கொடுத்துக் கொண்டிருப்பது ஒன்றும் நமக்குத் தெரியாததுமல்ல புதியதுமல்ல.

முகநூல் மற்றும் இணையங்களில் “நகைச்சுவை துணுக்குகள் முதல் சமுதாயத்தினை சீர்திருத்துகின்றோம்” என்ற பெயரில் பெண்கள் மீதான வன்முறைகளை தொடர்வது வரை தொழில்நுட்பமும் அதன் பின்னிருக்கும் மனித வலுக்கலும் வெற்றி கண்டுகொண்டுதானிருக்கின்றன.

ஒரு வன்முறையின் பின்னர் கூட பாதிக்கப்பட்ட பெண்ணின் உடைகளும் சம்பவ நேரத்தினையும் அவள் குறித்த சுயத்தினையும் அலசுகின்ற சமுதாயத்தில் எப்போதும் “பாதிக்கப்பட்டவள்” தான் கருத்துகளுக்கான கருவாகின்றாளே தவிர பாதிப்பினை ஏற்படுத்தியவர்களது நிழல்கூட திரைச்சீலைகளால் போர்த்தப்பட்டு விடுகின்றது.

இதைவிட கொடுமை என்ன நடந்தது என்பதே தெரியாமல் “அவள்’ எப்படி ஊடகங்களில் பேசுபொருளாகின்றாள் “அவள்’ சுயம் பகிரப்படுகின்றது.

பேனை எடுத்தவரெல்லாம் ஊடகவியலாளராகவும், தொழில்நுட்பம் தெரிந்தவரெல்லாம் இணையதள நடத்துநர்களாகவும் இருக்கும் போது மேற்கூறியவை சாத்தியப்படுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.

தமது பக்கங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பாலியல் சார் செய்திகளை வரையறையின்றி, எந்த ஊடக தர்மமும் இன்றி, எந்த சமூகப் பொறுப்புமின்றி வெளியிடும் இந்த அயோக்கியர்கள் விபச்சாரிகள் என்று சொன்னால் மிகையில்லை.

இவ்வாறான ஊடகங்கள் முதல் தடவையல்ல. பெண்களை அவதூறு செய்கின்ற இத்தகைய பல செய்திகளை இதற்கு முன்னரும் வெளியிட்டே வந்திருக்கிறது. இதற்க்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

இதுபோன்ற இந்த இணையத்தளங்களுக்கு சென்று நாங்கள் கூறும் விடயத்தை வாசகர்களாகிய நீங்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

இந்த இணையத்தளங்களை, அம்பலப்படுத்தி, கண்டித்து, தண்டிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள் இயலுமானவரை இதனை செய்யுங்கள். இப்படி இயங்குகின்ற இனிவரும் ஏனைய ஊடகங்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.

தன்னைப்பற்றி அவதூறான செய்தி வந்தவுடன் நம் சமுதாய பெண்களைப் போல் முடங்கி விடாமல், ஒளிந்து கொள்ளாமல் தானாக முன்வந்து அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொண்ட இப்பெண்ணை போல் இனிவரும் காலங்களிலும் ஏனையவர்கள் முன்வர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைப்பதுடன்…,

இது குறித்த தகவல்கள் அறிந்தவர்கள், இவ் இணைய தளங்களுடன் தொடர்புடையவர்களை தெரிந்தவர்கள், முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் என்னை பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

நாட்டு மக்களில் அதிக பொறுப்புக்குரியவர்களும், பக்குவம் பண்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டியவர்களும் ஊடகத்துறையினர்.

ஆனால் வளர்ந்துள்ள ஊடகங்கள் முதல் சாதாரண வாசகர் வட்டத்தை பார்வையாளர்களைக் கொண்ட ஊடகங்கள் வரை இது கடைப்பிடிக்கப் படுகின்றதா?

ஒருவரின் படம், பெயர், முகவரியை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது. ஆனால் நான் குறிப்பிட ஊடகங்கள் சமூகத்தை திருத்துவதாக நினைத்து தனிப்பட்டவரிகளின் எதிர்கால வாழ்க்கையை பாழாக்கின்றது அல்லவா? எனவே சிந்தியுங்கள் செயற்படுங்கள்..!!

(தகவலை அனுப்பி வைத்தவர்.. முகப்புத்தக நண்பர்)

 

 

Share.
Leave A Reply