நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் முகமூடி அணிந்து வந்து பணத்தை கொள்ளை அடிப்பது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு.

கடந்த வியாழக்கிழமை அன்று இதேபோன்ற சம்பவம் ஒன்று நியூயார் நகர் அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் நடந்தது.

58 வயது இந்திய வம்சாவளி சீக்கியரான அமிர்க் சிங் கடைக்கு, முகமூடி அணிந்து கையில் நிண்ட துப்பாக்கியுடன் வந்த கொள்ளையன் கல்லாவில் இருக்கும் பணம் அனைத்தையும் கேட்டான்.

கடையில் இருந்த அமிர்க் சிங் முதலில் கல்லாவில் இருந்த பணத்தை கொடுதார். ஆனால் திருப்தியடையாத கொள்ளையன் கல்லா அருகில் வந்து பணத்தை எடுத்ததும் கோவம் கொண்ட அமிர்க் சிங் அவனை தள்ளிவிட்டார்.

பின் அருகில் இருந்த செருப்பை எடுத்து அவன் முகத்தில் அடித்தார். இதில் அவன் மூக்கில் காயம் ஏற்பட்டது.

இதை பயன்படுத்தி கொள்ளையனை தாக்க தொடங்கினார் வயதான அமிர்க் சிங். இதனால் பயந்து போன திருடன் கையில் துப்பாக்கி இருபதைக்கூட மறந்துவிட்டு ஓட தொடங்கினான்.

அமிர்க் சிங்கும் விடாமல் அவனை துரத்திக்கொண்டு ஓடினார். கடையை விட்டு வெளியே ஓடிய கொள்ளையனை வெளியில் நின்ற தனது காரை எடுதுக்கொண்டு தப்பிவிட்டான்.

தனது உயிரை பணயம் வைத்து கொள்ளையனை விரட்டியடித்த அமிர்க் சிங்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் இது போன்ற செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என்று காவல்துறை கோரிகை விடுத்துள்ளது.

Share.
Leave A Reply