லண்டன்: பிரான்ஸ் நாட்டுப் பெண்கள்தான் பாலியல் உறவின்போது பொய்யான உச்சநிலையை (ஆர்கசம்) அதிகம் வெளிக்காட்டுகிறார்களாம். பிரான்ஸில் பெரும்பாலான பெண்கள் உண்மையான ஆர்கஸத்தை வெளிப்படுத்துவதில்லையாம்.
இத்தனைக்கும் ரொமான்ஸுக்குப் பெயர் போனது பிரான்ஸ். ஆனால் அந்த நாட்டுப் பெண்களோ அதற்கு நேர் மாறாக உள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தான். அமெரிக்கப் பெண்கள் இந்த விஷயத்தில் 2வது இடத்தில் உள்ளனர்.
சர்வதேச ஆர்கசம் தினத்தையொட்டி எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ்
இப்பட்டியலில் முதலிடத்தில் பிரான்ஸ் உள்ள நிலையில், அடுத்த இடங்களில் அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி ஆகியவை உள்ளன.
கிளைமேக்ஸுக்கு கஷ்டம்
பிரெஞ்சுப் பெண்கள் உண்மையில் உச்ச நிலையை எட்டுவதற்கு சிரமப்படுகிறார்களாம். இதனால்தான் போலியான முறையில் உச்சத்தை எட்டியதாக காட்டிக் கொள்ல முனைகிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
போராடுகிறோம்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 49 சதவீதம் பேர், உச்சநிலையை எட்டுவதற்குத் தாங்கள் போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக கூறியுள்ளனர்.
இங்கிலாந்துப் பெண்கள்
இங்கிலாந்துப் பெண்களில் 41 சதவீதம் பேர் உச்சத்தை எட்டுவதற்கு சிரமப்படுவதாக கூறியுள்ளனர்.