சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வயோதிப தம்பதியொன்று வீட்டு வாடகை செலுத்துவதைத் தவிர்க்க கடந்த 10 வருட காலமாக கிணறொன்றில் வாழ்ந்துவருவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு சீனாவில் ஹெனான் மகாணத்தில் ஸென்ஸொயு எனும் இடத்தைச் சேர்ந்த மா புலேயி என்ற மேற்படி கணவரும் அவரது மனைவியும் 10 வருடங்களுக்கு முன்னர் 16 அடி ஆழமான அந்தக் கிணற்றில் வசிக்க முடிவெடுத்தனர்.
அந்தத் தம்பதி அந்த கிணற்றில் குடிவருவதற்கு முன்னர் அது பாடசாலையொன்றால் மின்சக்திப் பிறப்பாக்கியை வைப்பதற்கான அறையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அந்த கிணற்றின் 538 சதுர அடி அளவான பரப்பளவைக் கொண்ட அடித் தளமானது தொலைக்காட்சிப்பெட்டி, குளி ர்சாதனப்பெட்டி, குளிரூட்டி, சலவை இயந்திரம், தண்ணீர்த் தாங்கிகள் மற்றும் தளபாடங்கள் என்பனவற்றை உள்ளடக்கி ஒரு முழுமையான வீடாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கிணற்று வீட்டில் தனித்து வாழும் அந்தத் தம்பதியை அவர்களது பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்து வருகின்றனர்.
அந்த வீட்டிற்கு செல்வதற்கென அந்தக் கிணற்றின் உட்புறச் சுவரில் ஏணிகள் மற்றும் படிகள் போன்ற கட்டமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மா புலேயி பொறியியல் திணைக்களத்தில் நிலத்திற்குக் கீழான பராமரிப்பு பணியில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் மா புலேயிக்கும் அவரது மனைவிக்கும் அந்தக் கிணற்றில் தற்காலிகமாக தங்கிக் கொள்ளவே அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்ததாக ஸென் ஸொயு பிராந்திய அதிகாரியொரு வர் தெரிவித்தார்.