மட்டக்களப்பு நகரில் நேற்றிரவு பிச்சைக்காரனிடம் குழந்தையொன்றைக் கொடுத்து விட்டு பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையொன்றையே பெண்ணொருவர் அவ்விடத்தில் நடமாடிய யாசகம் பெறும் பிச்சைக்காரனிடம் கொடுத்து பணம் தருமாறு கேட்டுள்ளார்.
பிச்சைக்காரண் பணம் கொடுக்க மறுக்கவே குறித்த பெண்; குழந்தையை பிச்சைக்காரணிடம் கொடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
குறித்த பிச்சைக்காரண் அங்கு வந்த சிலரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்ததையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த குழந்தையைப் பெற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த குழந்தை ஆண் குழந்தை என பொலிசார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.