முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை கீழாக தொங்கி யோகாசனம் செய்யும் படமொன்று இணையம் மற்றும் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றது.

இந்நிலையில் நேற்று இது தொடர்பில் மஹிந்தவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் , நாமல் ராஜபக்ஷவே இப்படத்தை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.

நீண்டநாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ள படமென தெரிவித்துள்ள அவர் , நாமல் காரியத்தை கெடுத்துவிட்டதாக சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

மேலும் தான் இவ்வாறு இருப்பதற்கு யோகவே காரணமெனவும் தெரிவித்துள்ளார்.

‘கோட்டாவைக் காட்டிக் கொடுத்தால் உடன் விடுதலை’

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகச் வாக்குமூலமளிக்க, படைவீரர்களுக்கு அழுத்தம் வழங்கப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்களைப் பார்வையிடுவதற்காக, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த போதே அவர், இக்கருத்தைத் தெரிவித்தார்.

mahinda-visit-welikada‘கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸில் வாக்குமூலமளிக்க, இந்த இராணுவ வீரர்களுக்கு அழுத்தம் வழங்கப்பட்டது. அரசாங்க அதிகாரிகளையும் குற்றவியல் விசாரணைப் பிரிவையும் பயன்படுத்தி, இந்த அரசாங்கத்திலுள்ள பலமிக்க அரசியல்வாதிகள், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதை நாம் அறிந்தோம்.

இந்தச் சம்பவம் உள்ளடங்கலாக, இராணுவ வீரர்கள், கலைஞர்கள், தொழில் நிபுணர்களைக் கைது செய்தமையும் விசாரணைக்குட்படுத்தியமையும், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டது’ என அவர் தெரிவித்தார்.

அத்தோடு, கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிவித்தால், உடனடியாக விடுதலை கிடைக்குமென, இவர்களில் ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

முதலில்  எக்னெலிகொட உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்று எமக்குத் தெரிய வேண்டும்.

எக்னெலிகொட கடத்தப்பட்டது தொடர்பாக எனது அரசாங்கத்தின் காலத்திலும் விசாரிக்கப்பட்டது. ஆனால், அப்பாவி இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை.

எக்னெலிகொட கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில், புலனாய்வு அதிகாரிகள் பலரையும் இந்த அரசாங்கம் கைது செய்துள்ளது.

சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர், சிலர் வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதிக்கின்ற செயல்” என்று தெரிவித்துள்ளார்.

தான் ஆட்சியில் இருக்கும் போது, எக்னெலிகொட விவகாரம் தொடர்பாக விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், ஆதாரங்களின்றிக் கைதுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்

Share.
Leave A Reply