யுத்­த­மு­மற்ற சமா­தா­ன­மு­மற்ற சூழலில் பெரும்­பான்மை பிர­தான கட்­சி­களின் கூட்­டணி ஆட்­சியில் அமர்ந்­தி­ருக்­கின்ற நிலையில் தமி­ழி­னத்தின் எதிர்­காலம் எவ்­வா­ற­மை­யப்­போ­கின்­றது என்­ற­தொரு வினா அனைவர் மத்­தி­யிலும் உறைந்திருக்­கின்ற நிலையில் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தமிழ்­ மக்­களின் நலன்­களைப் பாது­காப்­ப­தையும் வலியுறுத்துவ­தையும் நோக்­காகக் கொண்டு வடக்கு மாகாண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன், வைத்­திய நிபுணர் பு.லக் ஷ்மன், மட்­டக்­க­ளப்பு மாவட்ட சிவில் சமூ­கத்தின் செய­லாளர் ரி. வசந்­த­ராஜா ஆகி­யோரை இணைத் தலைமை­யா­கவும் மதத் தலை­வர்­க­ளையும் தமிழ் அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உறுப்­பி­னர்­க­ளாகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டுள்­ளது.

அவ்­வா­றி­ருக்­கையில் தமிழ் மக்கள் பேரவை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு உடைச்­சலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உருவாக்­கப்­பட்­டுள்­ளது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிள­வ­டைந்து விட்­டது, புதிய அர­சியல் கட்சி ஆரம்­பித்­து­விட்­டது போன்ற நேர்­ம­றை­யான கருத்­துக்கள் எழுந்த அதே­ச­மயம் தமிழ் மக்­க­ளுக்­காக கொள்­கை­யுடன் செயற்­படும் ஜன­நா­யக அமைப்­பொன்று உருவாகி­விட்­டது, அர­சியல் தீர்வு நோக்கி பய­ணிப்­ப­தற்­கா­கவும் இனத்தின் பாது­காப்பை உறுதிப்படுத்துவ­தற்­கா­கவும் இந்த அமைப்பு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­மென ஆத­ர­வான கருத்­துக்­களும் வெளிப்படுத்தப்­பட்டு வரு­கின்­றன.

தமிழ் மக்கள் பேரவை தொடர்­பான இரு­வே­று­பட்ட நிலைப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்ற நிலையில் சில விட­யங்­களை ஆழமாக அவ­தா­னிக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மா­கி­யுள்­ளது.

கடந்த காலம்

தமி­ழி­னத்தின் உரி­மை­க­ளுக்­கான வேட்­கை­மிகு பயணம் எப்­போ­துமே தனித்­து­வ­மா­னது. உரி­மைகள் மறுக்­கப்­பட்டு அடக்­கு­மு­றைக்குள் அமிழ்த்­தப்­பட்ட இன­மாக்­கு­வ­தற்கு பேரி­ன­வாதம் என்று முதன்­மு­த­லாக முனைந்­ததோ அன்றிலிருந்து இன்­று­வ­ரையில் உரி­மை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தமி­ழினம் போராடிவ­ரு­கின்­றது.

போராட்ட வடி­வங்கள் மாற்­ற­ம­டைந்­தி­ருந்­தாலும் இலக்கு ஒன்­றா­கத்தான் இருந்­தது. அதனை அடை­வ­தற்­காக கொள்கையும் ஒன்­றா­கத்தான் இருந்­தது.

தற்­போதும் இருந்­து­வ­ரு­கின்­றது. கொள்­கையில் பற்­று­று­தி­யுடன் நின்று இலக்கை அடை­வ­தென்­பது முள்­ளாணி மீதான பய­ண­மென்­பதை அப்­போ­தைய அர­சியல் தலை­வர்­களும், அதன்பின் ஆயு­த­மேந்­திப்­போ­ர­டி­ய­வர்­களும் நன்கறிந்திருந்தனர்.

கொள்கை ரீதி­யாக உரி­மைப்­போ­ராட்­டத்தின் வேட்கை அகிம்­சை­வ­ழி­யிலும் சரி ஆயு­த­வ­ழி­யிலும் சரி முழு­வீச்­சுப்­பெற்று உய­ரிய இடத்தில் காணப்­ப­டும்­போது பேரி­ன­வாத ஆட்­சி­யா­ளர்­களின் பேரம்­பே­சல்­க­ளுக்கோ அல்­லது பிரித்­தாளும் தந்திரத்­திற்­குள்ளோ தமி­ழி­னத்­திற்கு தலை­மை­தாங்க வரு­ப­வர்கள் சிக்­கிக்­கொள்­வ­தென்­பது தலை­வி­தி­யா­கவே உள்­ளது.

எத்­த­னையோ சதித்­திட்­டங்­க­ளுக்கு மத்­தி­யிலும் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யிலும் தமிழ் மக்கள் கொள்­கையை விட்டு தடம்­மா­றி­யி­ருக்­க­வில்லை.

அர­சியல் கட்­சிகள், விடு­த­லைப்­போ­ராட்ட அமைப்­புக்கள், தலைமை தாங்க முன்­வந்­த­வர்கள் என்பவற்­றுக்கும் பின்னால் வெறு­மை­யாக செல்­ல­வில்லை. மக்­களின் கொள்­கையை ஏற்று அதனை அடை­வ­தற்கு திரா­ணி­யு­டைய சக்­தி­களின் பின்னா­லேயே அணி­தி­ரண்­டனர்.

151220105341_tamil_people_council_sri_lanka_tamil_makkal_peravai_512x288_bbc_nocreditபோக்கில் மாற்றம்

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­காலில் அனைத்­தையும் முடித்­து­விட்­டோ­மென அர­சாங்கம் அறிவித்ததன் பின்­ன­ரான சூழலில் மிலேச்­சத்­த­ன­மான செயற்­பா­டு­களால் தமி­ழினம் பெரும் அவ­லங்­களை சந்தித்துள்ளது என்பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

கொள்­கை­யின்பால் நின்று இலக்கை அடை­வ­தற்­காக அணி­வ­குத்துச் சென்­று­கொண்­டி­ருக்கும் இன­மொன்­றுக்கு இழப்புக்களும் ஏமாற்­றங்­களும், வலி­களும் புதி­ய­வை­யல்ல.

இருப்­பினும் முள்­ளி­வாய்க்­காலில் அனைத்தும் முடிந்­து­விட்­டதா என்­ற­வொரு ஏக்கம் ஒவ்­வொரு தமிழ்­ம­க­னி­னதும் அடி­ம­னதில் இயல்­பாக எழுந்­தி­ருந்­தது என்­பது மறு­த­லிக்க முடி­யாத யாதார்த்த உண்­மை­யா­க­வி­ருக்­கின்­றது.

இத்­த­கைய சூழலில் தமி­ழர்­களின் இலக்­கு­களை அடை­வ­தற்­கான பய­ணத்தை தொட­ரு­வ­தற்­கான முழுப்­பொ­றுப்பும் வடகி­ழக்கில் மக்கள் ஆணை­பெற்­றி­ருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பிடம் சென்­ற­டைந்­தது.

அதற்­கான வகி­பா­கத்தைப் இத­ய­சுத்­தி­யுடன் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஏற்­றுக்­கொண்­டி­ருந்­த­போதும் கூட்டமைப்பு ஒரு கட்­ட­மைப்­பாக ஏகோ­பித்த செயற்­பா­டுகள் படிப்­ப­டி­யாக குறை­வ­டைய ஆரம்­பித்­தன.

குறிப்­பாக தமி­ழ­ர­சுக்­கட்சி தனது ஆதிக்­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான உந்­து­தலை கட்­சி­யினுள் அதீ­த­மாக முன்­னெ­டுக்க ஆரம்­பித்­தது.

அடுத்­த­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட முடி­வுகள் என்­பன கூட்­ட­மைப்­புக்குள் விரி­சல்கள் வலுத்­தி­ருந்­த­மையை வெளிப்படுத்தி நின்­றன.

அந்த நிலை­மை­களை அதன் தலை­மையே ஏற்­றுக்­கொண்­டி­ருந்­த­தோடு ஜன­நா­யக கட்­ட­மைப்பில் அவ்­வா­றான நிலைமைகள் காணப்­ப­டு­வது சக­ஜ­மா­ன­தெ­னவும், அதனை பெரி­து­ப­டுத்­த­வேண்­டிய அவ­சி­ய­மில்­லை­யெ­னவும் கூறியிருந்­தது.

எனினும் நாளொ­ரு­மே­னி­யும்­பொ­ழு­தொரு வண்­ண­மு­மாக தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தனி­ந­பர்கள் சார்ந்த செயற்­பா­டுகள் உச்சகட்­ட­டத்தை அடைந்­து­வந்­த­மையால் மாற்­றுத்­த­லைமை அவ­சியம், கூட்­ட­மைப்­புக்கு நிக­ரான சக்தி உருவாக்கப்படவேண்டும் போன்ற கருத்­துக்கள் அர­சியல் ஆய்­வா­ளர்கள், துறைசார் நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்கள் மற்றும் பத்தி எழுத்­தா­ளர்­களால் வெகு­வாகச் சுட்­டிக்­காட்­டப்­பட்டு வந்­தது.

மறு­பு­றத்தில் கூட்­ட­மைப்­பினை பிள­வு­ப­டுத்­து­வது தமிழர் அர­சியல் பல­வீ­னத்­ததை ஏற்­ப­டுத்­தி­விடும் என்­பதும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

தொடர்ந்த மறு­த­லிப்­புக்கள்

யுத்­தத்தின் பின்­ன­ரான நிலை­மையில் தமிழ் மக்­களின் அர­சியல் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்­கு­ம­ள­விற்கு அதிகாரத்தைக்கொண்­டி­ருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மத்­தியில் இருந்த பேரி­ன­வாத ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சிம்மசொப்­ப­ன­மா­கவே இருந்­தது.

அவ்­வா­றி­ருக்­கையில், உரி­மை­க­ளுக்­காக போராடும் மக்கள் சக்தி பெற்ற கூட்­ட­மைப்பு கட்­ட­மைப்பு சார் அமைப்­பாக உருவாக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது மிக­முக்­கி­ய­மான விட­ய­மா­க­வி­ருந்­தது.

விடே­ச­மாக இலங்கை அர­சி­யலின் பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி போன்­ற­வற்றில் இருக்கும் கட்­ட­மைப்­புக்­க­ளுக்கு நிக­ராக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்­ய­வேண்டும், அர­சியல் தீர்வு திட்டம் தொடர்­பாக நிபு­ணத்­துவ குழு அமைக்­கப்­பட்டு வரைபு தயா­ரிக்­கப்­ப­ட­வேண்டும்,

பொது­மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­பட்டு உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும், வெளியு­ற­வுக்­கொள்­கைகள் வகுக்­கப்­பட்டு கையாள்­வ­தற்­கான குழு­வொன்று அமைக்­கப்­ப­ட­வேண்டும், மக்­களின் பொதுப்­பி­ரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான செயற்­றிட்­டங்கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்,

இளைஞர் அமைப்­புக்கள், கிராம மட்­டத்­தி­லான அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும், சிவில் அமைப்­புக்கள், தமிழ்த்தே­சிய கட்­சிகள் அனைத்­தையும் உள்­ள­டக்­கிய தமிழ்த்­தே­சிய சபை­யொன்றை நிறு­வுதல், வலு­வான ஒரு ஊடகத்தை ஸ்தாபி­த்தல், விசேட சந்­திப்­புக்­களின் போது ஒன்­று­பட்ட கருத்தில் பரிந்­து­ரை­க­ளைச்­ செய்­வ­தற்­கான கலந்துரை­யா­டல்கள், வெளிப்­ப­டைத்­தன்­மை­யான செயற்­பாடு போன்ற கட்­ட­மைப்பு சார் பரிந்­து­ரை­களை தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சிகள் உட்­பட துறைசர் நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்­களால் உள்­நாட்­டிலும் வெளிநாட்­டிலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.

இருப்­பினும் இந்த விட­யத்தில் தமி­ழ­ர­சுக்­கட்சி நாசுக்­கான நழு­வல்­போக்­கு­க­ளையே கையாண்டு வந்­தது.

அது­மட்­டு­மன்றி தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தனி ஆதிக்­கத்தை வலுப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களே தொடர்ந்­து­கொண்­டி­ருந்­த­மையால் கூட்டமைப்பின் கட்­சி­க­ளுக்குள் சம­நி­லைத்­தன்­மையென்ற நிலை உரு­வெ­டுத்­தது.

அத்­துடன் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சின்­னத்­தி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வந்­த­மையால் தமிழரசுக்கட்சி தானா­கவே கையி­லெ­டுக்கும் அதி­கா­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­ம­ள­விற்கோ பங்­கா­ளிக்­கட்­சி­களால் முடிந்திருக்­க­வில்லை.

இதனால் பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டங்கள், ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டங்கள் அனைத்­துமே தீர்­மா­ன­மின்றி நிறைவடைந்தன.

கூட்­ட­மைப்பு பங்­கா­ளி­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்தல் போன்ற ஒரு சில விட­யங்­களில் இணக்கம் காணப்­பட்­டி­ருந்­தாலும் அதற்கு செயல்­வ­டி­வ­ம­ளிக்கும் வகை­யி­லான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதற்­கான ஏது­நி­லை­களை தமி­ழ­ர­சுக்­கட்சி வழங்­கி­யி­ருக்­க­வு­மில்லை.

இவ்­வா­றான நிலை­மைகள் தொடர்ந்­தமை மட்­டு­மல்­லாது ஜனா­தி­பதி தேர்­தலின் பின்­ன­ரான நிலை­மைகள் முற்­றிலும் வேறு­பட்­ட­தா­கவே இருந்­தது.

விசே­ட­மாக ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு வழங்கும் முடிவு, அதன் பின்னர் ஐக்­கிய நாடுகள் சபையின் 30ஆவ­து­ம­னித உரி­மை­பே­ரவைக் கூட்­டத்­தொ­டரில் இலங்கை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்­ளு­ம­ள­விற்கு தீர்­மானம் பல­வீ­ன­மாக்­கப்­பட்ட நிலையில் அதற்கு ஏகோ­பித்த ஆதரவு,

2016ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் குறைகள் நிறைந்­துள்­ளன, வட­கி­ழக்­கிற்கு விசே­ட­மாக எது­வுமே இல்லை என்­பது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பதி­னாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் சபையில் சுட்டிக்காட்டப்பட்­டி­ருந்­த­தோடு மட்­டு­மன்றி, பாது­காப்­பிற்கு வர­லாறு காணாத நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பது சுட்டிக்காட்டப்பட தவ­ற­வி­டப்­பட்­டி­ருந்­த­தோடு, 16திருத்­தங்கள்  உள்­வாங்­கு­ம­ள­விற்கு மோச­மாக காணப்பட்டவொன்றுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்பு ஆகி­ய­வற்றை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு நல்­லெண்ண சமிக்ஞை என்ற பெயரில் செய்­தி­ருந்­தது.

மேற்­கு­றித்த இவ்­வி­ட­யங்­க­ளின்­போது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு கூடி­யா­ராய்ந்­தி­ருக்­க­வில்லை, பங்காளிக்கட்சித் தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­க­வில்லை, தீர்­மானம் எடுக்­கப்­பட்­டமை தொடர்பில் தெளிவுபடுத்­தல்கள் இல்லை, வெளிப்­ப­டைத்­தன்­மை­யில்லை என்­பதை அனை­வ­ருமே ஏற்­றுக்­கொண்­டனர்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்­கி­டையில் கலந்­து­ரை­யா­ட­வில்­லை­யென்­பது ஒரு­பு­ற­மி­ருக்­கையில் தமி­ழ­ர­சுக்­கட்சியினுள் கூட இவ்­வி­ட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்டு முடி­வுகள் எட்­டப்­ப­ட­வில்லை.

b55eae69-2bd4-401c-b204-b797945652791வெறு­மனே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், சுமந்­திரன் என்ற இரண்டு சக்­தி­களே தீர்­மா­னிக்கும் அதி­கா­ரத்தை கொண்­டி­ருந்­தன. அதற்­க­மை­வா­கவே தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

தற்­போது அர­சாங்கம் வாக்­கு­று­தி­களை அள்­ளி­வ­ழங்­கி­யி­ருக்­கின்­ற­போதும் அவற்­றினை முன்­னெ­டுப்­ப­தற்­கான சமிக்ஞை­களை காண­மு­டி­யா­தி­ருக்­கின்­ற­து.

அவ்­வா­றி­ருக்­கையில் நல்­லெண்ண சமிக்ஞை என்ற நிலையில் அனைத்­தையும் விட்­டுக்­கொ­டுத்­துக்­கொண்­டி­ருக்கும் நிலை­மையில் தமிழர் அர­சியல் இந்தத் தலை­மை­யிடம் இருப்­பதைத் தொடர்ந்தும் அனு­ம­திக்­க­மு­டி­யுமா என்­ற­தொரு பெரு­வினா எழுந்­தது.

அதன் பிர­தி­ப­லிப்­பா­கவும், வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்ற நிலையில் மூடிய அறை­க­ளுக்குள் நடை­பெறும் உரை­யா­டல்­களும், அத­னைத்­தொ­டர்ந்து எடுக்­கப்­படும் தீர்­மா­னங்­களும், தனிக்­கட்சி, தனி­ம­னித முடிவுகளும் இலட்­சி­யத்தால் ஒன்­று­பட்டு கொள்­கையின் மீது பற்­று­றுதி கொண்­டி­ருக்கும் தமிழ் மக்­களின் தலை எழுத்தை தீர்­மா­னிப்­பதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யா­தென்­ப­தற்­கா­க­வுமே தமிழ் மக்கள் பேரவை மக்கள் சார்ந்து செயற்­ப­டு­வ­தற்­காக உதய­மா­கி­யுள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்கள் பேரவை

தமிழ்­மக்கள் பேர­வை­யா­னது, தமிழ்­மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு வரைபை தயா­ரித்தல், ஐ.நா. மனித உரிமை பேரவை பரிந்­து­ரை­களை கண்­கா­ணித்தல், இழப்­புக்­களை சந்­தித்த மக்­க­ளுக்கு நீதி­யைப்­பெற்­றுக்­கொ­டுத்தல்,

ஆகி­ய­வற்­றுடன் தனது பணியை மட்­டுப்­ப­டுத்­தாமல் தமிழ்­மக்­களின் கலா­சார பண்­பாட்டு விழு­மி­யங்­களைப் பாது­காத்தல், கல்வி, சுகா­தாரம் உள்­ளிட்ட சமூக மேம்­பாட்டில் கரி­சனை கொள்­ளுதல், எமது பொரு­ளா­தா­ரத்தை, வளப்­ப­யன்­பா­டு­களை உச்சமாக்­குதல் உள்­ளிட்ட பல்­வேறு மக்கள் நலப் பணி­க­ளிலும் ஈடு­ப­டுத்­திக்­கொள்ளும் அதே­வேளை அவற்றை மேற்­கொள்­வ­தற்­காக பிரத்­தி­யே­க­மான உப­கு­ழுக்­களும் பிரத்­தி­யே­க­மான பிரச்­சி­னை­களை கையாள்­வ­தற்­கான உப­கு­ழுக்­களும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

தென்­னா­பி­ரிக்க விடு­தலை அமைப்­பான ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் அனு­ப­வத்தை அடைப்­ப­டை­யாகக் கொண்டே தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­கி­றது.

151220105512_tamil_people_council_sri_lanka_tamil_makkal_peravai_512x288_bbc_nocreditஇது­வரை காலமும் அர­சி­யலில் காணப்­ப­டாத வித­மாக மூன்று பேரைக்­கொண்ட இணைத்­த­லைமை நிய­மிக்­கப்­பட்­டிருக்கின்­ற­மை­யா­னது பத­விகள் முக்­கி­ய­மல்ல என்­பதை பறை­சாற்­று­வ­தாக உள்­ளது.

மேலும் கடந்த காலங்­களில் அர­சியல் சார்ந்த பணி­களில் நேர­டி­யாக பங்­க­ளிப்பை வழங்­காத வைத்­தி­யர்கள்: சிவில் அமைப்பு பிர­தி­நி­திகள், சட்­டத்­த­ர­ணிகள், மதத்­த­லை­வர்கள், ஆகி­யோ­ர் இணைந்து தமிழ் அர­சியல் சார்ந்து பங்­க­ளிப்பை வழங்க முன்­வந்­தி­ருப்­பதும் உண்­மையில் மக்கள் கருத்­துகள் கேட்­ட­றி­யப்­ப­டு­வதும், அதை உள்­வாங்கி சட்­டங்­க­ளுக்கு அமைய சரி­யான திட்­டத்தை வரை­வதும் வர­வேற்­க­த்தக்­க­து­மாகும்.

மக்கள் பேரவை ஆரம்­ப­மான தினம் முதல் அதற்­கான இணைய தளம் உரு­வாக்­கப்­பட்டு செய்­தியை உடனே தர­வேற்றம் செய்­தமை மக்கள் கருத்­துகள் உட­னுக்­குடன் அறி­யப்­ப­டு­வ­துடன் தங்கள் சார்ந்த விளக்­கங்­களும் உட­னுக்­குடன் தங்களுக்­கான ஊடகம் ஒன்­றினால் வெளியி­டப்­ப­டு­வதும் இலங்கை தமிழர் அர­சி­யலில் இது தான் முதல் தடவையாகவுள்­ளது.

ஒட்­ட­மொத்­த­மாக பார்க்­கையில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினுள் பதி­னைந்து ஆண்­டு­க­ளாக மீண்டும் மீண்டும் எடுத்­து­ரைக்­கப்­பட்ட கட்­ட­மைப்பு சார் விட­யங்கள், எதிர்­கால இலக்­குகள் என்­பன நிர்­ண­யிக்­கப்­பட்டு இலங்­கையில் சாந்­தியும் சமா­த­ானமும் நிலைக்­க­வேண்டும் என்­ப­தையே வெளிப்­ப­டுத்­தி­நிற்­கின்­றது.

அதி­க­ரித்­துள்ள எதிர்­பார்ப்­புக்கள்

தற்­போ­தைய நிலையில் இரா.சம்­பந்தன், மாவை.சேனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­திரன் உள்­ளிட்ட தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஒரு­த­ரப்­பி­ன­ருக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டையில் கருத்­தியல் ரீதி­யான முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

அதே­நேரம் பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்டு பாராளு­மன்ற அங்­கத்­து­வத்தைப் பெற­மு­டி­யா­து­போன ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்­சியின் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்­னம்­பலம் ஆகி­யோ­ருக்கு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் மீது ஏற்­பட்ட அதி­ருப்­தியே இவ்வாறான­தொரு மாற்­றுத்­த­ரப்பு உரு­வா­குவ­தற்கு கார­ண­மெ­னவும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் பலத்தை பல­வீ­ன­மாக்கி பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­மா­கவே உரு­வாக்­கப்­பட்­ட­தெ­னவும் கூறப்­ப­டு­கின்­றது.

ஆகவே இந்தக் கருத்­துக்­களை எதிர்­கா­லத்தில் வரை­ய­றுக்­கப்­பட்ட காலக்­கி­ர­மத்தில் முன்­னெ­டுக்­கப்­போகும் செயற்­பா­டு­களே பதி­ல­டி­வ­ழங்­கப்­போ­கின்­றன என்­பதை இத்­த­ரப்­பினர் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும்.

அதே­வேளை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மக்கள் சார்­பான ஜன­நா­யக ரீதி­யான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் அதே­ச­மயம் ஒரு கட்­சியின் கட்­ட­மைப்­புக்கு கோட்­பா­டு­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் அவ்­வி­த­மான செயற்­பா­டுகள் அமை­யக்­கூ­டாது எனக் கூறி­யி­ருக்­கின்றார்.

அதே­நேரம் தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாகும். இது வரைகாலமும நாங்கள் அரசியல் தீர்வுபற்றி பேசுகின்றபோதும் எப்பேர்ப்பட்ட தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இதுவரையில் எவருமே வெளிப்படுத்தவில்லை.

சமூகப் பிரச்சினைகள் பலவுண்டு. அவை பற்றி நாங்கள் விஞ்ஞான ரீதியாக முறையாக ஆராய முற்படவில்லை. எனவே தான் அப்பேர்ப்பட்ட மக்கள் குழுவொன்று பல நல்ல காரியங்களில் செயற்பட தீர்மானித்ததையடுத்து நான் அதில் இணைந்துள்ளேன்.

இது புதிய அரசியல் கட்சியல்ல என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனவே வெறுமனே முரண்பாடுகள் தோற்றம்பெற்றுவிட்டன என எழுந்தவாரியாக கூறுவதும் ஊடக அறிக்கைகளை விடுத்து பரஸ்பரம் குற்றம் சாட்டுவதும் பொருத்தமற்றதொன்றாகும்.

முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கேயென பலர் அஞ்சுகிறார்கள்.

ஆனால் அனைத்து நடவடிக்கைகளுமே அவற்றை பலப்படுத்துவதாகவே இருக்கின்றது என்பதை தூரநோக்குடன் சிந்தித்தால் உணர்ந்துகொள்ளமுடியும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய சூழலுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலத்த நெருக்கடிகள் காணப்படுகின்றன.

தீர்வு திட்டமொன்றை தயாரித்து 2016இற்குள் தீர்வை பெறுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கும் பிரச்சினையை தீர்க்கவே தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்பு இன்றியமையாதவொன்றாக இருக்கின்றது. இதனை தமிழரசுக்கட்சி உணர்ந்துகொள்ளவேண்டும்.

இலட்சியப்பயணத்தில் அடிப்படைக்கொள்கையென்பது மிகவும் முக்கியமானதொன்று. மாறுபடும் சூழலுக்கு அமைவாக அரசியல் போக்குகளை மாற்றுவதில் தவறில்லை.

விடுதலைக்கு ஏங்கிநிற்கும் இனமொன்றின் ஆணைபெற்ற அரசியல் தரப்பு அடிப்படைக்கொள்கையிலிருந்து விலகிநின்று சாதித்துவிடமுடியுமெனக் கருதுவதானது பகற்கனவே.

ஆகவே தற்போதும் காலம் சென்றுவிடவில்லை. தமிழரசுக்கட்சி சுயபரிசீலனை செய்து விடுதலைப் பயணத்தில் இலக்குநோக்கிய கொள்கைகளை மறுதலிக்காது அவற்றின்பால் நின்று புதிதாக உருவாகியுள்ள கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்.

அவ்வாறில்லாது நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்ற போக்கு கைவிடப்பாடது விரைந்து தீர்மானமெடுக்க தவறுவார்களாயின் அப்பணியை பொறுப்பேற்றுச் செய்வதற்காக கட்டமைப்பு சார் அமைப்பாக செயற்பட விளையும் பேரவை அரசியல் பிரவேசத்தை தவிர்க்க முடியாது போகலாம்.

-பிரம்மாஸ்திரன்–

தமிழ் மக்கள் பேரவை

இணைத்தலைவர்களாக:

01. திரு.க.வி.விக்கினேஸ்வரன் (முதலமைச்சர்- வடமாகாண அவை)
02. திரு.பி.லக்ஸ்மன் (மருத்துவர் – யாழ். போதனா மருத்துவமனை)
03. திரு.ரி.வசந்தராஜா (செயலாளர் – மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்)

நடவடிக்கை குழு உறுப்பினர்கள்:
01. சிவசிறீ சபா வசுதேவ குருக்கள் (நல்லை ஆதீனம்)
02. வண ஜெயபாலன் குரூஸ் (மன்னார்)
03. வண எஸ்.வி.பி மங்களராஜா
04. திரு சி.கே.சிற்றம்பலம் (உபதலைவர் – இலங்கை தமிழ் அரசு கட்சி)
05. நா.உ த.சித்தார்த்தன் (தலைவர் – புளட்)
06. கந்தையா பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈபிஆர்எல்எப்)
07. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
08. பேராசிரியர் வி.பி.சிவநாதன் (போசகர் – யாழ்ப்பாணம் பொருளாதார நிபுணர் சங்கம்)
09. மருத்துவர் கே.பிரேமகுமார் (மேனாள் தலைவர் – விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்)
10. திரு கே.சதாசிவம் (மட்டக்களப்பு)
11. திரு எஸ்.சோமசுந்தரம் (பொருளாளர், மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்)
12. திரு முரளீதரன் (திருகோணமலை)
13. திரு வி கோபாலபிள்ளை (அம்பாறை)
14. மருத்துவர் ஜி.திருக்குமாரன் (தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
15. மருத்துவர் ஏ.சரவணபவான் (துணைத்தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
16. வண ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம் மறைமாவட்டம்)
17. சட்டவாளர் வி.புவிதரன் (தலைவர் – தமிழ் சட்டவாளர்கள் சங்கம்)
18. திரு என்.சிங்கம் (செயலாளர் – தமிழ் சிவில் சமூக அமையம்)
19. திரு என்.இன்பநாயகம் (தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்)
20. திரு எம்.சிவமோகன் (இரணைமடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)
21. திரு தேவராஜ் (தலைவர் – வவுனியா சிவில் சமூக அமையம்)

ஏற்பாட்டு குழு:

01. மருத்துவர் எஸ் சிவன்சுதன்
02. திரு என் விஜயசுந்தரம்
03. திரு அலன் சதிதாஸ்
04. திரு எஸ் ஜனார்த்தனன்

இயங்கவுள்ள உபகுழுக்கள் :

01. அரசியல் துறை
02. கல்வித்துறை
03. நலத்துறை
04. சுற்றாடல் துறை
05. விவசாய துறை
06. மீன்பிடி துறை
07. மீள்குடியேற்ற துறை
08புனர்வாழ்வு துறை
09. கலை துறை
10. பண்பாட்டு துறை

Share.
Leave A Reply