சீனாவின் ஹெனான் மாகா­ணத்தைச் சேர்ந்த வயோ­திப தம்­ப­தி­யொன்று வீட்டு வாடகை செலுத்­து­வதைத் தவிர்க்க கடந்த 10 வருட கால­மாக கிண­றொன்றில் வாழ்ந்துவரு­வது தொடர்­பான தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

கிழக்கு சீனாவில் ஹெனான் மகா­ணத்தில் ஸென்­ஸொயு எனும் இடத்தைச் சேர்ந்த மா புலேயி என்ற மேற்­படி கண­வரும் அவ­ரது மனை­வியும் 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் 16 அடி ஆழ­மான அந்தக் கிணற்றில் வசிக்க முடி­வெ­டுத்­தனர்.

அந்தத் தம்­பதி அந்த கிணற்றில் குடி­வ­ரு­வ­தற்கு முன்னர் அது பாட­சா­லை­யொன்றால் மின்­சக்திப் பிறப்­பாக்­கியை வைப்­ப­தற்­கான அறை­யாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது.

showImageInStoryஅந்த கிணற்றின் 538 சதுர அடி அள­வான பரப்­ப­ளவைக் கொண்ட அடித் த­ள­மா­னது தொலைக்­காட்சிப்பெட்டி, குளி ர்­சா­த­னப்­பெட்டி, குளி­ரூட்டி, சலவை இயந்­திரம், தண்ணீர்த் தாங்­கிகள் மற்றும் தள­பா­டங்கள் என்­ப­ன­வற்றை உள்­ள­டக்கி ஒரு முழு­மை­யான வீடாக காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி கிணற்று வீட்டில் தனித்து வாழும் அந்தத் தம்­ப­தியை அவர்­க­ளது பிள்­ளைகள் அவ்­வப்­போது வந்து பார்த்து வரு­கின்­றனர்.

showImageInStoryஅந்த வீட்­டிற்கு செல்­வ­தற்­கென அந்தக் கிணற்றின் உட்­புறச் சுவரில் ஏணிகள் மற்றும் படிகள் போன்ற கட்­ட­மைப்­புகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

மா புலேயி பொறி­யியல் திணைக்­க­ளத்தில் நிலத்­திற்குக் கீழான பரா­ம­ரிப்பு பணியில் பணி­யாற்றி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆரம்­பத்தில் மா புலே­யிக்கும் அவ­ரது மனை­விக்கும் அந்தக் கிணற்றில் தற்­கா­லி­க­மாக தங்கிக் கொள்­ளவே அனு­மதி வழங்க உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருந்­ததாக ஸென் ­ஸொயு பிராந்­திய அதி­கா­ரி­யொ­ரு வர் தெரி­வித்தார்.

Share.
Leave A Reply