நான்கு வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவனை சம்பவம் இடம்பெற்று நான்கு மாதங்களின் பின்னர் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபரான குறித்த இளைஞன் கடந்த செப்டெம்பர் மாதம் தனது உறவுக்காரக் குழந்தையையே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடு நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்துள்ள குறித்த இளைஞரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ள ஆனமடு பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவ்விளைஞர் வாரியபொல பொலிஸ் பிரிவில் தனது உறவுக்கார குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸாரால் தேடப்பட்டு வருபவர் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆனமடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விஜயகோனின் மேற்பார்வையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்துநில் பண்டார தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

child-abuse

நோர்வூட், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த போதே வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை சந்தேக நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைக்காக சிறுமி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட உள்ளதாகவும் கைதுசெய்யபட்ட சந்தேக நபர் நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Share.
Leave A Reply