தந்தை செய்த அதே தொழிலை மகனும் செய்வது மிகவும் இயல்பு. இது சினிமா துறையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. சிவாஜி கணேஷன் அவர்களுக்கு பிறகு பிரபு, பிறகு பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என்பது போல தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், தெலுங்கு சினிமா என அனைத்து மொழி திரையுலகிலும் இது பின்தொடரப்பட்டு வருகிறது.
தெலுங்கு திரை உலகில் எல்லாம் இரு குடும்பங்களின் மத்தியில் அடுத்தடுத்து வாரிசு நடிகர்கள் களமிறக்கப்பட்டு ஓர் போரே நடந்து வருகிறது.
சினிமா என்பது நமது நாட்டில் வெறும் கேளிக்கை என்பதை தாண்டி மாபெரும் புகழ், மக்கள் மத்தியில் நெருக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பொருத்திப்பார்க்கும் படியான ஓர் செயலாக இருந்து வருகிறது.
இந்த வகையில் நமது இந்திய திரையுலகில் திறமையை நிரூபித்த பிரபலங்களின் பிள்ளைகள் இனி களமிறங்கி தங்கள் திறமையைக் காட்ட காத்திருக்கிறார்கள். அவர்களை பற்றி இனிக் காண்போம்….
துருவ்
நடிப்பு மட்டமின்றி பாடவும் செய்யும் விக்ரம், முன்னர் பின்னனி குரலும் கொடுத்து வந்தார். பன்முக கலைஞரான விக்ரம் இந்திய சினிமாவில் உழைப்பிற்கு இலச்சினை என்பது போல் திகழ்கிறார்கள்.
இவரது மகன் துருவ் தோற்றத்தில் அப்படியே விக்ரம் போன்றே இருக்கிறார். இப்போது வரை துருவிற்கு நடிப்பில் நாட்டம் இல்லை எனிலும், பல இயக்குனர்கள் அவரை நடிக்க அழைப்பதாக விக்ரமே ஒருமுறை ஓர் பேட்டியில் கூறியிருந்தார்.
ஆர்யன்
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கான். காதலில் மட்டுமின்றி ஆக்ஷனிலும் தூள் கிளப்பும் இவர், இன்று வரை இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம்வருகிறார்.
இவரது மகன் ஆர்யன் ஏற்கனவே ஒரு முறை சர்ச்சையான வீடியோ எடுத்து மீடியாவில் அறிமுகமானவர். கண்டிப்பாக பாலிவுட் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தனா
ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் செல்ல மகள். “கன்னத்தில் முத்தமிட்டால்..” படத்திற்காக தேசிய விருது வாங்கியவர். இவருக்கு இயக்கத்தில் ஆர்வம் என்று கூறி வருகிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் கூட, நடிப்பில் ஏற்கனவே தன்னை நிரூபித்த இவர், நல்ல நடிகையாக வலம்வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
சஞ்சய்
இளையதளபதி விஜயின் மகன் சஞ்சய். வேட்டைக்காரன் படத்தில் ஓர் பாடலுக்கு ஆட்டம் போட்டவர். இப்போது தான் 15 வயது ஆகிறது சஞ்சய்க்கு. விஜயை போலவே இவரும் 20வயதுக்குள் சினிமா துறையில் காலடி எடித்து வைத்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், விகரமை போலவே விஜய்யும் இப்போது சஞ்சய் படிப்பில் மட்டுமே நாட்டம் கொண்டுள்ளார். அவருக்கு வருங்காலத்தில் சினிமாவில் நுழைய ஆசை இருக்கிறதா இல்லையா என்று இன்னமும் கூறவில்லை என்று கூறுகிறார்.
ஜுனைத் கான்
இந்திய துறையுலகின் நடிப்பின் உச்சபட்சம் என்றால் அது ஆமிர் கான் தான். இவரது மகன் ஜுனைத் கானை திரையுலகில் களமிறக்க ஆமிர்கானே தயாராக தான் இருக்கிறார். அடுத்து வரும் வருடங்களில் ஜுனைத் கானை திரையில் காணும் வாய்ப்புகள் ஏராளம் என பாலிவுட் வட்டாரம் கூறுகின்றன.
ஜான்வி கபூர்
இந்திய கனவுக் கன்னியாக திகழ்ந்த நடிகை ஸ்ரீ தேவியின் அன்பு மகள் ஜான்வி. இவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து திரையுலகிலும், தன்னை போலவே சிறந்து வர வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறார் ஸ்ரீதேவி. எனவே, ஜான்வியை எப்போது வேண்டுமானாலும் திரையில் எதிர்பார்க்கலாம்.
சுப்புலட்சுமி
நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமி, இப்போது இவருக்கு 16 வயது தான் ஆகிறது. இப்போது வரை திரையுலக நிகழ்சிகளில் பெரியதாய் தலைக் காட்டாமல் படிப்பில் மட்டும் ஆர்வம் செலுத்தி வரும் இவர், எதிர்காலத்தில் நடிப்பு பக்கமும் தலைக்காட்ட வாய்ப்புகள் இருக்கின்றன.
Post Views: 75