ஈராக்கில் கடந்த 43 ஆண்­டு­களில் முதல் தட­வை­யாக தேசிய ரீதி­யான அழ­கு­ராணி போட்­டி­யொன்று நடை­பெற்­றுள்­ளது.

தலை­நகர் பாக்­தாத்­தி­லுள்ள ஹோட்­ட­லொன்­றில கடந்த சனிக்­கி­ழமை இறுதிச் சுற்­றுப்­போட்டி நடை­பெற்­றது. ஷாய்மா காசிம் அப்துல்­ரஹ்மான், மிஸ் ஈராக் 2015 அழ­கு­ரா­ணி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

1972 ஆம் ஆண்டின் பின்னர் ஈராக்கில் நடை­பெற்ற முத­லா­வது அழ­கு­ராணி போட்டி இது­வாகும்.

13880_newஇப்­போட்­டி­களில் நீச்­ச­லுடைச் சுற்று நடை­பெ­ற­வில்லை. மாலை­நேர ஆடை சுற்றில் போட்­டி­யா­ளர்­களின் ஆடைகள் முழங்­கா­லுக்கு கீழ் நீண்­டி­ருக்க வேண்டும் என நிபந்­தனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

 2F929A9400000578-0-image-m-31_145086648413520 வய­தான ஷாய்மா காசிம் அப்துல்­ரஹ்மான், ஈராக்கின்  பல்­லின மக்கள் வசிக்கும் கிர்குக் நகரைச் சேர்ந்­தவர்.

 2F929A6D00000578-0-image-a-30_1450866480995அடுத்த வருடம் தாய்­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள மிஸ் யூனிவர்ஸ் (பிர­பஞ்ச அழ­கு­ராணி) போட்­டியில் ஈராக் சார்பில் ஷாய்மா காசிம் பங்­கு­பற்­ற­வுள்ளார்.

மிஸ் ஈராக் அழ­கு­ரா­ணி­யாக சாய்மா காசிம் தெரி­வா­ன­வுடன் ஐ.எஸ். அமைப்பில் இணை­யு­மாறும் இல்­லா­விட்டால் அவர் கடத் திச் செல்­லப்­ப­டுவார் என அவ்­வ­மைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து தொலை­பேசி அழைப்பு விடுக்­கப்­பட்­டதாம்.

 ஆனால், மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­று­வது உட்­பட தனது திட்­டங்­களை இந்த அச்­சு­றுத்தல் கார­ண­மாக மாற்­றிக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என ஷாய்மா காசிம் தெரி­வித்­துள்­ளார்.

மிஸ் ஈராக் அழ­கு­ரா­ணி­யாகத் தெரி­வா­னதன் மூலம் தான் பெற்றுள்ள புகழை பெண்களின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கான பிரசாரங்களுக்கு பயன்படுத்த விரும்புவதாகவும் ஷாய்மா காசிம் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply