இயேசு பிறந்த தினம் சகல கிறிஸ்தவர்களுக் கும் ஓர் மகிழ்ச்சிகரமான, பரிசுத்த தினமாகும். உலகத்தில் உள்ள சகல கிறிஸ்தவர்களும் இத்தினத்தை பரிசுத்த தினமாகவும் பக்தியுள்ள- – மேன்மையுள்ள- சமய வழிபாடாகக் கொண்டாடுகிறார்கள்.
நத்தார் விழாவில் சிறப்புத்தன்மை என்னவென்றால், தற்காலத்தில் உள்ள பிரிவினைகளும் சிறையிருப்புக்களும் அகற்றப்பட்டு மக்கள் சாந்தியும் சமாதான சக வாழ்வுடனும் வாழ உதவி செய்வதாகும்.
ஆனால், இயேசுவின் பிறப்பின் நோக்கத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகள் ஒன்றும் இக்காலத்தில் நடைபெறுவதில்லை.
எங்கும் கொலைகள், போர் அழிவுகள், குடிவெறிகள், கற்பழிப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நாளிலே இதற்கோர் எண்ணக்கருவை நாம் கொடுக்க வேண்டும்.
நத்தார் விழாவின் உண்மையான தாற்பரியம் என்ன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். மனி தம், இரக்கம், கிருபை, கருணை என்றால் என்ன என்பதை சற்றுச் சிந்திக்க வேண்டும். உலக மக்களுக்காகக் கடவுளின் குமாரன் இயேசு மனிதனாகப் பிறந்தார்.
மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த காலத்தில் அவர் செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை; அளவிடமுடியாதவை. மனிதனின் இரட்சிப்புக்காகவும், நல்வாழ்வுக்காகவும் தம்மை சிலுவையில் பலியாக்கினார்.
அவர்களோடு உலகத்தில் வாழ்ந்த காலத்தில் மரித்தோரை உயிர்ப்பித்தார். குருடர்களைப் பார்வை பெறச் செய்தார். செவிடர்களுக்கு செவிப்புலனைக் கொடுத்தார்.
ஊமைகள் பேசினார்கள். முடவர்கள் எழுந்து நடந்தார்கள். நோயாளிகள் சுகமடைந்தார்கள். அநீதியையும், அடிமைத்தனத்தையும் பகிரங்கமாக எதிர்த்தார்.
நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடினார். ஆனால், இந்த நத்தார் தினத்தை முன்னிட்டு உலகத்திலும் இலங்கையிலும் உள்ள சகல கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட ஞாபகார்த்த ஆராதனைகள் நடைபெறுகின்றன.
24 ஆம் திகதி நடுநிசியில் மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று பிறந்த இயேசு பாலனை யும் வணங்குவார்கள். இந்த இரவில் பல இடங்களிலும் நத்தார் கரோல் சேவைகளும் நடைபெறும்.
இயேசு பிறந்த சந்தோஷத்தினால் வீடு வீடாக இன்னிசைப் பாடல்களுடன் பவனி வருவார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, பல மதத்தவர்களும் பல்லினத்தவர்களும் இப்படியான விழாவில் பங்குபற்றி ஆனந்தம் கொண்டாடுவார்கள்.
ஆடு, மாடுகளை வெட்டி சுவையான உணவுகளைச் சமைத்து தாங்கள் உண்பதுடன் உறவினர்களுக்கும் கொடுப்பார்கள். மதுபானத்தைப் பாவித்து மதிமயங்குவார்கள். ஒருவருக்கொருவர் நத்தார் வாழ்த்துக்களைக் கூறுவார்கள்.
விலை உயர்ந்த அன்பளிப்புக்களை ஒருவருக்கொருவர் கொடுத்து சந்தோஷமடைவார்கள். நத்தார் வாழ்த்து மடல்களை அனுப்புவார்கள்.
கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்து அதில் வெளிச்சம் தரும் பல வர்ண மின்சார விளக்குகளை அந்த மரத்தைச் சுற்றி இணைத்து அழகுபடுத்துவார்கள். இயேசுவின் பிறப்பை பற்றி பரிசுத்த வேதாகமம் இப்படிக் கூறுகின்றது.
லூக்கா: 2-7 இன் படி யூதேயா நாட்டில் உள்ள பெத்தலகேம் என்னும் தாவீதின் ஊரிலே அவள் தனது முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் கிடைக்காமையால் பிள்ளையைத் துணியால் சுற்றி முன்னணியிலே கிடத்தினார்கள்.
லூக் சுவிசேஷம் 2:10 இல் தேவதூதன் ஆடு மேய்க்கும் இடையர்களைக் கண்டு பயப்படா திருங்கள். இதோ எல்லா இனத்தாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். லூக் 2:11.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காகத் தாவீது என்னும் ஊரிலே பிறந்திருக்கிறார் எனக் கூறினார்.
லூக் 2:16 இடையர்கள் திரண்டு வந்து மரியாளையும் ஜோசேப்பையும் முன்னணியில் கிடத்தி இருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
03 வானசாஸ்திரிகள் நட்சத்திரங்களைப் பற்றிப் படித்தவர்கள். கிழக்கிலிருந்து வந்த நட்சத்திர த்தைப் பின்தொடர்ந்து ஜெருசலேமிற்கு வந்து குழந்தை இயேசுவைக் கண்டு ஆராதனை செய்தார்கள். பொன், தூபம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த திரவியங்களை அன்பளித்துச் சென்றார்கள்.
தாவீதின் அரசன் இயேசு பிறந்துள்ளார் என்ற செய்தி ஏரோது மன்னனுக்கு கிடைத்தவுடன் அவன் பயந்து இயேசுவைக் கொல்ல வழிதேடினான்.
கர்த்தருடைய தூதன் அன்றிரவு யோசேப்பின் கனவில் தோன்றி, ஏரோது அரசன் குழந்தையைக் கொலை செய்யவிருப்பதால் இரவோடு இரவாக எகிப்து தேசத்துக்குப் போகும்படி கூறிய படியால் யோசேப்பு குடும்பத்துடன் எகிப்து தேசத்துக்குச் சென் றார்.
ஆனாலும், ஏரோது அரசன் இயேசுவைக் கொல்லும் நோக்கத்தில் இஸ்ரேல் தேசத்தில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட சகல ஆண் குழந்தைகளையும் கொலை செய்தான். தாய்மாரின் அழுகைச் சத்தமோ தேசமெங்கும் பரவியது.
மத்தேயு சுவிசேஷம் 23-:27 இயேசு கூறியவை வருமாறு:
மாயைக்காரர்களே உங்களுக்கு: ஐயா, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாய் இருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரம் காணப்படும்.
உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுசருக்கு முன்பாக நீதிமான்கள் எனக் காணப்படுகிறீர்கள். ஆனாலும் உள்ளத்திலே மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர் கள்.
மத்தேயு 5:3. இயேசு ஆவியில் எழுமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோக இராச்சியம் அவர்களுடையது: எனக் கூறினார்.
மத்தேயு 19:23 அப்போது இயேசு தம்முடைய சீடர்களை நோக்கி ஐஸ்வரியவான்கள் பரலோக இராச்சியத்தில் பிரவேசிப்பது மிகவும் அரிதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
மேலும் நல்லெண்ணம், நல்லொழுக்கம் மூலம் உருவாகும் ஏழ்மையான வாழ்க்கையா னது பொய்யான, நீதியற்ற முறையில் வஞ்சகமான முறையில் செல்வந்தராகி வாழும் வாழ் க்கையை விடச் சிறந்தது எனக் கூறினார்.
இயேசு வாழ்ந்து காட்டியபடி துர்நடத்தைகளை எதிர்த்து செய்த நற்கருமங்களை நாம் கைக்கொள்ள வேண்டும். ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம் உயர்ந்த மனிதப் பண்புகள் நிறைந்த வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும்.
புது ஆடைகள் அணிந்து வீதிகளைச் சோடனை செய்து வீடுகளை அலங்கரித்து பல வர்ண மின்சார விளக்குகளை இணைத்து புசித்தும், குடித்தும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை விடப் பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதக்காரன் கூறுவது போன்று நல்வாழ்க்கை என்பது சுவையான உணவு வகைகளை சமைத்துச் சாப்பிடுவது அல்ல.
ஏழைகளுக்குத் தான தருமம் செய்து கோபசுபாவம் அற்றவர்களாய், பழிவாங்கும் மனமற்றவர்களாய், பிரிவினைகள் சாதி-, சமய- பகைமைகளை மறந்து மனமாற்றம் அடைந்தவர்களாய் மாறவேண்டும்.
அப்போது நீதியும்- நியாயமும் – சமத்துவமும் நாட்டில் நிலைத்து நிற்கும். நத்தார் நற்செய்தியானது யாவருக்கும் சமாதானம் என்பதாகும்.
எனவே, இயேசுவின் சிலுவை மரணத்தையும் பாடுகளையும் நினைவுகூர்ந்து மனமகிழ்ச்சி உடையவர்களாக ஜீவிப்பதோடு படித்தவர் – பாமரர், ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடுகளையும் இனம், மொழி, நாடு, நிறம் என்ற எல்லைகளையும் தாண்டி கிராமங்களிலும் நாட்டிலும் வாழும் சகல மனிதர்களும் சகல உரிமைகளுடனும் சுதந்திரத்துடனும் வாழ்ந்து இயேசுவின் பிரசன்னத்தோடு ஜீவிக்க இந்த நன்நாளிலே சர்வ வல்லமையுள்ள தேவன் கிருபை வரங்களை பொழிவாராக!
மேலும், சிறைச்சாலைகளில் பல ஆண்டுகளாக துன்பம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகள் விடுதலை அடையவும், காணாமல் செய்யப்பட்டோர் தமது குடும்பங்களுடன் மீண்டும் இணையவும், போரி னால் பாதிக்கப்பட்ட விதவைகளும், ஊன முற்றோர்களும், வீடு வாசல்களை இழந்து அநாதைகளாக வாழ்வோர் பூரண விடுதலை பெற்று சந்தோச, சமாதானத்துடன் சக வாழ்வை பெற்று நீடுழி வாழ இயேசு பிறந்த இந் நன்னாளிலே இறைவனை வேண்டி நிற் கின்றோம்.
இறுதியாக சிறந்த கொள்கைப் பிரகடனங்களுடன் அமைத்திருக்கும். உல கமே புகழும் புதிய நல்லாட்சி அரசு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கு ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும், வழங்கி உலகின் சமாதானத்திற்காக வழிவகுத்து உலகத்திலே தர்மம் காக்கும் ஒரு புண்ணிய பூமி இலங்கை நாடு என்ற பெயரை சர்வதேசத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
பீ.ஏ. அன்ரனி மார்க் தலைவர், சமாதான அமைப்பு, செயலாளர்,பிரஜைகள் குழு, மன்னார்,