ஜனவரி மாதம் 1 ஆம் திகதியை உலகம் முழுவதிலும் வருடத்தின் தொடக்கமாக கொள்கிறார்கள். அது ஏன் என்பதை பார்ப்போம்.
16 ஆம் நூற்றாண்டில் நாட்கட்டியில் ஏற்பட்ட புரட்சி காரணமாக ஜனவரி 1ஐ புத்தாண்டு தினமாக அறிவித்து, கிரகெரியன் நாட்காட்டி (கலண்டர்) வெளியிடப்பட்டது. அதற்கு முன்னர் பார்த்தால்
சுமார் கி.மு 2000 ஆண்டுகளிலேயே வருடத்தின் ஆரம்ப நாளாக ஒரு குறிப்பிட்ட நாளை கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. பெரும்பாலும் உலகம் முழுவதிலும் மார்ச் (பங்குனி) 20 ஆம் திகதி கொண்டாடப்பட்டுள்ளது.
அது ஏன் என்பதற்கான தெளிவான விளக்கங்கள் எங்கும் கிடைக்கவில்லை.
புராதன எகிப்தில் செப்டெம்பர் (புரட்டாதி) 20 ஆம் திகதியை கொண்டாடியுள்ளனர். புராதன கிரேக்க மக்கள் டிசம்பர் (மார்கழி) 20 ஆம் திகதியை கொண்டாடியுள்ளார்கள்.
The Month of Janus
16 ஆம் நூற்றாண்டில் உத்தியோக பூர்வமாக உலகம் பூராவும் ஒரே நாட்காட்டி வெளியிடப்பட்டு ஜனவரி 1 புதுவருடமாக்கப்பட்டது, பண்டைய ரோமானிய நம்பிக்கையில் இருந்து ஆரம்பமானது.
புராதன ரோமானியர்களின் கடவுள்களில் ஒருவர் “ஜனுஸ்” (Janus) ஜனுஸ் கடவுளின் உருவம் இரண்டு முகங்களை உடையவராக காட்டப்படுகிறது.
பின்புறம் இருக்கும் முகம் இறந்த கால சம்பவங்களையும், முன் புறமுகம் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களையும் குறிப்பதாக கருதப்படுகிறது.
எனவே, இறந்த காலம் முடிந்து புது எதிர்காலம் பிறக்கும் நாளாக ஒரு நாளை கருதி அதற்கு அந்த கடவுளின் பெயரை இட்டார்கள். இதுவே காலப்போக்கில் ஜனவரி ஆனது.
மேலும் சற்று தர்க்கவியல் ரீதியாக சிந்தித்தால் வடதுருவப்பகுதியில் டிசம்பர் (மார்கழி) 31 ஆம் நாள் மிகக்குறுகிய வெளிச்சமுடைய நாளாக இருக்கிறது.
எனினும் அடுத்த நாளான ஜனவரி 1 வெளிச்சம் கூடிய நாளாக மீண்டும் வருகிறது. எனவே, ஒரு காலம் முடிந்து இன்னோர் காலம் ஆரம்பிப்பதால், வருடத்தின் ஆரம்ப நாளாக கருதுவதற்கு மிகப்பொருத்தமான நாள் இதுவாகும்.