கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்தின் கீழ் கரை ஒதுங்கி இருந்த ஆணின் சடலம் ஒன்றை பிரதேசவாசிகள் இன்று (27) காலை மீட்டுள்ளனர்.
குறித்த சடலம், கிண்ணியா ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான ஏகாம்பரம் அன்புச் செல்வன் என இனங்காணப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்நையான இவர், கடந்த வெள்ளிக்கிழமை (25) மகாவலி கங்கை சங்கமிக்கும் கிண்ணியா கொட்டியாரக்குடா ஆற்றில் தனது நண்பர்கள் இருவருடன் நேற்று முன் தினம் (25) மாலை மீன் பிடிப்பதற்காக வலையை விட்டுச் சென்றுள்ளதாகவும் பின்னர் வலைளில் மீன் கிடைத்துள்ளதா என பார்வையிட சென்றிருந்த வேளையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரை தேடும் பணியில் நேற்று (26) கிண்ணியா பொலிஸாரும், கடற் படையினரின் உதவியுடன் மேற் கொண்டிருந்தபோதிலும் சடலம் கிடைத்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், அவருடன் சென்ற மற்றைய இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.