பலஸ்தீன காஸா எல்லையிலுள்ள கடலில் அங்கும் இங்கும் நீந்திய மனநலம் பாதிக்கப்பட்ட பலஸ்தீன நபரொருவர் சுட்டுக் கொல்லப்படுவதை வெளிப்படுத்தும் காணொளி காட்சியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்திய படையினரே அந்த நபரை சுட்டுக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அந்தக் காணொளிக் காட்சியில் குறிப்பிட்ட நபர் நிர்வாணக் கோலத்தில் மத்தியதரைக்கடலில் அங்கும் இங்கும் நீந்துகிறார்.
தொடர்ந்து அவர் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி உயிரிழந்து அசைவின்றி கடற்கரையோரமாக காணப்படுகிறார்.
அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய படையினர் யாவர் என்பது அந்தக் காணொளிக் காட்சியில் காண்பிக்கப்படவில்லை.
சுட்டுக் கொல்லப்பட்ட அந்த மன நலம் பாதிக்கப்பட்ட நபர் கலீல் ஹஸ்ன் (26 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், கலீல் மனநலப் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறுகின்றனர்.