“இச்சு” கொடுப்பது இச்சையின் வெளிப்பாடாக மாறியிருப்பதற்கு காரணம் இன்றைய மற்றும் நேற்றைய திரையுலகம். இதில், நாளையும் சேர்ந்துக் கொள்ளும் என்பதில் எந்த மறுப்பும் இல்லை.
காதலில் பூக்கும் முதல் பூவாக இருந்த முத்தத்திற்கு “இச்சு” என்று பெயர் வைத்தது முதல் இவ்வாறு ஆகிவிட்டது.
முதல் காதலை மட்டுமல்ல முதல் முத்தத்தையும் மறக்க முடியாது. அதே போல ரீலில் இருந்து ரியல் வரைக்கும் திரையுலகில் சிலர் கொடுத்த முத்தங்களையும் வருடங்கள் பல கடந்தாலும் மறக்கவே முடியாது.
இந்திய திரையுலகில் முத்தத்தின் மூலம் பிரபலமான பிரபலங்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
அவர்களில் முத்தத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்த சிலரை பற்றி இங்கு காணலாம்….
கமல்ஹாசன்
நீரின்றி அமையாது உலகு போல, தமிழ் திரையுலகில் கமலின்றி அமையாது முத்தம். 1980’களிலேயே முத்தத்திற்கு பெயர் போனவர் கமல்ஹாசன். இவரது இதழ்கள் பதியாத இடமே கிடையாது. நடிகைகள் ஆட்சேபனை இன்றி அனுமதி வழங்கியதும் இவரது இதழ்களுக்கு தான்.

சிம்பு
ஒரே படத்தில் ஓஹோ என உயர்ந்தவர்கள் மத்தியில் ஒரே முத்தத்தில் ஓஹோவென்று உயர்ந்தவர் சிலம்பரசன். இது நயனுடன் இவர் பகிர்ந்துக் கொண்ட ரியல் முத்தம் என்பது அதற்கான காரணம் ஆகும்.

இம்ரான் ஹாசிம்
இம்ரான் ஹாசிமை பாலிவுட்டின் கமல்ஹாசன் என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு முத்தத்தில் தூள் கிளப்பும் நடிகர். மர்டர் திரைப்படத்தில் மல்லிகா செராவத்திற்கு இவர் கொடத்த முத்தங்கள் எண்ணிலடங்காதவை. இடங்கள் சொல்லி மாளாதவை. மற்றும் இந்த திரைப்படம் இவரது இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யாராய்
ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் கனவு தேவதையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யாராய். அதனாலோ என்னவோ, எவ்வளவோ பேர் இவருக்கு முன்பு முத்த பரிவர்த்தனையில் ஈடுபட்ட போதிலும் கூட, இவரது தூம் 2 முத்தம் உச்சக்கட்டமாக பேசப்பட்டது.

நயன்தாரா
ஆரம்பத்திலேயே சரத்குமார், ரஜினியுடன் சேர்ந்து நடித்தாலும் அவ்வளவு பெரிய பெயர் கிடைக்கவில்லை நயனுக்கு. ஆனால், வல்லவனில் சிம்புவுடன் கைகோர்த்ததும், காதல் மலர்ந்ததும். கூடவே இவர்களது இறுக்க பிடித்த (கடித்த) அந்த உம்மாவும் தான் இவரை தென்னிந்தியா முழுவதும் வைரல் ஆக்கியது.
ஹிரிதிக் ரோஷன்
ஹிரிதிக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யாராயின் தூம் 2 முத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், அந்த திரைப்படம் வெளியாகும் அதே காலகட்டத்தில் தான் ஐஸ்வர்யாராய்க்கும் அமிதாபின் மகன் அபிஷேக்கிற்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அதனால், தூம்-2வில் இவர்கள் இருவருக்கும் இருந்த நெருக்கமான காட்சிகளை கூட கத்தரிக்க கூறினார் அமிதாப்.

தீபிகா படுகோனே
இவரது அனைத்து முத்தங்களும் மிக பிரபலம். இவர் காதலித்த ஒவ்வொரு நபருடனும் முத்த பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. அனைத்து முத்தங்களும் இவரை ஏணியில் ஒவ்வொரு படியாக ஏற்றிவிட்டவை தான்.

மல்லிகா ஷெராவத்
பாலிவுட் முதல் ஹாலிவுட்டில் ஜாக்கி சான் வரை முத்தங்களை டெபாசிட் செய்தவர் மல்லிகா ஷெராவத். இதில் சிலமுறை இவர் துகிலுரித்த தருணங்களும் உண்டு. அந்த காட்சிகளுக்கு இவர் “உஷ்” சொல்லிருக்க வேண்டும் பதிலாக “ஹிஸ்” சொல்லிவிட்டார்.
ரன்வீர் சிங்
தீபிகாவுடனான காதலில் இவர் மிக பிரபலம். அதைவிட இவர்கள் இருவரும் பப்பு முதல் பொது நிகழ்சிகள் வரை இட்டுக்கொண்ட “இச்சு”-ன் மூலமே மிக பெரிய அளவில் பிரபலம் ஆனார். கடைசியாக ராம் லீலா படத்தில், லீலைகள் புரிந்தனர்.

ரன்பீர் கபூர்
விராத் கோலியின் காதலியான அனுஷ்கா சர்மாவை அவர் கவ்வியதை விட ரன்பீர் கவ்வியது தான் அதிகம். கடைசியாக சமீபத்தில் வெளியான ‘பாம்பே வெல்வட்” படத்தில் இவர்கள் இருவரும் கவ்விய காட்சிகள் உச்சகட்டம்.