சுவிஸ்லாந்தின் பேசல் நகரில் Kleinbasel என்னும் இடத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும் சிறுநீர் கழிக்க செல்பவர்களைக்கூட வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கின்றனர் எனவும் அப்பகுதி மக்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு ஒன்றினை தயார் செய்து அதில் 374 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மனுவினை, மாவட்ட செயலகத்தில் அளித்துள்ளனர்.
குறித்த ஒரு பகுதி மட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் தொழிலாளர்கள் அளவுக்கதிகமான இடங்களை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல் அப்பகுதி வழியாக வரும், வியாபாரிகள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து அவர்களுக்கு தொல்லை அளித்துவருகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களால் அவதியுற்று வருகின்றனர்.