வடமராட்சி கடலில் நேற்றையதினம் (28) கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் படகு கவிழ்ந்ததில் பலியாகினர்.

கடலில் விபத்தில் சிக்கி பலியான மீனவர்களது வீடுகளுக்கு இன்றைய தினம் (29) சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இறந்தவர்களுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்ததுடன் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.

இன்றையதினம் (29) பருத்தித்துறை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடலில் பலியாகி கரையொதுங்கிய இரண்டாவது மீனவரது உடலத்தையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மீனவர்களுடனும் கலந்துரையாடி சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம், இயற்கையின் மாற்றங்கள் ஏற்படும் காலங்களில் வானிலை அவதான நிலையத்தால் விடப்படும் எச்சரிக்கைகளுக்கு கட்டுப்பட்டு தொழிலுக்கு செல்லாதிருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கடலுக்கு செல்லுமாறும் மீனவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பருத்தித்துறை வெளிச்சவீட்டு ஒழுங்கையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அந்தோனிமுத்து ஜெனிபேட் (வயது 36). மற்றும் தும்பளை கிழக்கைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அலோசியஸ் அன்ரன் ஜோர்ச் சந்திரசேகர் (வயது 35) ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

epdpnews9_17024512

Share.
Leave A Reply