பாக்தாத்: செக்ஸ் அடிமைகளுடன் தீவிரவாதிகள் எப்பொழுது எல்லாம் உறவு கொள்ளலாம் என்பது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இளம்பெண்கள், சிறுமிகளை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். இந்நிலையில் செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே மாதம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு சொந்தமான இடத்தில் அமெரிக்கா நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மூலம் இந்த உத்தரவு பற்றி தெரிய வந்துள்ளது.

30-1451449086-isis-yazidi-slaves

தந்தை, மகன்: தந்தையும், மகனும் ஒரே செக்ஸ் அடிமை பெண்ணுடன் உறவு கொள்ளக் கூடாது.

30-1451449095-isis-sex-slave-market4-700
பலாத்காரம்: பெண் அடிமைக்கு மாதவிடாய் இருந்தால் அவருக்கு அது முடிந்து சுத்தமாகும் வரை அவருடன் அவரது உரிமையாளர் உறவு கொள்ளக் கூடாது.

30-1451449114-isis-sex-slave-market2456-07

வீடுவிப்பு: ஒரு பெண் அடிமை தனது உரிமையாளரால் கர்ப்பமானால் அவரை யாருக்கும் விற்கக் கூடாது. உரிமையாளர் இறந்த பிறகு அந்த பெண்ணை விடுவிக்க வேண்டும்.

கூடாது: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு பெண்ணை வாங்கினால், அவர்களில் யாரும் அந்த பெண்ணுடன் உறவு கொள்ளக் கூடாது. ஏனென்றால் அந்த பெண் கூட்டு சொத்தாவார்.

சகோதரிகள்: ஒருவர் அக்கா, தங்கை ஆகிய இருவரை அடிமையாக வாங்கியிருந்தால் அவர் அந்த பெண்களில் யாராவது ஒருவடன் தான் உறவு கொள்ள வேண்டும். இருவருடனும் உறவு கொள்ளக் கூடாது.

பலாத்காரம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 12 வயது சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஆயிரக்கணக்கானோரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் பலரை போராளிகளுக்கு பரிசாக வேறு அளித்துள்ளனர்.30-1451449104-1-isis-sex-slave-market245-700

அடிமைகள்: சிலர் செக்ஸ் அடிமைகளை தவறாக பயன்படுத்துவதாக தெரிகிறது. இதை ஷரியா சட்டம் ஏற்றுக் கொள்ளாது என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட உத்தரவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்பு பெண்: அடிமைகளிடம் அன்பு செலுத்த வேண்டும், அவர்களை அசிங்கப்படுத்தக் கூடாது, அவர்களால் முடியாத வேலைகளை செய்யுமாறு உத்தரவிடக் கூடாது.
அடிமைப் பெண்ணை முறையாக கவனிக்க மாட்டார் என்கிற நபரிடம் அவரை விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இல்லை. அவர்கள் அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கும் இஸ்லாமிய சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று எகிப்தில் உள்ள பழமையான அல் அசார் பல்கலைக்கழக பேராசிரியர் அப்துல் பத்தாஹ் அலவாரி தெரிவித்துள்ளார்.
Share.
Leave A Reply