துருக்கியில் விமான நிலையம் அரிகே விமானத்தை புகைப்படம் எடுத்த இருவர் மீது லொறி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் விமான நிலையம் அருகே 5 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று தலைக்கு மீதே பறக்கும் விமானத்தை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

சுற்றுலா வந்துள்ள அந்த 5 பேரும் வாடகை வாகனத்தில் அலன்யாவில் இருந்து Antayla பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுபோதையில் இருந்த அவர்கள் விமான நிலையத்தின் அருகே பரபரப்பன சாலையின் நடுவே படுத்திருந்தபடி,

தலைக்கு மீதே பறக்கும் விமானங்களின் புகைப்படத்தை கெமராவில் எடுக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே வெளிச்சம் குறைவான அந்த பகுதியில் எதிர்பாராதவிதமாக விரைவாக வந்த லொறி ஒன்று அவர்கள் மீது மோதியதில்,

turkish_teen_killed_002சம்பவயிடத்திலேயே அந்த 5 பேரில் இருவர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளதாகவும், எஞ்சிய 3 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.

turkish_teen_killed_003உயிர் தப்பிய மூவரும் தங்கள் கண் முன்னே நண்பர்கள் இருவரும் உடல் நசுங்கி பலியானதை எண்ணி அழுது புலம்பியுள்ளனர்.

turkish_teen_killed_004விபத்தில் சிக்கி பலியான அந்த இருவரது உடல்களையும் மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து கூடுதல் விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

turkish_teen_killed_005

Share.
Leave A Reply