இந்த 2015-ல் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகளாக 6 பேர் திகழ்கிறார்கள். இந்த ஆறு பேரும் இன்றும் தலா ஆறு படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகினர். இவர்களில் பத்து சதவீதம் கூடத் தேறவில்லை. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்டோர் இந்த 2015-லும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அப்படி ஆதிக்கம் செலுத்தும் 6 நாயகிகளின் பட்டியல்:
நயன்தாரா
இன்றைய தேதிக்கு இவர்தான் லேடி சூப்பர் ஸ்டார். நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் நண்பேன்டா, மாஸ், தனிஒருவன், மாயா, நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் வெளிவந்தன. இவற்றில் தனிஒருவன் மெகா ஹிட் படமாக அமைந்தது. மாயா, நானும் ரவுடிதான் படங்களும் சூப்பர் ஹிட் வரிசையில் சேர்ந்தன.
ஆறு படங்கள்
வரும் 2016ல் இது நம்ம ஆளு, திருநாள், காஸ்மோரா மற்றும் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கில் ஒரு படம். இவை அடுத்த வருடம் ஒவ்வொன்றாக திரைக்கு வர இருக்கிறது.
த்ரிஷா
இவர்தான் இன்றைய நாயகிகளில் சீனியர். த்ரிஷா நடிப்பில் இந்த ஆண்டு என்னை அறிந்தால், சகலகலா வல்லவன், தூங்காவனம், பூலோகம் படங்கள் வெளிவந்தன. தற்போது அரண்மனை-2, போகி, நாயகி படங்களில் நடிக்கிறார். தனுஷ் ஜோடியாக கொடி என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஸ்ருதி ஹாஸன்
ஸ்ருதிஹாசனுக்கு இந்த ஆண்டு ‘வேதாளம்’ சூப்பர் ஹிட் படமாக அமைந்தது, ‘புலி’ படத்திலும் நடித்து இருந்தார். அடுத்து ‘சிங்கம்-3′ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
எமி ஜாக்ஸன்
தாராள கவர்ச்சி, முத்தக் காட்சிக்கு தடையில்லை… என்று தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் விரும்பும் கொள்கைகளைக் கொண்ட எமிக்கு வாய்ப்புகள் குவிவதில் ஆச்சர்யமில்லை. அநேகமாக 2016-ன் டாப் நாயகியாக இவர்தான் இருப்பார் என்கிறார்கள். காரணம்.. இப்போது அவர் சூப்பர் ஸ்டாரின் நாயகி. இந்த ஆண்டு எமி ஜாக்ஸன் நடிப்பில் ஐ, தங்கமகன் படங்கள் வந்தன.
சமந்தா
சமந்தாவுக்கு இந்த வருடம் 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் ஆகிய 2 படங்கள் வெளி வந்தன. இரண்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. தொடர்ந்து 24, தெறி, வடசென்னை ஆகிய 3 படங்களில் நடிக்கிறார்.