மிழகத்தில் இப்போது கொடும்பாவி எரிப்பதுதான் ஃபேஷனாக இருக்கிறது.  ஒரு பக்கம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கொடும்பாவியை எரிக்கிறார்கள் என்றால், தேமுதிகவினர் தங்களால் முடிந்த அளவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தத்தில் கொடும்பாவி எரிப்பது இப்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு கேரளத்தில் மாணவர்கள் பங்கேற்ற கொடும்பாவி எரிப்பு போராட்டத்தின் போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆர்வக் கோளாறால் தவறுதலாக தீயை வைத்து விட, வேட்டியில் தீ பரவி மாணவர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். கேரளாவே இந்த சம்பவத்தை பார்த்து சிரிப்பாய் சிரித்தது.

இது போன்ற சம்பவம் நேற்று விழுப்புரத்தில் அதிமுகவினர், விஜயகாந்த் கொடும்பாவியை எரிக்க முயன்ற போதும் நிகழ்ந்து, தலை தப்பினால் போதுமென்று ஓட்டம் பிடித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு எதிராக டிசம்பர் 15ம் தேதி சிம்லாவில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் உருவப்பொம்மையை எரிக்க சிலர் முயன்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீ பற்றியதில் 2 பேர் கருகினர்.

Share.
Leave A Reply