சவுதி அரேபியாவில் இளைஞர் ஒருவர் பெண்கள் அணியும் பர்தாவை அணித்துகொண்டு கடைவீதிக்கு வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பெண்கல் மட்டுமே பயன்படுத்தும் பர்தாவை அணிந்துகொண்டு வணிக வளாகம் ஒன்றில் வந்துள்ளார்.

வணிக வளாகத்தில் நுழைந்த அவர் தமது கெமராவில் அங்குள்ள காட்சிகளை பதிவு செய்து வந்துள்ளார்.

man_wear_burka_002இவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட கடைக்காரர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த பொலிசார் உடனடியாக அந்த பர்தா ஆசாமியை அழைத்து விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெண்களுக்கான உடை அணிந்து பொதுவீதியில் திரிந்த குற்றத்திற்காக அந்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

man_wear_burka_003வேறு பாலினர் உடையை மாற்றி அணிவதை சவுதி அரேபியா உள்ளிட்ட பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகள் தடை செய்துள்ளது.

இதனால் பர்தா அணிந்து வணிக வளாகத்தில் திரிந்த அந்த இளைஞருக்கு ஷரியா சட்டத்தின்படி பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி அல்லது 6 மாத சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆனால் சில பகுதிகளில் ஆண்கள் பர்தா அணிந்து பிச்சை எடுத்து வருவதாகவும், சவுதியில் பெண்கள் மீது அதிக பரிவு காட்டப்படுவதால் அதிக பணம் கிடைக்கிறது என தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply