20க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று(3) நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விவரம் வருமாறு
உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
கணிதப்பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கலாமனி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
வர்த்தக பரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏபெற்று மாவட்டமட்த்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.