நடிகர், நடிகைகளாகிவிட்டால், சராசரி மனிதர்களைப் போல் பொது இடங்களுக்குச் செல்ல முடியாது. ஒருவேளை அப்படி சென்றால், காணாததைக் கண்டது போல் அவர்களைச் சூழ்ந்து பெரிய கூட்டம் திரண்டுவிடும்.
அந்த அளவில் நடிகர், நடிகைகளுக்கு நம் நாட்டில் பெரிய மரியாதையை மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் சராசரி மனிதர்கள் மேற்கொள்ளும் சிறு செயல்களை கூட முடியாது.
அப்படி இருக்கையில் அவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டால், அவர்களது குடும்பம் மற்றும் குழந்தையைக் காண வேண்டும் என்று நினைக்கமாட்டோமா என்ன?
இங்கு பல படங்களில் நடித்து, நம்மை அவர்களது ரசிகர்களாக்கிய தமிழ், நடிகர் நடிகைகள் தங்கள் துணை மற்றும் குழந்தைகளுடன் எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.
மகளுடன் அஜித்-ஷாலினி
இது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ. ஆனால் இன்னும் குட்டி தல-யுடன் எடுத்த போட்டோ கிடைக்கவில்லை.
மகனுடன் மாதவன்
இது மாதவன் தன் மனைவி சரிதா மற்றும் மகன் வேதந்த் உடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
மகள்-மகளுடன் சூர்யா-ஜோதிகா
இது நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, தங்களது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் கொடுத்த போஸ்.
குடும்பத்துடன் அர்ஜூன்
இது நடிகர் அர்ஜூன் தன் மனைவி நிவேதிதா, மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளைய மகள் அஞ்சனாவுடன் எடுத்த குடும்ப போட்டோ. இதில் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்துள்ளார்.
குடும்பத்தினருடன் பிரபுதேவா
படத்தில் இருப்பது தான் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவின் மகன்கள் மற்றும் முன்னாள் மனைவி.
படத்தில் இருப்பது தான் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவின் மகன்கள் மற்றும் முன்னாள் மனைவி.
பார்த்திபனின் மகன் மற்றும் மகள்கள்
இது நடிகர் பார்த்திபன் முன்னாள் மனைவி சீதா மற்றும் குழந்தைகள் கீர்த்தனா, அபிநயா மற்றும் மகன் ராக்கியுடன் பல வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ.
மகள்களுடன் கமல்-கௌதமி
இது ஸ்ருதிஹாசன், சுப்புலட்சுமி பாட்டியா (கௌதமி மகள்), கௌதமி, கமல்ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் போன்றோர் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோ.
குடும்பத்துடன் குஷ்பு
இது நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி, மகள் அவந்திகா மற்றும் அனந்திகாவுடன் எடுத்த போட்டோ.
மகள்களுடன் மதுபாலா
இது ரோஜா படத்தின் நாயகி மதுபாலா, தன் மகள்கள் அமியா மற்றும் கியாவுடன் எடுத்த போட்டோ.
குடும்பத்தினருடன் ரம்பா
இது நடிகை ரம்பா தன் கணவர் இந்திரன் பத்மநாதன், மகள் மற்றும் மகனுடன் எடுத்த குடும்ப போட்டோ.
மகனுடன் ரம்யா கிருஷ்ணன்
படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இருப்பது மகன் ரித்விக்.
கணவர் மற்றும் மகளுடன் குட்டி ராதிகா
இது நடிகை குட்டி ராதிகா, கணவர் குமாராசாமி மற்றும் மகள் ஷாமிகாவுடன் எடுத்த குடும்ப போட்டோ.இவற்றையும் மறக்காமல் பார்வையிடுங்கள்..