கொத்மலையில் கர்ப்பிணி பெண் ஒருவரை மோதி அவர் உயிரிழக்க காரணமாக அமைந்த பாரவூர்தியின் சாரதி ஒருவரை தாக்கியமைக்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெதமுல்ல தோட்டத்தில் உள்ள அவர்களின் வீட்டில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் 31 மற்றும் 45 வயதுகளை உடையவர்கள்.
அதேநேரம் இந்த விபத்து தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சாரதி, இந்த மாதம் 6ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28ம் திகதி இந்த விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.