கலிபோர்னியா: அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், பிறந்த ஆண்டு வெவ்வேறாக ஆகியுள்ளது. காரணம் அவர்கள் பிறந்தது புத்தாண்டு நள்ளிரவில். இரட்டைக் குழந்தைகள் என்றாலே ஒரே பிரசவத்தில் ஒன்றாகப் பிறந்தவர்கள் என்பது தான் பொருள்.
bilde
பெரும்பாலும் இவர்கள் ஒத்த உருவ அமைப்பு, குணநலன்கள் என்று அசத்துவார்கள். இதனாலேயே அவர்களைப் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும்.
la101-11_2016_154537_high

ஆனால், அமெரிக்காவில் பிறந்த ஒரு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் போதே வெவ்வேறான ஆண்டுகளில் பிறந்து வித்தியாசம் காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் மரிபெல். நிறைமாத கர்ப்பிணியான அவர், கடந்த வியாழன் அன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புத்தாண்டு பிறக்க சில நிமிடங்களே இருந்த நிலையில் முதலில் மரிபெல்லுக்கு, பெண் குழந்தை பிறந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஆண் குழந்தையும் பிறந்தது.
ஆனால், இரண்டு குழந்தைகளுக்கும் இடைப்பட்ட நிமிடங்களில் புத்தாண்டு பிறந்து விட்டது. இதனால், பெண் குழந்தையின் பிறந்த ஆண்டு 2015 ஆகவும், ஆண் குழந்தைக்கு 2016 ஆகவும் மாறிப் போனது.
இதனால் இரட்டையர்களான இருவரின் பிறந்த ஆண்டும் ஒரு வருட வித்தியாசத்தில் ஆகி விட்டது.

Share.
Leave A Reply