ஒவ்வொருவருக்குமே ஆசைகள், ரகசியங்கள் இருக்கத் தான் செய்யும். அதிலும் பெண்களிடம் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களிடம் அந்த அளவில் ஆசைகளும், ரகசியங்களும் இருக்கும். சொல்லப்போனால், பெண்களை புரிந்து கொள்வது என்பது கஷ்டம்.
அதிலும் என்ன தான் கணவனாக இருந்தாலும், அவரிடமும் சொல்லாமல் மறைக்கும் படியான விஷயங்கள் பெண்களிடம் உண்டு. அப்படி உலகில் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனிடம் மறைக்கும் சில விஷயங்கள் தான் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த அளவில் மறைத்து ரகசியமாக வைப்பதற்கு காரணம் தன் கணவனை இழந்துவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாம் அல்லது வெறும் தயக்கமாக கூட இருக்கலாம்.
சரி, இப்போது பெண்கள் தங்கள் கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

முன்னாள் காதல்
பெண்கள் தன் முன்னாள் காதலைப் பற்றி தன் கணவனிடம் சொன்னாலும், அதைப் பற்றி விரிவாக சொல்லமாட்டார்கள். உதாரணமாக, முன்னாள் காதலனுடன்முத்தங்களைப் பரிமாறியிருந்தால், அதைக் கூறமாட்டார்கள்.

படுக்கையறை
பொதுவாக பெண்களுக்கு படுக்கையறையில் தன் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்கும். இருப்பினும், அவர்கள் அதை தன் கணவனிடம் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். மாறாக ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பார்கள்.

ஆபாச படம்
பெண்கள் தாங்கள் ஆபாச படம் பார்த்திருந்தாலும், அதை தன் கணவனிடம் சொல்லமாட்டார்கள். அப்படி சொன்னால், எங்கு தன் கணவன் தன்னை தவறாக நினைப்பாரோ என்று மறைப்பார்கள்.

அளவுகடந்த நேசம்
அலுவலகத்தில் தன் கணவனை விட அழகான ஒருவன் தன்னுடன் வேலை செய்வது மட்டுமின்றி, அவருடன் நட்புறவு கொண்டிருந்தால், அதையும் பெண்கள் கணவனிடம் சொல்லிக் கொள்ளமாட்டார்கள். இதற்கு, எங்கு கணவன் தன்னை தவறாக எண்ணி, தன் மீது சந்தேகம் கொள்வாரோ என்ற அச்சம் தான் காரணம்.

ரகசியமான சேமிப்பு
திருமணமான பெண்களிடம் எப்போதுமே பணம் இருக்கும். ஏனெனில் அவர்கள் தன் கணவனுக்கு தெரியாமல் சிறு தொகையை சேமித்து வருவார்கள். அப்படி சேமிப்பதோடு, அதை பெண்கள் தன் பெற்றோருக்கு கொடுப்பார்கள். இப்படி தன் பணம் சேமிப்பதையும், தன் பெற்றோருக்கு பணம் கொடுப்பதையும் சில பெண்கள் கணவனிடம் மறைப்பார்கள்.


முன்னாள் காதலனின் நினைவு
திருமணத்திற்கு பின் தன் முன்னாள் காதலனின் நினைவு வந்தால், அதைப் பற்றியும் பெண்கள் தன் கணவனிடம் கூறிக் கொள்ளமாட்டார்கள்.
நடத்தை சந்தேகம்
சாதாரணமாக எடுத்த எடுப்பிலேயே பெண்கள் சந்தேகம் கொள்ளமாட்டார்கள். ஆனால் தன் கணவனை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டால், அவர்கள் மறைமுகமாக தன் கணவனின் நடத்தையை கவனிப்பார்கள். மேலும் அதைப் பற்றி தன் கணவனிடம் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.