மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வீடு ஒன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை இன்று புதன் கிழமை(06.01.2016) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை வெளி நாடு ஒன்றில் வசித்து வரும் நிலையில் குறித்த நபர் வெளி நாட்டில் இருந்து கடந்த 8 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து மன்னாரில் வசித்து வருவதாக ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரிய வருகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆங்கில பாடம் நீண்ட காலமாக கற்பித்து வந்த நிலையில் மன்னார் சின்னக்கடை பகுதியில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தனிமையாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையிலே குறித்த நபர் மர்மமான முறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குறித்த வீட்டில் இருந்து இன்று புதன் கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இறத்த வெள்ளத்தில் காணப்பட்டதை அவதானித்த அயலவர்கள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டதோடு, விசாரனைகளை மேற்கொண்டனர்.
பின் மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு விசேட பொலிஸ் தடவியல் நிபுனர்களும் வருகை தந்து தடையங்களை சோதனையிட்டனர். பின் சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டார்.
காலை 11 மணியளவில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதோடு விசாரனைகளையும் மேற்கொண்டதோடு சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்து சடலப் பரிசோதiனையினை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தொடர்பாக மன்னார் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.