துவாரகேஸ்வரனின் மனைவியை உடலுறவுக்கு அழைத்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள்: இவர்கள் தான் உண்மையான தமிழ் தேசிவாதிகள்!! – (வீடியோ)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தற்போதய வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆகியோர் தனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து (தனது மனைவியுடன் பாலியலுறவுக்கு விரும்புவதாக அழைப்பு ) விடுத்ததாக ஐ.தே.க யின் ஆதரவாளரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் துவாரகேஸ்வரன் ஊடகவியலாளர் இன்று ரில்கோ `விடுதில் நடந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தனது அரசியல் எதிரிகள் தன்மீது சேறுபூசவும் தனது குடும்பத்தை காவு கொள்ளவும் முற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தனது மனைவி முகநூல் பாலியல் தொழில் முகவராக தனது தொலைபேசி இலக்கத்தை பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வகையில் தனது தொலைபேசி இலக்கத்திற்கு பாலியல் தேவைக்கென 6700 அழைப்புக்கள் விடுக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முதல் தற்போதைய வடமாகாணசபை உறுப்பினர் வரை நள்ளிரவில் தொலைபேசி அழைப்பினை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
யாழில் இருந்து செயற்படும் தொலைக்காட்சியின் பணியாளர் ஒருவரே இவ்வாறு துவாரகேஸ்வரனின் மனைவி பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி இக்கும்பலிற்கு வழங்கியதாகவும் இது தொடர்பில் வினவிய போது தன்னை மிரட்டியதாக அவர் காவல்நிலையம் சென்று புகாரிட்டிருப்பதாகவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் மாநாட்டின் போது அவரது கைத்தொலைபேசிகளிற்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த பாலியல் சேவை கோரும் அழைப்புக்களை ஊடகவியலாளர்கள் செவிமடுக்க அனுமதித்திருந்தார்.
இதே வேளை முகப்புத்தகத்தில் துவாரகேஸ்வரனின் மனைவியைப் பற்றி தவறான தகவல்கள் வெளியாகியிருந்தால் நிச்சயம் அது தொடர்பாக தகவல்களை வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
எந்தவித குற்றமும் இழைக்காத சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற பெண்களை இவ்வாறு அவமதிப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!!
துவாரகேஸ்வரன் மீது ஏற்பட்ட வெறுப்பை அவரது மனைவி மீது காட்டுவது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. துவாரகேஸ்வரன் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் உண்மை எனின் அது தொடர்பாக அவரிடம் உள்ள ஆதாரங்களை வைத்து பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே வேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் தனது மனைவியைப் பாலியலுறவுக்கு அழைத்ததாக துவாரகேஸ்வரன் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இது உண்மையாயின் அந்தக் காமுகர்களின் பெயரை ஏன் அவர் வெளிவிடவில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாகத் தெரிவிப்பதாகக் கூறும் துவாரகேஸ்வரன் கூட்டமைப்பின் காமுகர்களின் பெயரை வெளிவிடாது உள்ளது பலத்த சந்தேகத்தை வரவழைப்பதாக ஊடகவியலாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
துவாரகேஸ்வரன் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் யுரியுப் தளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை நாம் இங்கு வெளியிட்டுள்ளோம். இதற்கும் எமது இணையத்தளத்திற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்பதைத் தெரிவித்துள்ளோம்.
–