அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 4 வயதான சிறுவனொருவனுடன் 25 இற்கும் அதிகமான தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
35 வயதான சாரா மூர் எனும் இந்த ஆசிரியை சமூக வலைத்தளமொன்றின் ஊடாக மேற்படி சிறுவனுடன் ஆபாசமாக உரையாடியிருந்ததையும் அச்சிறுவனுடன் 4 ஆணுறைகள் இருந்ததையும் அவனின் பெற்றோர் கண்டதையடுத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து மேற்படி ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இச்சிறுவன் மேற்படி ஆசிரியையின் பிள்ளைகளின் நண்பனாக விளங்கியவன் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையம், வாகனத் தரிப்பிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்குள்ளும் ஆசிரியையின் மகளின் அறையிலும் தன்னுடன் மேற்படி ஆசிரியை பாலியல் உறவில் ஈடுபட்டதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
தற்போது ஆசிரியப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள மேற்படி பெண்ணுக்கு எதிராக 10 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.