இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லியே அதிகூடிய சம்பளத்தைப் பெறவுள்ளார்.
இண்டியன் ப்றீமியர் லீக்கினால் அண்மையில் வெளியிடப்பட்ட வீரர்களுக்கான சம்பளப் பட்டியலில் விராத் கோஹ்லியின் சம்பளம் இந்திய நாணயப்படி 15 கோடி இந்திய ரூபா (32 கோடி இலங்கை ரூபா) ஆகும்.
இப் போட்டிகளில் நீண்டகாலமாக மிகவும் பெறுமதி வாய்ந்த வீரராக கருதப்பட்ட எம். எஸ். தோனியின் சம்பளம் 12 கோடியே 50 இலட்சம் இந்திய ரூபா (27 கோடி இலங்கை ரூபா) ஆகும்.
இலங்கை வீரர் லசித் மாலிங்கவின் சம்பளம் 8 கோடியே 10 இலட்சம் இந்திய ரூபா (17 கோடி இலங்கை ரூபா) ஆகும்.
இண்டியன் ப்றீமியர் லீக்கினால் வெளியிடப்பட்டுள்ள வீரர்களின் சம்பளம் இந்திய ரூபாய்களில் வருமாறு (தொகை இந்திய ரூபாவில்)
விராத் கோஹ்லி (றோயல் செலஞ்சர்ஸ்) 15 கோடி.
எம். எஸ். தோனி (பூனே) 12 கோடியே 50 இலட்சம்
ஷிக்கர் தவான் (சன்ரைஸ்) 12 கோடியே 50 இலட்சம்
ரோஹித் ஷர்மா (மும்பை) 11 கோடியே 50 இலட்சம்
கெளதம் கம்பீர் (கொல்கத்தா) 10 கோடி
கீரொன் பொலார்ட் (மும்பை) 9 கோடியே 70 இலட்சம்
ஏ. பி. டி வில்லியர்ஸ் (றோயல் செலஞ்சர்ஸ்) 9 கோடியே 50 இலட்சம்
சுரேஷ் ரெய்னா (ராஜ்கொட்) 9 கோடியே 50 இலட்சம்
கிறிஸ் கேல் (றோயல் செலஞ்சர்ஸ்) 8 கோடியே 40 இலட்சம்
லசித் மாலிங்க (மும்பை) 8 கோடியே 10 இலட்சம்
ஹர்பஜன் சிங் (மும்பை) 8 கோடி.
அஜின்கியா ரஹானே 8 கோடி
(1 இந்திய ரூபாவின் பெறுமதி சுமார் 2.17 இலங்கை ரூபா ஆகும்.)