உடலில் கற்பாறையைக் கட்டிக் கொண்டு மனைவியின் தலையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்த கணவன் ஆஸ்திரியாவில் பரபரப்புச் சம்பவம்
மனைவியைப் படுகொலை செய்து அவரது தலையைத் துண்டித்த பின்னர் மனைவியின் தலையுடன் ஏரியில் மூழ்கி கணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.
சல்ஸ்பேர்க் பிராந்தியத்திலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கமுன்டன் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி கணவர் தனது மனைவியை படுகொலை செய்து அவரது உடலைத் துண்டுகளாக வெட்டி இரு ஆடைப் பெட்டிகளில் திணித்த பின்னர் ஏரியில் அந்த இரு ஆடைப்பெட்டிகளை வீசி விட்டு தனது உடலில் கற்பாறையைக் கட்டிக்கொண்டு மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் ஏரியினுள் குதித்துள்ளதாக நம்பப்படுகிறது.
மேற்படி உடல் பாகங்களைக் கொண்ட ஆடைப் பெட்டிகளில் முதலாவது பெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்படடது.
இதனையடுத்து மேற்கொண்ட தேடுதலின் போது இரண்டாவது ஆடைப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து ஏரியின் அடியில் அந்த நபரது சடலமும் பெண்ணின் தலையும் கண்டுபிடிக்கப்பட்டன. கொல்லப்பட்ட பெண் 50 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆஸ் திரிய பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.